உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/97 பக். 2
  • ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • துணை தலைப்புகள்
  • ஏப்ரல் 7-ல் துவங்கும் வாரம்
  • ஏப்ரல் 14-ல் துவங்கும் வாரம்
  • ஏப்ரல் 21-ல் துவங்கும் வாரம்
  • ஏப்ரல் 28-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 4/97 பக். 2

ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்

ஏப்ரல் 7-ல் துவங்கும் வாரம்

பாட்டு 100

12 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும் பிரசுர அளிப்புகளும். தற்போதைய பத்திரிகைகளிலுள்ள பேச்சுப் பொருள்களைக் குறிப்பிடுங்கள்.

15 நிமி:“திரளானோர் சேர்க்கப்படுகிறார்கள்.” கேள்வி பதில்கள். ஆகஸ்ட் 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 12-17-ல் சிந்திக்கப்பட்டுள்ள முக்கிய ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்.

18 நிமி:“அனுபவமில்லாதோர் புரிந்துகொள்ள உதவுங்கள்.” கேள்வி பதில்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் முக்கிய அம்சங்களை மறுபார்வையிடுங்கள்: எளிமையான படிப்பு முறை, காலத்திற்கேற்ற கேள்விகள், மனதைக் கவரும் படங்கள், ஏராளமான பைபிள் மேற்கோள்கள். கடைசியில் அறிவு புத்தகத்திற்கு வழிநடத்துகிற படிப்புகளை ஆரம்பிக்கும் இலக்கை வலியுறுத்துங்கள். பாரா 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி, ஒரு படிப்பை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை திறமையுள்ள பிரஸ்தாபி ஒருவர் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். சபையிலுள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய இளம் பிள்ளைகளுடன் அந்தச் சிற்றேட்டைப் படிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 130, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 14-ல் துவங்கும் வாரம்

பாட்டு 107

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. நேரம் அனுமதிக்கிறபடி, சந்தாக்களை அளிப்பதையோ தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிப்பதையோ, அல்லது பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதையோ பற்றிய உள்ளூர் அனுபவங்களை சுருக்கமாய் விவரியுங்கள்.

15 நிமி:“நம்முடைய பெயருக்குப் பின்னுள்ள அமைப்புக்கு மாணாக்கரை வழிநடத்துதல்.” (பாராக்கள் 1-6) கேள்வி பதில்கள். 5-6 பாராக்களையும் இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வேதவசனங்களையும் வாசியுங்கள். யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) விடியோவை பார்த்த பைபிள் மாணாக்கர்களுடைய பிரதிபலிப்பைப் பற்றிய சபை அனுபவங்களை விவரியுங்கள்.

20 நிமி:“கடவுள் தேவைப்படுத்துகிறவற்றை மற்றவர்களுக்கு போதியுங்கள்.” 1-4 பாராக்களை சபையாருடன் கலந்தாலோசித்தல். நான்கு வித்தியாசமான பேச்சு அமைப்புகளை—அதாவது தெருவில், வீட்டில், வியாபார ஸ்தலத்தில், ஒரு பூங்காவில்—பயன்படுத்தி, 5-ம் பாராவிலுள்ள பிரசங்கத்தை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள், அன்று இரவு ராஜ்ய மன்றத்தைவிட்டு புறப்படுவதற்கு முன்பு வெளி ஊழியத்திற்காக சிற்றேடுகளையும் பத்திரிகைகளையும் எடுத்துச்செல்லும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள்.

பாட்டு 126, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 21-ல் துவங்கும் வாரம்

பாட்டு 113

15 நிமி:சபை அறிவிப்புகள். மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்காக விண்ணப்பிப்பதற்கு இன்னும் காலமிருக்கிறது என்பதை விளக்குங்கள். கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்யுங்கள், மேலும் ராஜ்ய மன்றத்திலுள்ள நூலகத்தைப் பூர்த்திசெய்வதற்கு குறிப்பிட்ட சில புத்தகங்கள் தேவைப்படுமானால் சபைக்குத் தெரியப்படுத்துங்கள்.

15 நிமி:“நம்முடைய பெயருக்குப் பின்னுள்ள அமைப்புக்கு மாணாக்கரை வழிநடத்துதல்.” (பாராக்கள் 7-14) கேள்வி பதில்கள். கூட்டங்களுக்கு ஆஜராவதன் அவசியத்தைப் பற்றி ஒரு மாணாக்கருடன் எவ்வாறு தயவோடு மனம்விட்டுப் பேசுவது என்பதைப் பற்றி திறமைவாய்ந்த போதகர் ஒருவர் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள்.

15 நிமி:நம்முடைய பிரசுரங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுதல். மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. (ஜனவரி 1996 நம் ராஜ்ய ஊழியம், பக்கங்கள் 3-5-ஐக் காண்க.) சபைகள் ஒவ்வொரு மாதமும் தாங்கள் உண்மையில் விநியோகிப்பதைவிட அநேக பத்திரிகைகளை அடிக்கடி ஆர்டர் செய்வதாக அறிக்கைகள் காண்பிக்கின்றன. 50 சதவீத அளிப்புகள் ஒருபோதும் அறிக்கை செய்யப்படுவதில்லை. (உள்ளூர் புள்ளிவிவரம் என்ன காட்டுகிறதென்பதை காண்பியுங்கள்.) இந்தப் பத்திரிகைகளுக்கு என்ன ஆகிறது? அநேக பத்திரிகைகள் அலமாரியில் அடைப்பட்டு கிடக்கின்றன அல்லது தூக்கியெறியப்படுகின்றன. இதை எப்படி தவிர்க்கலாம்? ஒவ்வொரு பிரஸ்தாபியும் தன்னுடைய தேவைகளைக் கவனமாய் மதிப்பிட்டு, தன்னால் அளிக்கமுடிவதை மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும். நாம் தொடர்புகொள்ளுகிற அனைவருக்கும் பத்திரிகைகளை அளிப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பழைய இதழ்கள் வீணாகிப்போகும்படி அனுமதிக்காதீர்கள். தவறாமல் பத்திரிகை ஊழியத்தில் பங்குகொள்ளுங்கள்.

பாட்டு 128, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 28-ல் துவங்கும் வாரம்

பாட்டு 121

15 நிமி:சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாதத்திற்கான ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். மே மாதத்தில் துணைப் பயனியர் சேவை செய்பவர்களுடைய பெயர்களை அறிவியுங்கள். சபையில் செய்யப்படுகிற வெளி ஊழியத்துக்கான கூட்டங்களைப் பற்றி கூடுதலான ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். அந்த மாதத்தில் கிடைக்கும் ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த நாள் முழுவதுமாக வெளி ஊழியம் செய்வதற்குத் திட்டமிடலாம். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் இலக்குடன், சிற்றேட்டை பெற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்திப்பதற்கு மே மாதத்தில் விசேஷ முயற்சி செய்யவேண்டும். நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கிற ஆட்களுடைய பெயரையும் விலாசத்தையும் சாதுரியமாய் கேட்கக்கூடிய வழிகளை சுருக்கமாக கூறுங்கள். முதலாவதாக நீங்கள் உங்களுடைய பெயரையும் விலாசத்தையும் கொடுத்து, அவர்களை தொடர்புகொள்வதற்கு ஃபோன் நம்பர் இருக்கிறதா என்று கேளுங்கள். பலன்தரத்தக்கதாய் இருந்திருக்கும் மற்ற ஆலோசனைகளை சபையார் சொல்லும்படி கேளுங்கள்.

15 நிமி:“அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்?” ஒழுங்கான பயனியர்கள் இரண்டு அல்லது மூன்று பேருடன் இந்தக் கட்டுரையை ஒரு மூப்பர் கலந்தாலோசிக்கிறார். (ஒழுங்கான பயனியர் இல்லையென்றால், அடிக்கடி துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்கிறவர்களைப் பயன்படுத்துங்கள்.) ஜனவரி 15, 1994, காவற்கோபுரத்தில் உள்ள, “பயனியர்கள் தங்களையே அளித்து ஆசீர்வாதங்களைப் பெறுகின்றனர்” என்ற கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏன் அவர் பயனியர் சேவையை எடுத்திருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் விளக்கும்படி கேளுங்கள். அவ்வாறு செய்வதற்காக அவர்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை காட்டுகிற அனுபவங்களை விவரிக்கும்படி அவர்களைக் கேளுங்கள்.

15 நிமி:சபையின் தேவைகள். சபையின் குறிப்பிட்ட தேவைகளின் பேரில் தகவலை அளிப்பதற்கு மூப்பர்கள் இந்தச் சமயத்தைப் பயன்படுத்தலாம்.

பாட்டு 129, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்