அவர்கள் ஏன் அதைச் செய்கிறார்கள்?
1 ‘தேவனுடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் அவரைப் பட்சித்தது’ என்பதாக இயேசுவைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டது. (சங். 69:9) யெகோவாவின் உண்மை வணக்கத்திற்கான இயேசுவின் பக்திவைராக்கியம், ஊழியத்தை முதலிடத்தில் வைக்கும்படி அவரை உந்துவித்தது. (லூக். 4:43; யோவா. 18:37) சத்தியத்திற்கு சாட்சிகொடுக்கும் இதே பக்திவைராக்கியம் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தில் இன்றும் பிரதிபலிக்கப்படுகிறது. கடந்த ஊழிய ஆண்டில், பயனியர் ஊழியத்தின் ஏதாவதொரு அம்சத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 6,45,509 பேர் உலகளாவ பங்குகொண்டார்கள். கடவுளிடம் நாம் செய்துள்ள ஒப்புக்கொடுத்தலை கருத்தில் கொள்கையில், துணைப் பயனியராக அல்லது ஒழுங்கான பயனியராக சேவிப்பதற்கு நம்முடைய சூழ்நிலைமைகளை ஒழுங்கமைத்துக்கொள்ள முடியுமா என்பதை நாம் ஒவ்வொருவரும் ஜெபத்துடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.—சங். 110:3; பிர. 12:1; ரோ. 12:1.
2 சுயநலமான பொருளாசைமிக்க ஒரு காரிய ஒழுங்குமுறையில் வாழ்வதனால், பணசம்பந்தமான எந்த நன்மைகளையும் எந்தப் புகழையும் கொண்டுவராத இந்த ஊழியத்தில் இவ்வளவு கடினமாய் யாரேனும் வேலை செய்வதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு உலகிலுள்ள பலர் கடினமாக காண்கிறார்கள். பயனியர்கள் அதை ஏன் செய்கிறார்கள்? ஜீவனைக்காக்கும் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். யெகோவாவுக்கும் உடன் மானிடருக்குமான ஆழ்ந்த அன்பினால் தூண்டப்பட்டவர்களாய், உயிர்களைக் காக்க உதவிசெய்வதற்கு ஒரு பலமான, தனிப்பட்ட கடமை இருப்பதை அவர்கள் உணருகிறார்கள். (ரோ. 1:14-16; 1 தீ. 2:4; 4:16) ஒரு பயனியர் தம்பதியினர் இவ்வாறு சொல்வதன் மூலம் இதை நன்றாக தொகுத்துரைத்தார்கள்: “நாங்கள் ஏன் பயனியர் சேவை செய்கிறோம்? நாங்கள் அதைச் செய்யவில்லையென்றால், யெகோவாவுக்கு முன்பு அதைக்குறித்து நாங்கள் எப்படியாவது நியாயங்காட்ட முடியுமா?”
3 பயனியர் சேவை தொடங்கியதற்கான தன்னுடைய தீர்மானத்தைப் பற்றி மற்றொரு சகோதரி இதை எழுதினார்: “ஒரேவொரு வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுவதற்கு என் வீட்டுக்காரரும் நானும் திட்டம்போட்டோம், இது தேவையில்லாத காரியங்களையெல்லாம் ஒழித்துக்கட்டிவிடுவதை அர்த்தப்படுத்தியது. இருந்தபோதிலும், யெகோவா எங்களை நிறைவாய் ஆசீர்வதித்தார், வறுமையிலோ பற்றாக்குறையிலோ உழன்று கொண்டிருக்கும்படி ஒருபோதும் எங்களை கைவிட்டு விடவில்லை. . . . வாழ்வதற்கு ஓர் உண்மையான காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன்—அதாவது உண்மையான கடவுளாகிய யெகோவாவை தேடுகிறவர்களுக்கு அவர் தூரமானவரல்ல என்பதை அறிந்துகொள்ளும்படி தேவையிலிருப்பவர்களுக்கு உதவிசெய்வதையே.” காலங்களின் அவசரத்தன்மையைப் பார்க்கையில், பயனியர்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான காரியங்களை வைத்து திருப்தியுள்ளவர்களாய் இருந்துகொண்டு, என்றும் நிலைத்திருக்கப்போகும் ஆவிக்குரிய பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்கமாய் நாடுகிறார்கள்.—1 தீ. 6:8, 18, 19.
4 பயனியர் ஊழியம் செய்ய உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் அனுமதிக்குமானால், பயனியர் சேவை செய்கிற உலகெங்குமுள்ள லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளுடன் நீங்கள் ஏன் சேர்ந்துகொள்ளக்கூடாது? இந்த முறையில் அவர்கள் அனுபவிக்கிற அதே சந்தோஷத்தை நீங்கள் அனுபவிக்க முடியும்.