உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/97 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 4/97 பக். 7

அறிவிப்புகள்

◼ சபையுடன் கூட்டுறவுகொள்கிறவர்கள், தங்களுடைய தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கான புதிய மற்றும் புதுப்பிக்கப்படுகிற சந்தாக்கள் அனைத்தையும் சபையின் மூலமாகவே அனுப்ப வேண்டும்.

◼ அநேக சபை அறிக்கை (S-1) அட்டைகள் ஒவ்வொரு மாதமும் சங்கத்திற்கு காலதாமதமாய் வருவதால், இதோ சில நினைப்பூட்டுதல்கள்: (1) உங்கள் சபையின் S-1 அட்டையை முடிந்தவரை அந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே, ஆனால் அந்த மாதத்தின் ஆறாம் தேதிக்கு முன்பு, தயவுசெய்து தபால் மூலமாகவோ ஃபாக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள். (2) பிரஸ்தாபிகள் தங்களுடைய அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள், ஆனால் பிரஸ்தாபிகளிடமிருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்த மாதத்தின் ஆறாம் தேதிக்கு மேல் காத்திருக்க வேண்டாம், அறிக்கைகள் அடுத்த மாதத்தில் சேர்த்துக்கொள்ளப்படலாம்; அதாவது அறிக்கை செய்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையையும் ஊழிய மணிநேரத்தையும் சங்கத்திற்கு அனுப்பும்போது, போனமாதம் பிந்தி வந்த ஊழிய மணிநேரமும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். (3) அறிக்கைகள் பிந்தி வந்தால் அல்லது S-1 அனுப்பப்பட்ட பிறகு பிழைகள் கவனத்திற்கு வந்தால், சேர்க்கப்பட்டவற்றையோ திருத்தங்களையோ சங்கத்திற்கு அனுப்ப வேண்டாம். சேர்க்கப்பட்டவற்றையோ அல்லது மாற்றங்களையோ உங்களுடைய அடுத்த மாத சபை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள். (4) குறிப்பிட்ட ஒரு மாதத்திற்காக டியூப்ளிகேட் ரிப்போர்ட் ஒன்றை எங்களுக்கு அனுப்பும்படி கேட்டு, உங்களுடைய மாதாந்தர ஸ்டேட்மெண்டோடு ஒரு மெமோரண்டம் உங்களுக்கு வந்தால், உடனடியாக அதன்படி செய்யுங்கள். நீங்கள் உங்களுடைய சபை அறிக்கையை அனுப்பிவிட்டதால், சீக்கிரமோ பிந்தியோ போய்ச்சேர்ந்துவிடும் என்று ஊகித்துக்கொள்ளாதீர்கள். அநேக அறிக்கைகள் தபாலில் தொலைந்துவிடுகின்றன, ஆனால் சபைகள் தங்களுடைய டியூப்ளிகேட்டை அனுப்புவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு முறை நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. டியூப்ளிகேட்டுடன் எந்த விளக்கமும் எழுதவேண்டிய அவசியமில்லை, வெறுமனே டியூப்ளிகேட்டை மட்டும் உடனடியாக அனுப்புங்கள்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? துண்டுப்பிரதி எண் 19 —பஞ்சாபி

உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இண்டெக்ஸ் 1986-1995 —ஆங்கிலம்

நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் (மறுபதிப்பு 1997) —தமிழ்

இந்தப் பத்து வருட இண்டெக்ஸ், பயனியர்களுக்கு 95.00 ரூபாய்; பிரஸ்தாபிகளுக்கும் பொதுமக்களுக்கும் 130.00 ரூபாய்.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —சிந்தி, உருது

◼ மீண்டும் கிடைக்கக்கூடிய பிரதிகள்:

அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? —இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு

உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—அதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்

—ஆங்கிலம்

உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (பெரிய மற்றும் சிறிய அளவுகளில்) —ஆங்கிலம்

உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் —ஆங்கிலம்

எம்ஃபட்டிக் டயக்ளாட் —ஆங்கிலம்

ஓரக்குறிப்புகளுடன் புதிய உலக மொழிபெயர்ப்பு (Rbi8) —ஆங்கிலம்

கன்கார்டன்ஸுடன் ஆதரைஸ்டு வர்ஷன் (bi10)

—ஆங்கிலம்

சகல தேசத்தாருக்கும் நற்செய்தி —ஆங்கிலம்

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு காம்ப்ரிஹென்ஸிவ் கன்கார்டன்ஸ்

—ஆங்கிலம்

மகிழ்ச்சி—அதை எவ்வாறு கண்டுபிடிப்பது?

—ஆங்கிலம்

யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (பெரிய அளவு மற்றும் பெரிய எழுத்துப் பதிப்பு பாட்டுப் புத்தகம்) —ஆங்கிலம்

வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள்

—ஆங்கிலம்

‘வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது’ —ஆங்கிலம்

வேதாகமத்தின் பேரில் உட்பார்வை —ஆங்கிலம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்