சங்கத்தின் உலகளாவிய வேலை ஆதரவு விரிவாக்கத்திற்கு நன்கொடைகள்
ஏசாயா 54:2, 3-ல் முன்னறிவித்த விதமாக, யெகோவாவின் தூய வணக்கம் பூமியெங்கும் தொடர்ந்து விரிவாகிக்கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், அங்கோலா, ஈக்குவிடோரியல் கினீ, எதியோபியா, காமரூன், டோகோ, மடகாஸ்கர், மலாவி, மொஸாம்பிக் போன்ற இடங்களில் ராஜ்ய நடவடிக்கைக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களிலும், அறுவடைக்கு முற்றி இருக்கும் மற்ற தேசங்களிலும் கிலியட் மிஷனரிகளும், ஊழியப் பயிற்சி பள்ளி பட்டதாரிகளும், பெத்தேல் குடும்பத்தினரும், மற்றவர்களும் நியமிப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.—மத். 9:37, 38.
தெரிந்த விதமாகவே, யெகோவாவின் அமைப்பில் உண்மை வணக்கத்தாரின் அதிகரிப்பானது, நூற்றுக்கணக்கான புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதைத் தேவைப்படுத்துகிறது. நாம் இங்கு இந்தியாவில் செய்வதைப்போல், மாநாட்டு மன்றங்களுக்கும், புதிய அல்லது விரிவாக்கப்பட்ட கிளையலுவலக கட்டடங்களுக்கும்கூட திட்டமிடுவது தேவையாய் உள்ளது. இந்தத் திட்டங்களுக்கும், உலகெங்கும் ராஜ்ய வேலை முன்னேறி செல்வதற்கும் தேவையான நிதி, சங்கத்தின் உலகளாவிய வேலைக்கான நன்கொடைகளிலிருந்தே பெரும் பகுதி உபயோகிக்கப்படுகிறது.
இந்த இரண்டு பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள படங்களும், திட்ட படங்களும்—இப்போது நடந்து கொண்டிருக்கும் கட்டடவேலையும், வெகு விரைவில் ஆரம்பமாகவிருக்கும் திட்டங்களும்—ஆப்பிரிக்காவில் சங்கம் எதை சாதித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களுக்கு ஓரளவு விவரத்தை அளிக்கின்றன. இங்கு இந்தியாவில், சுமார் 50 ஏக்கர் நிலம் வாங்குவதற்கும், அதில் சுமார் 400 பெத்தேல் குடும்பத்தினர் தங்குவதற்கும், வேலை செய்ய இடவசதிகளை அளிப்பதற்கும், கூடவே, சமையல் அறை, சாப்பாட்டு அறை, சலவையகம், பராமரிப்பு தொழிற்கூடங்கள் போன்றவற்றிற்குக் கட்டடங்களைக் கட்டுவதற்கும் ஆளும் குழு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில், இவ்வருடம் ஏப்ரல் 2-ம் தேதி, நினைவு ஆசரிப்புக்கு வருகைதந்தோர் 41,193 பேர்; இது அந்த மாதத்தில் அறிக்கை செய்யப்பட்ட பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம்! வருகைதந்த இவர்களில் பலர் விரைவில் யெகோவாவின் தூய வணக்கத்தில் நம்மோடு சேர்ந்துகொள்ளும்படி நாம் ஜெபிக்கலாம், இது அநேக சபைகளையும், அநேக ராஜ்ய மன்றங்களின் தேவையையும் அர்த்தப்படுத்துகிறது. உண்மை வணக்கத்திற்கு காரணியாய் இருக்கும் ஒன்றை, பொருள் சம்பந்தமாக ஆதரிக்கக்கூடிய எத்தகைய ஒரு சிலாக்கியத்தை கொண்டுள்ளோம் என்பது நம்மை கவருகிறது. சபைகள் இதனைச் செய்யும் ஒரு வழியானது, ராஜ்ய மன்ற உதவி ஏற்பாட்டிற்கு நிதிகளை அனுப்புவதன் மூலமாகும்.—லூக். 16:9; 1 தீ. 6:18.
[பக்கம் 3-ன் படம்]
தென் ஆப்பிரிக்க, கவாஜூலூவில், ராஜ்ய மன்றம் 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது
[பக்கம் 3-ன் படம்]
நைஜீரியாவில் சிக்கனமாகக் கட்டப்பட்ட ராஜ்ய மன்றம்
[பக்கம் 3-ன் படம்]
மொஸாம்பிக்கில் 1,500 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மன்றம், 1996 இறுதிக்குள் கட்டி முடிக்கப்படவிருக்கிறது
[பக்கம் 3-ன் படம்]
1996 இலையுதிர் காலத்தில், மொஸாம்பிக் கிளை அலுவலக கட்டடங்கள் குடிபுக தயாராகும் நிலையில் இருக்கின்றன
[பக்கம் 3-ன் படம்]
சியர்ரா லியோன் கிளை அலுவலகம், இந்தக் கோடை காலத்திற்குள் கட்டி முடிக்க அட்டவணையிடப்பட்டுள்ளது
[பக்கம் 4-ன் படம்]
மாரிஷியஸில் கூரையோடு, பக்கச்சுவர் இன்றி முடிக்கப்பட்ட மாநாட்டு மன்றமும், அதோடுகூட கிளை அலுவலக கட்டடங்களும், 1997 வசந்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்படவிருக்கின்றன
[பக்கம் 4-ன் படம்]
கட்டடவேலை நடந்துகொண்டிருக்கும் ஜிம்பாப்வி கிளை அலுவலகம்
[பக்கம் 4-ன் படம்]
செனிகலில் உள்ள திறந்தவெளி மாநாட்டு மன்றமும், கட்டடவேலை நடந்துகொண்டிருக்கும் புதிய கிளை அலுவலகமும்
[பக்கம் 4-ன் படம்]
தலைநகர் நைரோபியில், கென்யாவின் புதிய கிளை அலுவலகம்
[பக்கம் 4-ன் படம்]
விரைவில் முடிக்கப்படவிருக்கும், மடகாஸ்கர் கிளை அலுவலகம்
[பக்கம் 4-ன் படம்]
மலாவிக்காக முன் திட்டமிடப்பட்டிருக்கும் கிளை அலுவலக கட்டடங்கள்