அனுபவமில்லாதோர் புரிந்துகொள்ள உதவுங்கள்
1 சீஷராக்கும் வேலையின் மூலம், கடவுள் அவர்களிடம் எதைத் தேவைப்படுத்துகிறார் என்பதை மற்றவர்களுக்கு நாம் போதிக்கிறோம். (மத். 28:19, 20) அதைச் செய்வதற்கு, 50 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் உலகமுழுவதும் ஒரு பிரமாண்டமான முயற்சி செய்யப்பட்டுவருகிறது. செலவழிக்கப்பட்ட நேரத்தாலோ அளிக்கப்பட்ட பிரசுரத்தாலோ தொடங்கப்பட்ட பைபிள் படிப்புகளாலோ வெற்றி அளவிடப்படுவதில்லை. மக்கள் புரிந்துகொண்டு தாங்கள் கற்றுக்கொண்ட காரியத்தின் பேரில் செயல்படுகையிலேயே நம்முடைய இலக்கை நாம் அடைகிறோம்.
2 ஆவிக்குரிய விதத்தில் மற்றவர்களுக்கு உதவிசெய்வது ‘அனுபவமில்லாதவர்களைப் புரிந்துகொள்கிறவர்களாக ஆக்குவதை’ உட்படுத்துகிறது. (சங். 119:130, NW) மக்கள் ‘அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும்போது’ மாத்திரமே அவர்களுடைய இருதயம் கவரப்படுகிறது மற்றும் தூண்டப்படுகிறார்கள். (மத். 15:10, NW) நம்முடைய வேலை விரிவடைந்து தீவிரமடைகையில், எளிமையாக பேசவும் போதிக்கவும் வேண்டியதன் அவசியத்தை அதிகமதிகமாய் மதித்துணர ஆரம்பிக்கிறோம். அதனால்தான் சங்கமானது கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பிரசுரித்திருக்கிறது. பைபிளிலுள்ள அடிப்படை போதனைகளைச் சிந்திக்கும் விரிவான படிப்புத் திட்டம் அதில் அடங்கியுள்ளது. பாடங்கள் சிறியவை, வார்த்தை அமைப்பு சிக்கலற்றவை, அறிவுரையும் புரிந்துகொள்ள எளிதானது, இவை அந்தச் சிற்றேட்டிற்கு அதிக மெருகூட்டுகின்றன.
3 ஏப்ரல், மே மாதங்களில் சந்தாக்களோடுகூட இந்தச் சிற்றேட்டையும் சிறப்பித்துக் காண்பிக்கலாம். முன்பு பிரசுரங்களை உடனடியாக ஏற்றுக்கொண்ட மக்களுக்கு இந்தச் சிற்றேட்டைக் கொண்டுசெல்லுங்கள். பிள்ளைகளுக்கும் நீங்கள் சரளமாய் பேசமுடியாத ஒரு மொழியைப் பேசுகிற மக்களுக்கும் வாசிப்பதில் அதிக திறமையில்லாதவர்களுக்கும் போதிப்பதில் இது முக்கியமாக பயனுள்ளதாய் இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
4 எளிய அணுகுமுறையைப் பயன்படுத்துங்கள்: தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிக்கும்போது, 2-வது பக்கத்தைக் குறிப்பிடுங்கள்; அங்கே, “இந்தச் சிற்றேடு ஒரு பைபிள் படிப்பு திட்டத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிறது” என விளக்குகிறது. ஏன் அந்த நபர் பைபிளைப் படிக்க வேண்டும் என்பதை காண்பிப்பதற்கு 3-வது பக்கத்திலுள்ள 3-வது பாராவை சுட்டிக்காட்டுங்கள். எளிய பைபிள் சத்தியங்களை வெளிப்படுத்துகிற அந்தப் பாடத் தலைப்புகள் சிலவற்றைப் பயன்படுத்தி அவருடைய ஆவலைத் தூண்டுங்கள். கற்பதை இந்தச் சிற்றேடு எவ்வாறு இன்பகரமாக்குகிறது என்பதை எடுத்துக் காண்பித்து, அவருக்கு தனிப்பட்ட உதவியளிக்க முன்வாருங்கள்.
5 முன்னேறிவரும் ஒரு படிப்பை நடத்துங்கள்: வெறுமனே படிப்புகளை நடத்துவதைக் காட்டிலும் அதிகத்தை செய்வதே நம்முடைய இலக்கு—உண்மை வணக்கத்தை உறுதியாக ஆதரிப்பவர்களாகும் சீஷர்களை உண்டுபண்ணவே நாம் விரும்புகிறோம். ஒருசில வாரங்களில் அந்தச் சிற்றேட்டை முடித்துவிடலாம், அதன் பிறகு அறிவு புத்தகத்தில் ஒரு படிப்புக்கு வழிநடத்த வேண்டும். (பக்கம் 31-ல் உள்ள அடிக்குறிப்பைக் காண்க.) ஆரம்பத்திலிருந்தே, யெகோவாவின் அமைப்பை அந்த மாணாக்கர் அடையாளம் கண்டுகொள்ள உதவுங்கள். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், 283-4 பக்கங்களைக் காண்க.) சபை கூட்டங்களின் மதிப்பை வலியுறுத்திக் காண்பித்து, அவற்றிற்கு ஆஜராவதானது எவ்வாறு உண்மை வணக்கத்தைக் கடைப்பிடிப்பது என்பதன் பேரில் ஒரு விரிவான புரிந்துகொள்ளுதலை அளிக்கிறது என விளக்குங்கள்.—எபி. 10:24, 25.
6 ஏப்ரல், மே மாதங்களில் இந்த விசேஷ வேலையில் ஒரு முழுமையான பங்கை வகிப்பது, ஜீவனுக்கு வழிநடத்துகிற ‘புரிந்துகொள்ளுதலைப் பெற’ உண்மை மனமுள்ளவர்களுக்கு உதவிசெய்வதனால் வரும் மகிழ்ச்சியை நமக்கு கொண்டுவருவது நிச்சயம்.—நீதி. 4:5, NW.