மே ஊழியக் கூட்டங்கள்
மே 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
12 நிமி:“தொடர்ந்து இயேசுவை பின்பற்றுங்கள்.” கேள்விகளும் பதில்களும். ஜூன் 1, 1993, காவற்கோபுரம், பக்கம் 12-லுள்ள அனுபவங்களைச் சேர்த்துக்கொள்ளவும்.
23 நிமி:“ஆர்வமுள்ள அனைவர்பேரிலும் உண்மையான அக்கறை காண்பியுங்கள்.” சபை கலந்தாலோசிப்பு. ஆர்வமுள்ள அனைவரையும் மறுபடியும் சந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். நாம் பொது இடங்களில் சந்திப்பவர்களை மீண்டும் சந்தித்து சாட்சிகொடுப்பதற்கு, அவர்களது வீட்டு விலாசத்தை கேட்டு வாங்குவதற்கான சாதுரியமான சில வழிகளை சொல்லுங்கள். பாராக்கள் 6-9-ல் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களில் இரண்டை திறம்பட்ட பிரஸ்தாபிகள் நடித்துக் காண்பிக்கும்படி சொல்லுங்கள். மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 3-லுள்ள உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் “மறுசந்திப்புகளில் வெற்றி காண்பதற்கான இரகசியம்” என்ற பெட்டியை மறுபார்வை செய்யுங்கள். ஒவ்வொரு வாரமும் மறுசந்திப்புகளுக்காக நேரத்தை ஒதுக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 151, முடிவு ஜெபம்.
மே 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
12 நிமி:கள்விப் பெட்டி. மூப்பர் கொடுக்கும் பேச்சு.
23 நிமி:“துண்டுப்பிரதிகளை உபயோகிப்பதன்மூலம் உங்கள் வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்யுங்கள்.” கேள்விகளும் பதில்களும். பாராக்கள் 6 மற்றும் 7-ல் உள்ள கலந்தாலோசிப்புகளை நடித்துக்காட்டுங்கள். எல்லா சமயங்களிலும் அநேக மொழிகளில் துண்டுப்பிரதிகளை தங்களுடன் எடுத்துச்செல்லும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். சபையில் கிடைக்கக்கூடிய துண்டுப்பிரதிகளைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 162, முடிவு ஜெபம்.
மே 19-ல் துவங்கும் வாரம்
7 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:“முன்னேறும் வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துவது.” படிப்பு நடத்துவதில் திறம்பட்ட ஓரிரு பிரஸ்தாபிகளுடன் தகுதியுள்ள ஒரு சகோதரர் இந்தக் கட்டுரையை கலந்தாலோசிக்க வேண்டும். அறிவு புத்தகத்திலுள்ள சில பாகங்களை உதாரணங்களாக எடுத்துக்கொண்டு, படிப்பு சீராக நடைபெற உதவுவதும் மாணாக்கர் உண்மையிலேயே எதை கற்றுக்கொள்கிறார் என்பதை தாங்கள் புரிந்துகொள்ள உதவுவதுமான போதனா முறைகளை அவர்கள் சொல்கிறார்கள்.—ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கை, பாராக்கள் 5, 8, 12 மற்றும் 21-ஐ காண்க.
18 நிமி:“சந்தாக்களை எப்படிக் கையாளுவது.” கேள்விகளும் பதில்களும். “சிறந்த சேவையைப் பெற நீங்கள் என்ன செய்யலாம்” என்ற பெட்டியிலிருந்து பொருத்திப் பிரயோகிக்கத்தக்க குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். திருத்தமாகவும், அடித்தல்திறுத்தலின்றியும் உடனடியாகவும் அனுப்பிவைக்க வேண்டுமென உற்சாகப்படுத்துங்கள். சந்தாக்கள் பெறுகையில் எடுத்துப் பார்க்கத்தக்கதாக, இந்த உட்சேர்க்கை எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு சொல்லுங்கள்.
பாட்டு 165, முடிவு ஜெபம்.
மே 26-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். ஜூன் மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். அறிவு புத்தகத்தை பயன்படுத்துவதன் மூலம், பக்கங்கள் 10,11-ல் உள்ள 17-19 பாராக்களின் குறிப்புகளைக்கொண்டு எவ்வாறு சுருக்கமான பிரசங்கத்தைத் தயாரிக்கலாம் என்பதை விளக்குங்கள். நன்கொடை ஏற்பாட்டைக் குறித்து சொல்ல வேண்டியதை நினைப்பூட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துவதற்கு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். விரைவில் முன்னேற்றமடைய ஆர்வம் காண்பிப்போருக்கு உதவ வேண்டிய தேவையை வலியுறுத்துங்கள்.—ஜனவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 13,14-ஐக் காண்க.
12 நிமி:“நாம் ஏன் திரும்பத் திரும்ப செல்கிறோம்?” கேள்விகளும் பதில்களும். அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கம் 570-ல் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியிலிருந்து குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 நிமி:சபை தேவைகள். சபை கவனம் செலுத்தவேண்டிய ஓர் ஆவிக்குரிய தேவையைக் குறித்து ஒரு மூப்பரின் பேச்சு அல்லது இரு மூப்பர்களின் கலந்தாலோசிப்பு. முன்னேற்றத்திற்கான வேதப்பூர்வ அறிவுரையையும் நடைமுறை ஆலோசனைகளையும் அளியுங்கள்.
பாட்டு 174, முடிவு ஜெபம்.