தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 5 முதல் ஆகஸ்ட் 18, 1997 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. மாற்கு 1:41-ல் சித்தரிக்கப்பட்டிருக்கும் இயேசுவின் இரக்கம், மக்களிடமாக யெகோவாவிற்கு இருக்கும் அக்கறையை இருதயத்தை நெகிழச் செய்யும் விதத்தில் படம்பிடித்துக் காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 3/1 பக். 5-ஐக் காண்க.]
2. கடைசி நாட்களுக்கான அம்சங்கள், மத்தேய 24, மாற்கு 13, லூக்கா 21 ஆகியவற்றில் மட்டுமே காணப்படுகின்றன. [kl-TL பக். 102 பெட்டி]
3. லூக்கா 7:19-ல் காணப்படும் யோவான்ஸ்நானனின் கேள்வி அவர் விசுவாசத்தில் குறைவுபட்டிருந்ததைக் காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 7/1 பக். 12-ஐக் காண்க.]
4. இயேசு தம்முடைய சீஷர்களுடன் அனுசரித்த கடைசி பஸ்காவின் போது, ‘நான் உம்மை மறுதலிக்கமாட்டேன்’ என்று பேதுரு மட்டுமே அவரிடம் சொன்னார். [வாராந்தர பைபிள் வாசிப்பு]
5. அப்போஸ்தலனாகிய பேதுரு மணமானவர் என்பதற்கு எந்த வேதப்பூர்வ ஆதாரமும் இல்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு]
6. பரிசுத்த ஆவிக்கு தனிப்பட்ட பெயர் இருப்பதாக பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. [rs-TL பக். 406 பாரா 6]
7. இயேசு பிரசங்கித்த அந்த ராஜ்யம் கடவுளுடைய சர்வலோக உன்னத அரசதிகாரத்திற்கு கிளை ஆட்சியாக அல்லது இரண்டாம் பட்சமானதாக இருக்கிறது. [kl-TL பக். 91 பாரா 4]
8. யோவான் 20:17-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் விதமாக, எப்போதாவது யெகோவா ‘என் தேவன்’ என இயேசுவை குறிப்பிட்டதாகவோ, அதேவிதமாக பரிசுத்த ஆவியை ‘என் தேவன்’ என்பதாக யெகோவா அல்லது இயேசு குறிப்பட்டதாகவோ எந்தவொரு வேதவசனமும் இல்லை. [rs-TL பக். 411 பாரா 4]
9. மற்ற மூன்று சுவிசேஷங்களையும் ஒன்று சேர்த்தால் கிடைக்கும் சொற்றொடர்களை விடவும் அதிகமானவை ஏன் லூக்கா புத்தகத்தில் இருக்கின்றன என்பதற்கு எந்தவொரு நியாயமான விளக்கமும் இல்லை. [si பக். 187 பாரா 2]
10. பரிசேயர்களிடம், தேவனுடைய ராஜ்யம் அவர்கள் மத்தியில் இருந்தது என்பதாக இயேசு சொன்னபோது, எதிர்கால அரசராக தம்மைக் குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார். (லூக். 17:21, NW) [kl-TL பக். 91 பாரா 6]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. இலக்கண ரீதியாக பைபிளிலுள்ள ஒரு பகுதியை ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் மொழிபெயர்க்க முடிந்த சந்தர்ப்பத்தில், மொழிபெயர்ப்பாளர் எந்த வழிகாட்டும் நியமத்தைப் பின்பற்ற வேண்டும்? [rs-TL பக். 416 பாரா 1]
12. சில ஆட்கள் சிட்சையை ஏற்றுக்கொள்வதை எது தடைசெய்கிறது? [uw-TL பக். 127 பாரா 4]
13. திரித்துவ நம்பிக்கையை விடாது பற்றிக்கொண்டிருப்போரை அது என்ன நிலையில் வைக்கிறது? [rs-TL பக். 424 பாரா 3]
14. “உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள்” என்று இயேசு சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்? (மாற். 9:50) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL86 6/1 பக். 12 பாரா 13-ஐக் காண்க.]
15. ஏழை விதவையின் காணிக்கைக்கு இயேசு பிரதிபலித்த விதத்திலிருந்து என்ன மதிப்புமிக்க பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? (மாற். 12:42-44) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 12/1 பக். 29 பாரா 7-பக். 30 பாரா 1-ஐக் காண்க.]
16. மாற்குவின் எழுத்துநடையில் பேதுருவின் சில குணாதிசயங்கள் எவ்வாறு காட்டப்படுகின்றன, அதற்கான காரணம் என்ன? [si பக். 182 பாரா. 5-6]
17. மத்தேயு 6:9, 10 மற்றும் லூக்கா 11:2-4-யும் ஒப்பிடுகையில், மாதிரி ஜெபத்தின் வார்த்தைகளை அப்படியே உபயோகிக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு நாம் ஏன் வரலாம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 9/1 பக். 17 பாரா 6-ஐக் காண்க.]
18. லூக்கா 3:1, 2 போன்ற வசனங்களை நாம் வாசிக்கையில் பைபிளின் நம்பத்தக்க தன்மையின் பேரிலான நம்முடைய நம்பிக்கை எந்த வழியில் பலப்படுத்தப்படுகிறது? [si பக். 188 பாரா 7]
19. இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்றதும் உடனடியாக ஆட்சிசெய்ய ஆரம்பிக்கவில்லை என்பதை சங்கீதத்திலும் எபிரெயரிலும் உள்ள எந்த வசனங்கள் காட்டுகின்றன? [kl-TL பக். 96 பாரா 15]
20. கடவுளிடம் வைத்திருந்த விசுவாசத்தில் இயேசு ஒருபோதும் குறைவுபடவில்லை என்பதை நாம் அறிந்திருக்கிற போதிலும் “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று ஏன் அவர் சத்தமாக சொன்னார்? (மாற். 15:34) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 6/15 பக். 31.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. நினைவு ஆசரிப்பில் உபயோகிக்கப்படும் அப்பமும் திராட்ச ரசமும் வெறும் _________________________; அப்பம் இயேசுவின் _________________________ பிரதிநிதித்துவம் செய்கிறது, திராட்ச ரசம் அவருடைய _________________________ பிரதிநிதித்துவம் செய்கிறது. [uw-TL பக். 115 பாரா 13]
22. உண்மையில் நடைபெற்றிருப்பதை நாம் ஆழ்ந்து கவனிக்கையில், _________________________ பூமிக்குரிய நம்பிக்கை தெளிவாக புரிந்துகொள்ளப்பட்டபோது, சுமார் _________________________ ஆண்டில் பரலோக அழைப்பு பூர்த்தியானதாகத் தெரிகிறது. [uw-TL பக். 112 பாரா 6]
23. யோவான்ஸ்நானன் பிரசங்கிக்க ஆரம்பிக்கையில், _________________________ யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு _________________________ அதிபதியாயும் இருந்தனர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; லூக்கா 3:1-ஐக் காண்க.]
24. உண்மையில் கடவுளுடைய குமாரர்களாக இருப்பவர்களின் மனதிலும் இருதயத்திலும் செயல்தூண்டுவிக்கும் சக்தியோடுகூட சேர்ந்து செயல்படும் ஆவி, _________________________. [uw-TL பக். 113 பாரா 9]
25. லூக்கா 10:16-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, _________________________ மற்றும் அதன் ஆளும் குழுவின் மூலமாய் வருகிற ஆவிக்குரிய ஏற்பாடுகளை நாம் நன்றியோடுமதித்து ஏற்கையில் _________________________ மரியாதை காட்டுகிறோம். [uw-TL பக். 123 பாரா 13]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. மத்தேயு 27:52-ல் குறிப்பிடப்படும் பரிசுத்தவான்கள் (சரீரப்பிரகாரமாக தற்காலிகமாக உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள்; உண்மையில் பூமியதிர்ச்சியின் போது தங்களுடைய கல்லறைகளைவிட்டு வெளியே தூக்கியெறியப்பட்ட உயிரற்ற சடலங்கள்; இயேசுவிற்கு முன்பாக பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்பட்டவர்கள்) ஆவர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 9/1 பக். 7-ஐக் காண்க.]
27. கொலோசெயர் 1:15-ல், ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்’ என இயேசு அழைக்கப்படுவது அவர் (கடவுளைப் போன்றும் ஆரம்பமற்றவராகவும் இருக்கிறார்; கடவுளுடைய பூமிக்குரிய குமாரர்களில் முதற்பேறானவராக இருக்கிறார்; யெகோவாவின் குமாரர்களடங்கிய குடும்பத்தில் மூத்தவராக இருக்கிறார்) என்பதை அர்த்தப்படுத்துகிறது. [rs-TL பக். 408 பாரா 1]
28. “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” நியமிக்கப்பட்டது (பொ.ச. 33-ல்; 1918-ல்; 1919-ல்) பரிசுத்த ஆவியால் உறுதிப்படுத்தப்பட்டது. (மத். 24:45, NW) [uw-TL பக். 119 பாரா 6]
29. எல்லா கிறிஸ்தவர்களாலும் முக்கியமாக கடவுளுடைய அமைப்பில் முன்நின்று வழிநடத்தும் பொறுப்பிலுள்ளவர்களாலும் பின்பற்றபட வேண்டிய ஒரு சட்டம்: “உங்களெல்லாரிலும் (பெருமையுள்ளவனாக; முக்கியமானவனாக; சிறியவனாக) தன்னை நடத்திக் கொள்ளுகிறவனே பெரியவன்” என்பதே. (லூக். 9:48, NW) [uw-TL பக். 122 பாரா 12]
30. (மத்தேயு 10-ல்; மத்தேயு 24-ல்; லூக்கா 21-ல்) பதிவுசெய்யப்பட்டபடி, பிரசங்கிக்கும்படி தாம் அனுப்பியவர்களுக்கு இயேசு திட்டவட்டமான ஊழிய அறிவுரைகளைக் கொடுத்தார். [si பக். 180 பாரா 31]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
நீதி. 4:13; தானி. 7:9, 10, 13, 14; மாற். 7:20-23; 13:10; லூக். 8:31
31. நம்முடைய மனதிலோ இருதயத்திலோ எழும் எந்தவொரு தேவபக்தியற்ற அல்லது கேடுண்டாக்கும் தூண்டுதலை அடையாளம் கண்டுகொண்டு அது வேர் கொள்ளும் முன்பு அதை அகற்றுவதற்கு கவனமாக இருக்க வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 5/1 பக். 23 பாரா 16-ஐக் காண்க.]
32. “ஆயிரம் ஆண்டு”களின் போது சாத்தானோடுகூட மரணத்தைப் போன்ற செயலற்ற நிலையை பிசாசுகளும் அடையும். (வெளி. 20:2) [வாராந்தர பைபிள் வாசிப்பு]
33. மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் உலகளாவிய சாட்சி கொடுக்கும் வேலை செய்துமுடிக்கப்பட அவசர உணர்வு தேவைப்படுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 10/1 பக். 27-ஐக் காண்க.]
34. சிட்சையை ஏற்றுக்கொள்ளுதல், பின்னால் வருந்தச் செய்யும் காரியங்களைச் சொல்வதிலிருந்தும் செய்வதிலிருந்தும் ஒருவரைப் பாதுகாக்கலாம். [uw-TL பக். 128 பாரா 6]
35. நாம் ஆவி சிருஷ்டிகளைக் காணமுடியாத போதிலும், யெகோவாவின் காணக்கூடாத பரலோக அமைப்பைப்பற்றிய தோன்றத்தையும் அவருடைய பூமிக்குரிய வணக்கத்தாரைப் பாதிக்கும் அதன் சில செயல்பாடுகளையும் அவருடைய வார்த்தை நமக்குக் கொடுக்கிறது. [uw-TL பக். 117 பாரா 1]