ஜனவரி ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். உங்கள் நாட்டிற்கான மற்றும் உள்ளூர் சபைக்கான செப்டம்பர் வெளி ஊழிய அறிக்கையின் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.
20 நிமி: மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை (Advance Medical Directive/Release card) புதுப்பிப்பதற்கான நேரம். அந்த அட்டையை முழுமையாக பூர்த்திசெய்து அதை எல்லா சமயங்களிலும் கொண்டுசெல்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி தகுதிவாய்ந்த மூப்பர் கலந்தாலோசிக்கிறார். எமெர்ஜென்ஸி சமயத்தில் நீங்கள் உங்கள் சார்பாக பேசமுடியாமலிருந்தால், இந்த ஆவணம் உங்கள் சார்பாக பேசுகிறது. (நீதிமொழிகள் 22:3-ஐ ஒப்பிடுக.) இரத்தத்தை மறுப்பதன்பேரில் தற்போதைய உறுதிமொழியை வழங்குவதற்கு ஒவ்வொரு வருடமும் ஒரு புதிய அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும், ஏனென்றால் ஒரு வருடத்திற்கு முந்திய ஆவணங்கள் ஒரு நபரின் தற்போதைய நம்பிக்கையைப் பிரதிபலிக்காது என்பதாக சில டாக்டர்களும் மற்றவர்களும் உரிமை பாராட்டியிருக்கிறார்கள். கூட்டம் முடிந்த பிறகு, முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவரும் லிட்ரச்சர் கெளண்டரிலிருந்து மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை வாங்கிக்கொள்ள வேண்டும், முழுக்காட்டப்படாத வயதுவராத பிள்ளைகளையுடையவர்கள் ஒவ்வொரு பிள்ளைக்காகவும் அடையாள அட்டையை (Identity Card) வாங்கிக்கொள்ள வேண்டும். அன்றிரவே அட்டைகளைப் பூர்த்தி செய்யக்கூடாது என்பதை விளக்குங்கள். அவற்றை வீட்டில் சென்று கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் கையொப்பம் போடக்கூடாது. எல்லா அட்டைகளுக்கும் கையொப்பமிடுவது, சாட்சி கையொப்பமிடுவது, தேதியிடுவது ஆகியவை அடுத்த புத்தகப் படிப்பின்போது, புத்தகப் படிப்பு நடத்துனரின் கண்காணிப்பின்கீழ் செய்யப்படும். தன்னுடைய தொகுதிக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒரு அட்டையையும் தேவையான உதவியையும் பெற்றுக்கொண்டிருப்பதை பார்ப்பதற்கு நடத்துனர் செக்பண்ணுவார். அட்டையை வைத்திருப்பவர் அந்த ஆவணத்தில் கையொப்பமிடுவதை சாட்சி கையொப்பம் போடுபவர்கள் உண்மையிலேயே பார்க்க வேண்டும். அந்தச் சமயத்தில் வரத்தவறுகிற எவரும், முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவரும் தங்கள் அட்டைகள் பூர்த்திசெய்து கையொப்பமிடும்வரை அடுத்த ஊழியக் கூட்டத்தில் நடத்துனர்களால்/மூப்பர்களால் உதவிசெய்யப்படுவார்கள். (அக்டோபர் 15, 1991 கடிதத்தை மறுபார்வை செய்யுங்கள்.) முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள், அவர்கள் விரும்பினால், தங்கள் சொந்த சூழ்நிலைமைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இந்த அட்டையிலுள்ள வார்த்தை அமைப்புகளை மாற்றியமைத்துக்கொள்வதன் மூலம், தங்களுக்காகவும் தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் தங்களுடைய சொந்த கோரிக்கையை எழுதலாம். இந்த இன்றியமையாத விவரங்களைக் கவனித்துக்கொள்வதில் உட்பார்வையை பிரயோகிப்பது யெகோவாவிடமிருந்து நன்மையை வருவிக்கும்.—நீதி. 16:20, NW.
15 நிமி: “மற்றவர்களுக்குப் போதிக்க தகுதியுடையவர்களாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் ஆகுதல்.” (பாராக்கள் 1-6) யெகோவாவின் உதவியுடன் நாம் மற்றவர்களுக்கு திறம்பட்ட முறையில் போதிக்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கையுடன் இருப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி, பாரா 1-2-ன் பேரில் சுருக்கமான குறிப்பை அளியுங்கள். பிரஸ்தாபியையும் வீட்டுக்காரரையும் கொண்ட இரண்டு ஜோடியை வைத்து, 3-6 பாராக்களிலுள்ள பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள்; எவ்வாறு ஆரம்பத்தில் சந்தித்து அடுத்து ஒரு மறுசந்திப்பை செய்வது என்பதை ஒவ்வொரு ஜோடியும் காண்பிப்பார்கள்.
பாட்டு 14, முடிவு ஜெபம்.
ஜனவரி 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. தற்போதைய பத்திரிகைகளிலுள்ள சில பேச்சுக் குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுங்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு மக்களை அணுகும்போது நம்மை எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பதன் பேரில் ஆலோசனை கொடுங்கள். கடைகளில், தெருவில், பூங்காவில், பொது போக்குவரத்துகளில், இன்னும் பிற அம்சங்களில் மற்றவர்களிடம் பேசும்போது முதலில் என்ன வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை சபையார் கூறும்படி கேளுங்கள்.
10 நிமி: “மற்றவர்களுக்குப் போதிக்க தகுதியுடையவர்களாகவும் ஆயத்தமுள்ளவர்களாகவும் ஆகுதல்.” (பாராக்கள் 7-9) மறுசந்திப்புகள் செய்வதைப் பற்றி 1995 வருடாந்தரப் புத்தகம், பக்கம் 45-ல் காணப்படுகிற அனுபவத்தைக் கூறுங்கள்; அக்கறை காண்பித்த எவரையும் மீண்டும் சந்திப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுங்கள். 7-8 பாராக்களிலுள்ள பிரசங்கங்களை அனுபவம்வாய்ந்த பிரஸ்தாபி நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். முதலில் வேறுசில பிரசுரங்களை அளித்திருந்தபோதிலும், முடிவில் அறிவு புத்தகத்திலிருந்து படிப்புகளை நடத்துவதன் பேரில் நம்முடைய முயற்சிகளை நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். மறுசந்திப்புகள் செய்வதற்காக வருகிற வாரத்தின்போது ஓரளவு நேரத்தை ஒதுக்கிவைப்பதற்கு திட்டமிடும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி: “நம் கடவுளுடைய வீட்டை அசட்டை செய்யக் கூடாது.” உட்சேர்க்கையை கேள்வி-பதிலுடன் கலந்தாலோசித்தல். உங்கள் சபைக்குப் பொருத்துங்கள். உங்கள் சபையினர் ஒரு சொந்த மன்றத்தை கொண்டிருக்கும்படியான ஆர்வத்தை வளருங்கள்; ஏற்கெனவே உங்களுக்கு இருந்தால், அதை நன்கு பராமரித்துக் காத்துக்கொள்ளுங்கள். கட்டுமான திட்டம் நடந்துகொண்டிருந்தால் அல்லது உங்கள் சபை அதை சமீபத்தில் கட்டி முடித்திருந்தால், சகோதரர்கள் கொடுத்த பொருள் சம்பந்தமான ஆதரவுக்காகவும் மற்ற உதவிக்காகவும் அவர்களுக்குப் பாராட்டு தெரிவியுங்கள். உங்களுடைய கூட்டம் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள ‘கட்டட நிதி’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பெட்டிக்கு கவனத்தைத் திருப்பி, அந்தப் பெட்டியிலிருந்து பெறப்படும் நிதி, நாடுமுழுவதிலுமுள்ள சபைகள் தங்களுடைய சொந்த ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு உதவிசெய்யும்படி சொஸைட்டியின் தேசிய ராஜ்ய மன்ற நிதிக்கு (National Kingdom Hall Fund) ஒவ்வொரு மாதமும் அனுப்பப்படுகிறது என்பதை தெரியப்படுத்துங்கள். (ஆகஸ்ட் 21, 1995 தேதியிட்ட சொஸைட்டியின் கடிதத்தைக் காண்க.) 17-வது பாராவை வாசியுங்கள்.
பாட்டு 15, முடிவு ஜெபம்.
ஜனவரி 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
18 நிமி: “சகலவித ஜனங்களும் இரட்சிக்கப்படுவார்கள்.” கேள்விகளும் பதில்களும். வித்தியாசப்பட்ட வாழ்க்கை சூழலிலிருந்து வருகிற மக்களிடமிருந்து எவ்வாறு ஒரு சாதகமான பிரதிபலிப்பை பெற்றார்கள் என்பதை காண்பிக்கிற சில அனுபவங்களை சுருக்கமாக விவரிக்கும்படி சபையாரை கேளுங்கள்.
17 நிமி: சபையின் தேவைகள். அல்லது காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1996, பக்கங்கள் 27-9, “எப்போதும் உங்கள் பாரத்தை யெகோவாவின்மேல் போட்டுவிடுங்கள்” என்ற கட்டுரையின் அடிப்படையில் கொடுக்கப்படும் உற்சாகமான பேச்சு.
பாட்டு 23, முடிவு ஜெபம்.
ஜனவரி 27-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்தல், இது செயலாளரால் கையாளப்படும்.
15 நிமி: “நாம் ‘திருவசனத்தைப் பிரசங்கிக்கிறோம்.’” கேள்விகளும் பதில்களும். கடவுளுடைய வார்த்தையின் மதிப்பை நாம் ஏன் ஆழ்ந்த விதத்தில் போற்றி, அதை நம்முடைய ஊழியத்தில் எல்லா சந்தர்ப்பத்திலும் பயன்படுத்துகிறோம் என்பதைக் காண்பிக்கும் சில குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.—மார்ச் 22, 1984, ஆங்கில விழித்தெழு!, பக்கங்கள் 9-11-ஐக் காண்க.
15 நிமி: பிப்ரவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். (1) மனதைக் கவரும் அதிகாரத்தின் தலைப்புகள், (2) வண்ணமிக்க விளக்கப்படங்கள், (3) போதனை பெட்டிகளும் அட்டவணைகளும், (4) சிந்தையைத் தூண்டும் அச்சிடப்பட்ட கேள்விகள், இது போன்ற அந்தப் புத்தகத்திலுள்ள அக்கறையூட்டும் அம்சங்களைச் சுட்டிக்காண்பியுங்கள். முந்திய கூட்டத்தின் பாகத்திற்கு இசைவாக, நன்கு தெரிந்தெடுக்கப்பட்ட வசனத்தின் பயனைக் குறித்து அந்தப் பிரசங்கத்தில் உற்சாகப்படுத்துங்கள். ஓரிரண்டு பிரசங்கங்களை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். இந்த வாரத்தில் பயன்படுத்துவதற்காக புத்தகங்களை எடுத்துச் செல்லும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 26, முடிவு ஜெபம்.