உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/98 பக். 7
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2008
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • உடையும் தோற்றமும்​—ஏன் கவனம் தேவை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 3/98 பக். 7

கேள்விப் பெட்டி

◼ லோனாவாலாவில் உள்ள சங்கத்தின் இடங்களை பார்க்க வரும்போது அல்லது பெங்களூரில் கட்டப்படவிருக்கும் மனையை பார்க்க வரும்போது ஏன் நமது உடைக்கும், தலை வாரும் விதத்திற்கும் விசேஷ கவனம் தரவேண்டும்?

நடை உடை பாவனைகளில் கிறிஸ்தவர்கள் ஒழுங்காக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறோம். யெகோவாவின் ஊழியர்களுக்கு ஏற்ற கண்ணியத்தையும் கௌரவத்தையும் எந்நாளும் வெளிக்காட்டுவதாக நம் உடையும் தலை வாரும் விதமும் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, நம் சங்கத்தின் இடங்களை காண, உலகின் எந்தவொரு பகுதிக்கு சென்றாலும் இதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

1998-ல் மாவட்ட மாநாடுகளும், சர்வதேச மாநாடுகளும் உலகின் பல பகுதிகளில் நடைபெறவிருக்கின்றன. அநேக நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான நம் சகோதரர்கள் நியூ யார்க்கில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கும், இந்தியா உட்பட மற்ற நாடுகளில் உள்ள கிளை அலுவலகங்களுக்கும் வருவார்கள். இவ்விடங்களை சுற்றிப்பார்க்கும்போது மட்டுமின்றி மற்ற நேரத்திலும் நாம் “எவ்விதத்தினாலேயும் . . . தேவ ஊழியக்காரராக விளங்க” வேண்டும். இதில் நாம் கண்ணியமாக உடை உடுத்துவதும், ஒழுங்காக தலையை வாருவதும் உள்ளடங்கும்.—2 கொ. 6:3, 4.

உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் சொல்கிறது. வெளி ஊழியம் செய்யும்போதும், கூட்டங்களுக்கு போகும்போதும் உடல் சுத்தத்தின் அவசியத்தையும், அடக்க ஒடுக்கமாக உடையணிந்து, தலை வார வேண்டியதன் அவசியத்தையும் அது எடுத்துரைக்கிறது. பிறகு, பக்கம் 131-ல், பாரா 2 இவ்வாறு குறிப்பிடுகிறது: “புரூக்லினிலுள்ள அல்லது சங்கத்தின் கிளை அலுவலகங்கள் எதிலுமுள்ள பெத்தேல் வீட்டுக்குப் போகையிலும் அதே நியமம் பொருந்துகிறது. பெத்தேல் என்ற பெயரின் அர்த்தம் ‘கடவுளின் வீடு’ என்பதை நினைவில் வையுங்கள், ஆகவே, நம்முடைய உடை, தோற்றம், சிகை அலங்காரம், நடத்தை ஆகியவை ராஜ்ய மன்றத்தில் வணக்கத்திற்காகக் கூட்டங்களுக்கு வருகையில் நம்மிடம் எதிர்பார்க்கப்படும் அதே ஒழுங்குக்கு ஒத்ததாய் இருக்க வேண்டும்.” பெத்தேல் அங்கத்தினர்களோடு கூட்டுறவு கொள்ளவும், கிளை அலுவலக இடங்களை பார்க்கவும் வரும் உள்ளூர் ராஜ்ய பிரஸ்தாபிகளும், தொலைதூர இடங்களிலிருந்து வருவோரும் இதே உயர்வான தராதரத்தை பின்பற்ற வேண்டும்.

நாம் உடுத்தும் விதம், யெகோவாவின் உண்மை வணக்கத்தை மற்றவர் நோக்கும் விதத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்த வேண்டும். ஆனால், சங்கத்தின் இடங்களை பார்க்க வரும்போது சில சகோதர சகோதரிகள் ரொம்பவும் ஏனோதானோ என்று சாதாரணமா உடையணிவது கவனிக்கப்பட்டுள்ளது. பெத்தேல் குடும்பங்களுக்கு வரும்போது இத்தகைய உடைகள் தகுந்தவை அல்ல. கடவுளுடைய மக்களை உலகத்தாரிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற உயர்வான தராதரங்களை நாம் இந்த விஷயத்திலும், கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பின்பற்றி, செய்யும் எல்லா காரியங்களிலும் கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவர விரும்புகிறோம். (ரோ. 12:2; 1 கொ. 10:31) முதல் முறையாக பெத்தேலுக்கு விஜயம் செய்யும் நம்முடைய பைபிள் மாணாக்கர்களிடமும், மற்றவர்களிடமும் இதைப் பற்றி பேசுவது நல்லது. கண்ணியமாக உடுத்துவதன், ஒழுங்காக தலை வாருவதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்துங்கள்.

ஆகவே, சங்கத்தின் இடங்களை காண நீங்கள் வரும்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய உடையும், தலை வாரிய விதமும் அடக்கமாக இருக்கிறதா?’ (ஒப்பிடுக: மீகா 6:8, NW.) ‘நான் வணங்கும் தேவன் பேரில் நல்மதிப்பை கொண்டுவருகிறதா? மற்றவர்களின் கவனத்தை சிதறடிக்குமா அல்லது மற்றவர்களை தவறாக பார்க்கும்படி தூண்டுமா? முதன்முறையாக பார்க்க வருவோருக்கு நான் ஒரு நல்ல முன்மாதிரி வைக்கிறேனா?’ நம் உடையும், தலை வாரும் விதமும் எந்நாளும் ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக’ இருக்கட்டும்.—தீத். 2:9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்