பிப்ரவரி மாதத்துக்கான ஊழிய கூட்டங்கள்
பிப்ரவரி 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி” சபையாரோடு கலந்தாராய்தல்.
15 நிமி: “மீண்டும் ஒருபோதும் செய்யப்படாத வேலையில் பங்கெடுங்கள்.” கேள்வி பதில்கள். நேரம் அனுமதிப்பதைப் பொருத்து, அறிவிப்போர் புத்தகத்தில் பக்கங்கள் 714-15 வரையுள்ள “விழிப்புடன் இருத்தல்—எப்படி?” என்ற பாகத்திலிருந்து குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “அவசர உணர்வுடன் நற்செய்தியை அளித்தல்.” (பாராக்கள் 1-5) முதலாம் பாராவின்மீது சுருக்கமான குறிப்புகளைக் கூறிவிட்டு, அந்தப் பகுதியைக் கையாளும் சகோதரர் பாராக்கள் 2-5-ஐ இரண்டோ அல்லது மூன்றோ பிரஸ்தாபிகளோடு சேர்ந்து கலந்துரையாடுகிறார். ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகளில் உள்ள முக்கிய குறிப்புகளை அவர்கள் மறுபார்வை செய்கிறார்கள். மேலும் இந்த அளிப்புகளும் இதைப்போன்ற மற்ற அளிப்புகளும் உள்ளூர் பிராந்தியத்திற்கு ஏன் மிகச் சிறந்தவையாக இருக்கும் என்பதன் பேரில் குறிப்பு சொல்கின்றனர். பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் சுழற்சிமுறையில் இந்த அளிப்புகளை கொடுத்து பழகுகிறார்கள். இந்தப் பாகத்தைக் கையாளும் சகோதரர் பாராட்டுதலைத் தெரிவித்து, அவற்றை இன்னும் திறம்பட்ட முறையில் கொடுப்பதற்கான வழிகளைச் சொல்லுகிறார். பின்னர், படிப்புகளைத் தொடங்குவதற்கான இலக்கை அடைவதற்காக என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று சபையாரைக் கேட்கிறார். அறிவு புத்தகத்தில், இறுதியில் ஒரு படிப்பைத் தொடங்குவது எவ்வாறு என்பதன்பேரில் திட்டவட்டமான கருத்துக்களை கொடுக்கிறார்.
பாட்டு 34, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 10-ல் தொடங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: “அவசர உணர்வுடன் நற்செய்தியை அளித்தல்.” (பாராக்கள் 6-8) பாராக்கள் 6-7-ல் உள்ள அளிப்புகளை நடித்துக்காட்ட செய்யுங்கள். அக்கறை காட்டுவோரை மீண்டும் சென்று சந்திப்பதற்கான தேவையை அழுத்திக் காட்டுங்கள்.
30 நிமி: “தேவை—4,000 துணைப் பயனியர்கள்.” ஊழிய கண்காணியால் கேள்வி பதில் முறையில் கையாளப்படுகிறது. பக்கம் 3-ல் உள்ள பெட்டியைச் சிறப்பித்துக் காண்பியுங்கள். பக்கம் 6-ல் உள்ள மாதிரி அட்டவணைகளை மறுபார்வை செய்யுங்கள். முழுக்காட்டப்பட்ட ஒவ்வொரு பிரஸ்தாபியும் தங்களால் ஒரு மாதத்திற்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களுக்கோ துணைப் பயனியர் செய்யமுடியுமா என்று தனிப்பட்ட வகையிலும் ஜெபசிந்தையோடும் ஆலோசிக்க வேண்டும். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் ஒவ்வொரு மாதமும் மணிநேரத்திற்கான தங்களுடைய சொந்த இலக்கை வைப்பதன்மூலம் ஊழியத்தில் தங்களுடைய பங்கை அதிகரிக்கலாம்.
பாட்டு 43, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 17-ல் தொடங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். புதிய பத்திரிகைகளிலிருந்து, இந்த வாரத்தில் ஊழியத்தில் பயன்படுத்துவதற்கான ஆர்வத்தைத் தூண்டும் பேச்சு விஷயங்களை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
13 நிமி: “நினைவு ஆசரிப்பு—அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி!” கேள்வி பதில்கள். துணைப் பயனியர் சேவை செய்வதன்மூலம் மார்ச் மாதம் முழுவதையும் ஒரு விசேஷ மாதமாக ஆக்குவதற்கு உற்சாகமளியுங்கள். நினைவு ஆசரிப்புக்கான அழைப்பிதழின் உபயோகத்தை முக்கியப்படுத்திக் கூறுங்கள்.
22 நிமி: வீட்டுப் பைபிள் படிப்புகளைத் தொடங்குதல். சமீப மாதங்களில், லட்சக்கணக்கான பவுண்ட் புத்தகங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இன்னுமதிகம் வீட்டுப் பைபிள் படிப்புகளைத் தொடங்குவதற்கு இது ஒரு அடிப்படையாக இருக்கிறது. புத்தகங்களையும் மற்ற பிரசுரங்களையும் அளிப்பதன்மூலம் உள்ளூரில் என்ன செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுபார்வை செய்யுங்கள். அக்கறை காண்பிப்பவர்கள் எல்லாரையும் மீண்டும் போய் சந்திக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். புதிய வீட்டு பைபிள் படிப்பு தொடங்குவதற்கு தங்களுடைய பாகத்தில் என்ன முயற்சி தேவைப்பட்டது என்பதை அநேக பிரஸ்தாபிகள் திட்டவட்டமாக சொல்லும்படி செய்யுங்கள். சீஷர்களை உருவாக்குவது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளையின் பிரிக்கமுடியாத பாகம் என்பதை அழுத்திக்காட்டுங்கள். (மத். 28:19, 20) ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை நாம் பின்பற்ற முயற்சித்தால் இதை திறம்பட்டவகையில் செய்துமுடிக்க முடியும்.
பாட்டு 47, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 24-ல் தொடங்கும் வாரம்
18 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச்சில் துணைப் பயனியர் சேவை செய்யும் அனைவருடைய பெயர்களையும் வாசியுங்கள். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு இன்னும் சமயமிருக்கிறது என்பதை விளக்குங்கள். மார்ச் 1-ம் தேதி, சனிக்கிழமை, வெளி ஊழியத்தில் முழுமையாக பங்கு கொள்ளுமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். அந்த மாதத்தில் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களுக்கு உள்ளூர் சபையில் செய்யப்படுகிற கூடுதல் ஏற்பாடுகளை தெரியப்படுத்துங்கள். “ஏற்ற சமயத்தில் உதவி.” கேள்வி பதில்கள் முறையில் கையாளுங்கள். புதிய பிரசுரங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் மிகவும் பிரயோஜனமான முக்கிய குறிப்புகளை குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
12 நிமி: “உங்கள் உறவினர்களைப் பற்றி என்ன?” கணவனும் மனைவியும் இந்தக் கட்டுரையை சேர்ந்து கலந்தாராய்ந்து, விசுவாசத்தில் இல்லாத உறவினர்களிடம் நற்செய்தியை சொல்வதற்கு எவ்வாறு அணுகுவது என்பது குறித்து தீர்மானிக்கிறார்கள்.—பிப்ரவரி 15, 1990, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பக்கங்கள் 25-7-ஐப் பார்க்கவும்.
15 நிமி: மார்ச் பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள்—குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். நவீனகால சமுதாயத்தில் ஏற்படும் குடும்ப முறிவுகளுக்கான காரணங்களை சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். (ஜனவரி 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 4-7-ஐப் பார்க்கவும்.) அந்தப் புத்தகத்தின் 3-ம் பக்கத்திலுள்ள பொருளடக்கத்தை மறுபார்வை செய்யுங்கள். ஒரு பிரசங்க அளிப்புக்கு அடிப்படையாக அமையும் அதிகாரங்களை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி சபையாரிடம் கூறுங்கள். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் இறுதியில் தோன்றும் உதவியளிக்கும் போதனைப் பெட்டியைக் குறிப்பிட்டுக் காட்டுங்கள். இந்தப் புத்தகத்தை அளிப்பது எவ்வாறு என்பதை திறமைசாலியான பிரஸ்தாபி ஒருவர் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். இந்த வார இறுதியில் பயன்படுத்துவதற்கு பிரதிகளைப் பெற்றுச் செல்லும்படி அனைவருக்கும் ஞாபகப்படுத்துங்கள். மேலும், உள்ளூர் பிராந்தியத்தில் மக்கள் எந்தெந்த மொழிகளை பேசுகிறார்களோ அந்த எல்லா மொழிகளிலும் பிரதிகளைக் கொண்டுபோகும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 48, முடிவு ஜெபம்.