தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 6 முதல் ஏப்ரல் 21, 1997 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. பெருமை, நம்முடைய தனிப்பட்ட தவறுகளை ஒப்புக்கொண்டு அறிவுரையை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு தடையாக ஆகலாம். [rs-TL பக். 391 பாரா 2]
2. இயேசு மரித்து கிரயபலியை செலுத்தியது வரை பூமியிலுள்ள எந்தவொரு அதிகாரமும் பாவங்களை மன்னிக்க முடியவில்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 4/15 பக். 29-ஐக் காண்க.]
3. சகரியா 9:2-4-ன் நிறைவேற்றமாக, நேபுகாத்நேச்சாரால் தீரு பூண்டோடு அழிக்கப்பட்டது. [si பக். 169 பாரா 4]
4. முழுக்காட்டுதல் என்பது இரட்சிப்புக்கு ஓர் உத்தரவாதம். [uw-TL பக். 100 பாரா 12]
5. வானிலை ஆராய்ச்சியாளர்கள் முன்னறிவிக்கிற வானிலைக்கு அவர்கள் குற்றஞ்சாட்டப்பட முடியாதது போலவே, நம்முடைய நாளுக்கு முன்னறிவிக்கப்பட்ட “இயற்கை பேரழிவுகளுக்கு” கடவுளை குற்றஞ்சாட்ட முடியாது. [rs-TL பக். 398 பாரா. 2-4]
6. அபூரண மனிதர்களுடைய எல்லா பாவங்களும் கிரயபலியினால் மன்னிக்கப்படுகின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 12/15 பக். 29-ஐக் காண்க.]
7. மத்தேயு 25:31-46-ல் குறிப்பிடப்பட்டுள்ள நித்திய அழிவை அனுபவிக்கும் ‘வெள்ளாடுகளில்,’ மகா பாபிலோனின் சுறுசுறுப்பான அங்கத்தினர்களும் அவர்களுடைய மதத் தலைவர்களும் அடங்குவர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 10/15 பக். 26 பாரா. 13-15-ஐக் காண்க.]
8. வேதபாரகரும் பரிசேயரும், ஒரு தொகுதியாக, சர்ப்பத்தினுடைய வித்தின் பாகமானவர்கள் என்பதை மத்தேயு 23:33-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 6/1 பக். 11 பாரா 11-ஐக் காண்க.]
9. மற்றவர்களை மன்னிப்பது நம்முடைய பாவங்கள் கடவுளால் மன்னிக்கப்படுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 9/15 பக். 7-ஐக் காண்க.]
10. இயேசுவின் மரணத்திற்குள்ளான முழுக்காட்டுதல் பொ.ச. 29-ல் ஆரம்பமாகி, அவர் உண்மையில் மரித்து உயிர்த்தெழுப்பப்பட்டது வரை முடிவடையவில்லை. [uw-TL பக். 97 பாரா 6]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. இந்தக் காலத்தில் மனிதர்கள் எந்த வழிகளில் இயேசுவினுடைய பலியிலிருந்து நன்மையடைகிறார்கள்? [kl-TL பக். 68-9 பாரா. 17-19]
12. இயேசு கிறிஸ்து வகிக்கும் என்ன இரண்டு பாகங்கள் சகரியா 6:12, 13-ல் விவரிக்கப்பட்டுள்ளன? [si பக். 172 பாரா 25]
13. ராஜ்ய சேவையில் இன்னும் அதிகத்தை மற்றவர்கள் செய்ய முடியும் என்று நாம் நினைக்கிறவர்களைக் குறைகூறுவதற்குப் பதிலாக, தனிப்பட்டவர்களாக நாம் என்ன செய்ய வேண்டும்? (கலா. 6:4) [uw-TL பக். 93 பாரா 13]
14. இனிமை என்றழைக்கப்படும் கோலை சகரியா முறிப்பது எதை அர்த்தப்படுத்தியது? (சக. 11:7-11, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 6/1 பக். 32-ஐக் காண்க.]
15. எவ்வாறு எல்லா மனிதருக்கும் பாவம் பரவியது? [kl-TL பக். 58 பாரா 13]
16. மல்கியா 4:5-ன் நிறைவேற்றமாக, என்ன அர்த்தத்தில் “எலியா தீர்க்கதரிசி” முதல் நூற்றாண்டில் தோன்றினார்? [si பக். 174 பாரா 15]
17. ஒரு நபர் எவ்வாறு கடவுளை வஞ்சிக்க முடியும்? (மல். 3:8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 4/15 பக். 18 பாரா 15-ஐக் காண்க.]
18. வினைமையான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதன் பேரில் இயேசு கொடுத்த நல்ல அறிவுரையை மத்தேயு புத்தகத்தில் நாம் எங்கே காண்கிறோம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 7/15 பக். 22-ஐக் காண்க.]
19. மத்தேயு 20:1-16-ல் (NW) பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்டுள்ள “டெனாரியஸ்” என்பது என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; gt-TL பக். 6-ஐக் காண்க.]
20. கடவுள் துன்மார்க்கத்தை அனுமதித்திருப்பதனால் நிரூபிக்கப்பட்டிருக்கிற இரண்டு காரியங்களை சொல்லுங்கள். [kl-TL பக். 77-78 பாரா. 18-20]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. முதல் மூன்று சுவிசேஷங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் சினாப்டிக் என அழைக்கப்படுகின்றன, அதன் அர்த்தம் _________________________ என்பதாகும். [si பக். 175 பாரா 3]
22. கடவுளுடைய ஆவியை பெற்றிருப்பதாக உரிமை பாராட்டுகிற ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஆவியின் _________________________ பிறப்பிக்காமலும், _________________________ லிருந்தும் அதன் பழக்கங்களிலிருந்தும் பிரிந்திருக்காமலும் இருந்தால், அவருடைய உரிமை பாராட்டலுக்கு எந்த ஆதாரமுமில்லை. [rs-TL பக். 402 பாரா. 5-8]
23. வெளிப்படுத்துதல் 20:12-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் மரித்தோர், தங்களுடைய உயிர்த்தெழுதலுக்கு _________________________ செய்கிற கிரியைகளின்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்களுடைய உயிர்த்தெழுதல் தவிர்க்கமுடியாமல் ____________________________ உயிர்த்தெழுதலாக இருக்காது என்பதை மதித்துணருவதற்கு இது நமக்கு உதவிசெய்கிறது. (யோவா. 5:28, 29) [uw-TL பக். 75 பாரா 12]
24. இயேசுவுக்கு உண்மையில் _________________________ என்ற தனிப்பட்ட பெயர் கொடுக்கப்படாதபோதிலும், ஒரு மனிதராக அவர் வகித்த பாகம் அந்தப் பெயரின் _________________________ நிறைவேற்றியது. (ஏசா. 7:14; மத். 1:22, 23) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 4/15 பக். 22-ஐக் காண்க.]
25. மனிதர் மரிக்கையில் பிரிந்துசெல்கிற அந்த “ஆவி,” கடவுளிடமிருந்து வருகிற _________________________ ஆகும். (சங். 146:4) [kl-TL பக். 81-82 பாரா. 5-6]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. மத்தேயு தன்னுடைய சுவிசேஷத்தை (எபிரெயுவில்; அரமேயிக்கில்; கிரேக்கில்) எழுதினார், அதன் பின்பு (எபிரெயுவில்; அரமேயிக்கில்; கிரேக்கில்) மொழிபெயர்த்தார் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது. [si பக். 176 பாரா 6]
27. (மீதியானோரில்; 1,44,000 பேரில்) பெரும்பான்மையானோர் பரலோகத்தில் இருக்கின்றனர், இன்னும் பூமியிலிருக்கும் (மீதியானோர்; 1,44,000 பேர்) (ஆளும் குழுவாக; உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாக) இருக்கிறார்கள். [uw-TL பக். 80 பாரா 7]
28. இயேசு தம்முடைய (பிறப்பில்; முழுக்காட்டுதலில், உயிர்த்தெழுதலில்) மேசியாவாக ஆனார், அது (பொ.ச.மு. 2-ல்; பொ.ச. 29-ல்; பொ.ச. 33-ல்) நடந்தது. [kl-TL பக். 65 பாரா 12]
29. “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டுதல் கொடுப்பது (பொ.ச. 29-ல்; பொ.ச. 33-ல்; பொ.ச. 36-ல்) ஆரம்பமானது. (மத். 28:19) [uw-TL பக். 98 பாரா 9]
30. மத்தேயு 10:41-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, இயேசு, தம்முடைய சீஷர்களை தீர்க்கதரிசிகளாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு வாக்களித்த பரிசு (நித்திய ஜீவன்; தெய்வீக பாதுகாப்பு; ராஜ்ய செய்தியை கேள்விப்படுதல்). [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 3/1 பக். 25-ஐக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
சக. 4:6; மத். 4:8-10; மத். 16:19; எபி. 13:5, 6; யாக். 1:13; 1யோ. 5:19
31. மனிதவர்க்கத்தைப் பீடித்திருக்கிற எண்ணற்ற துன்பங்களுக்கு கடவுள் காரணர் அல்ல. [kl-TL பக். 71 பாரா 3]
32. இயேசுவின் உண்மையுள்ள சீஷர்கள் இந்த உலகத்தின் அரசியல் விவகாரங்களில் ஈடுபட மறுக்கிறார்கள். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 5/1 பக். 12 பாரா 9-ஐக் காண்க.]
33. கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அறிவு, யூதர்கள், சமாரியர்கள், புறஜாதிகள் ஆகியோர் பரலோகத்திற்குச் செல்வதற்கான வழியைத் திறக்கும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 3/15 பக். 5-ஐக் காண்க.]
34. நம்முடைய உலகளாவிய பிரசங்க வேலைக்கு ஏற்பட்ட எதிர்ப்பு சமாளிக்கப்பட்டிருக்கிறது, மனித முயற்சியினால் அல்ல, ஆனால் யெகோவாவின் வழிநடத்துதலினாலும் பாதுகாப்பினாலுமாகும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 8/15 பக். 17 பாரா 4-ஐக் காண்க.]
35. உலகத்திற்கு கிறிஸ்தவர்கள் தங்களுடைய புறமுதுகைக் காண்பிக்க நல்ல காரணம் இருக்கிறது. [kl-TL பக். 60 பாரா 18]