அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் எதையேனும் 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? செப்டம்பர்: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் 20.00 ரூபாய் நன்கொடைக்கு. அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், பத்திரிகைகளின் தனிப் பிரதிகள் 4.00 ரூபாய்க்கு அளிக்கப்பட வேண்டும். உருது, பஞ்சாபி (மாதாந்தர இதழ்) ஆகியவற்றைத் தவிர காவற்கோபுரம், இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை வருகிறது என்பதைத் தயவுசெய்து நினைவில்வையுங்கள். தமிழிலும் மலையாளத்திலும் விழித்தெழு! மாதம் இருமுறையும், ஆனால், கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் மாதாந்தர இதழாகவும் வெளிவருகிறது. உருது, பஞ்சாபி, பெங்காலி ஆகியவற்றுக்கான விழித்தெழு! காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கின்றன; இந்த மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாவுக்கான ஏற்பாடு இல்லை. இந்த மாதத்தின் பிற்பகுதி முதற்கொண்டு, ராஜ்ய செய்தி எண் 35 விநியோகிக்கப்படும். நவம்பர்: ராஜ்ய செய்தி எண் 35-ஐ விநியோகிப்பது தொடரும். ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடியிருப்பிலும் உள்ள வீட்டுக்காரரை இராஜ்ய செய்தி எண் 35-ஐக் கொண்டு சென்றெட்டுவதன் மூலமாக பிராந்தியங்களை முடித்திருக்கும் சபைகள் அறிவு புத்தகத்தை ரூபாய் 20.00. நன்கொடைக்கு அளிக்கலாம். குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யலாம்.
◼ டிசம்பர் 26-28-ல் கோட்டயத்தில் நடைபெறுவதாக முன்பு திட்டமிடப்பட்டிருந்த மாவட்ட மாநாடு, அதே தேதிகளில் எர்ணாகுளத்தில் நடைபெறும். மாநாட்டுப் பணி தலைமையிடத்தின் விலாசம்: c/o Ipe Thomas, C-32/1994 Netaji Road, Edappally P.O., Cochin, KER 682 024.
◼ எல்லா சமுதாயங்களிலும் வருடத்தின் வெவ்வேறு காலப்பகுதிகளில், பிள்ளைகளுக்கு பள்ளியிலிருந்து விடுப்பும், உலகப்பிரகாரமான வேலையிலிருந்து விடுப்பும் அளிக்கும் உலகத்தின் விடுமுறைநாட்கள் உள்ளன. வெளி ஊழியத்தில் அதிகமாக பங்கெடுக்க மிகச்சிறந்த வாய்ப்புக்களை இவை சபையினருக்கு அளிக்கின்றன. இத்தகைய சூழ்நிலைகள் எப்பொழுது எழும்புகின்றன என்று மூப்பர்கள் எதிர்நோக்கி விடுமுறைக் காலங்களில் தொகுதியாக சாட்சி கொடுப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைக்குறித்து சபைக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும்.
◼ ஒவ்வொரு சபையும் மூன்று பிரசுர விவரப்பட்டியல் படிவங்களை (S-AB-18) பெற்றுக்கொள்ளும். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் சபை செயலர் பிரசுர ஊழியரை சந்தித்து, அந்த மாத கடைசியில் கையிருப்பில் இருக்கக்கூடிய சபை பிரசுரங்களின் விவரப்பட்டியலை எடுப்பதற்கான தேதியை நிர்ணயிக்கவேண்டும். கையிருப்பில் இருக்கும் அனைத்து பிரசுரங்களின் எண்ணிக்கையும் சரிபார்க்கப்பட வேண்டும்; கூட்டல் தொகை பிரசுர விவரப்பட்டியல் படிவத்தில் (Literature Inventory form)எழுதப்பட வேண்டும். கையிருப்பில் இருக்கும் மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியரிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அசல் படிவத்தை சங்கத்திற்கு தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் தபாலில் அனுப்பி வைக்கவும். ஒரு கார்பன் பிரதியை உங்களுடைய கோப்புகளுக்காக வைத்திடுங்கள். மூன்றாவது பிரதி செய்முறை தாளாக பயன்படுத்தப்படலாம். விவரப்பட்டியல் செயலரால் மேற்பார்வை செய்யப்படவேண்டும், முடிக்கப்பட்ட படிவம் நடத்தும் கண்காணியால் சரிபார்க்கப்பட வேண்டும். செயலர் மற்றும் நடத்தும் கண்காணி ஆகிய இருவரும் படிவத்தில் கையெழுத்திடுவார்கள்.
◼ சபை பகுப்பாய்வு அறிக்கைப் படிவத்தில் (S-10) (Congregation Analysis Report form) எழுதுவதற்காக, சபை செயலர் எண்ணிக்கைகளைச் சேகரிக்கவும் செய்வார். அவர், பிரஸ்தாபிகள் பதிவு அட்டையிலிருந்து (S-21) தேவையான விவரங்கள் திருத்தமாக எழுதப்படுவதை நிச்சயப்படுத்துவதற்காக, அறிக்கை சேகரிப்பதில் ஒருவேளை உதவி செய்யும் எவரேனும் ஒரு மூப்பருக்கோ உதவி ஊழியருக்கோ கவனமாக எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று போதிப்பார். சபை பகுப்பாய்வு அறிக்கைப் படிவத்தைத் திருத்தமாகவும், தெளிவாகவும் நிரப்ப வேண்டும்; கையெழுத்து போடுவதற்கு முன், ஊழியக் குழுவால் கவனமாக சரிபார்க்கப்படவேண்டும். படிவத்தில் உள்ள முதல் ஐந்து கட்டங்கள் சராசரியாக வாராந்தர கூட்டத்திற்கு ஆஜராவோரின் எண்ணிக்கையால் நிரப்பப்படவேண்டும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இதனைக் கணக்கிட, பெட்டிகளுக்கு மேல் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளைத் தயவுசெய்து நெருங்க பின்பற்றுங்கள். முகப்புப் பக்கத்தில் அல்லது படிவத்தில் உள்ள கடைசி கட்டத்திற்கு முந்தைய கட்டத்தில் உள்ள எண்ணிக்கையில் நியமிக்கப்பட்ட மூப்பர்களை மாத்திரம் உள்ளடக்க வேண்டும் என்பதையும், உதவி கண்காணிகள் எனப்படுபவர்கள் உதவி ஊழியர்களே, அதனால் அவர்களை கடைசி கட்டத்திலுள்ள எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க. தயவுசெய்து செப்டம்பர் 10-ம் தேதிக்கு முன்பாகவே S-10 மூலப் படிவத்தை சங்கத்திற்கு அனுப்பி வையுங்கள்; கார்பன் பிரதியை உங்கள் கோப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
என்னுடைய பைபிள் கதைப் புத்தகம் சிறிய அளவு)—தமிழ்
கையிருப்பில் இல்லாத புத்தகங்கள்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக”—மலையாளம்