உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/98 பக். 2
  • ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • ஏப்ரல் 6-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 4/98 பக். 2

ஏப்ரல் ஊழியக் கூட்டங்கள்

ஏப்ரல் 6-ல் துவங்கும் வாரம்

பாட்டு 27

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். அனைவருக்கும் ஏப்ரல் 11, சனிக்கிழமை அன்று நடக்கவிருக்கும் நினைவு ஆசரிப்புக்கான இடத்தையும் நேரத்தையும் நினைப்பூட்டுங்கள்.

15 நிமி: “நம் ஊழியம்—உண்மை அன்பின் ஒரு வெளிக்காட்டு.” கேள்விகளும் பதில்களும். பிப்ரவரி 1, 1987, ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 16-17, பாரா. 3-7-ல் உள்ள சுருக்கமான குறிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

20 நிமி: “பத்திரிகைகள் ராஜ்யத்தை அறிவிக்கின்றன.” பத்திரிகை அளிப்பில் திறம்பட்டவர்களாக இருக்கும் மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகள் அடங்கிய ஒரு குழுவோடு மூப்பர் கட்டுரையை சிந்திக்கிறார். புதிய இதழ்களிலுள்ள கவர்ந்திழுக்கும் அம்சங்களை கலந்தாலோசியுங்கள்; இத்தகைய குறிப்புகளை நம்முடைய பிரசங்கங்களில் பயன்படுத்துவதற்கான வழிகளை சிபாரிசு செய்யுங்கள். உள்ளூர் பிராந்தியத்தில் பத்திரிகை அளிப்பை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை சிந்தியுங்கள். புதிய பத்திரிகைகளிலிருந்து சமுதாயம், குடும்பம் அல்லது வட்டாரத்தின் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்திருக்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய கட்டுரைகளை சுட்டிக்காட்டுங்கள். இரண்டு அல்லது மூன்று சுருக்கமான நடிப்புகள் நடித்துக் காட்டப்பட ஏற்பாடு செய்யுங்கள்.

பாட்டு 205, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 13-ல் துவங்கும் வாரம்

பாட்டு 90

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி: சபை தேவைகள்.

20 நிமி: “‘எப்போதையும்விட அதிகமாக’ கூட்டங்களுக்கு ஆஜராகுங்கள்.” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிக்கிறபடி, நம் ஊழியம் புத்தகத்தில், பக்கங்கள் 64-5-ல் காணப்படும் ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜராகும் அனைவருக்கும் மனமார்ந்த போற்றுதலை தெரிவியுங்கள்.

பாட்டு 119, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 20-ல் துவங்கும் வாரம்

பாட்டு 5

10 நிமி: சபை அறிவிப்புகள். மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கான விண்ணப்பத்தை கொடுப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன என்பதை விளக்குங்கள்.

15 நிமி: கேள்விப் பெட்டி. சபையில் முன்னேற்றம் செய்யவேண்டிய குறிப்பிட்ட வழிகளை தயவாய் சுட்டிக்காட்டி மூப்பர் கொடுக்கும் பேச்சு.

20 நிமி: “ ‘நம்மைப் போல உணர்வுகளுள்ள’ மனிதர்கள்.” மார்ச் 1, 1998, காவற்கோபுரம், பக்கங்கள் 26-29-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சும் சபை கலந்தாலோசிப்பும். பிரசங்கிப்பதற்கும் கற்பிப்பதற்குமான நம்முடைய பொறுப்பை நிறைவேற்றுகையில் யெகோவாவைச் சார்ந்திருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். அதே சமயத்தில், நாம் ஒவ்வொருவரும், நம்முடைய சகோதரரின் உணர்ச்சிகளையும் மனநிலையையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, எல்லா சமயங்களிலும் அவர்களை உற்சாகப்படுத்தி கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பைப் பெற்றிருக்கிறோம்.

பாட்டு 109, முடிவு ஜெபம்.

ஏப்ரல் 27-ல் துவங்கும் வாரம்

பாட்டு 100

15 நிமி: சபை அறிவிப்புகள். “நம் புரோஷர்களைப் படித்தல்” என்ற பெட்டியைச் சிந்தித்தல். சபை புத்தகப் படிப்புக்கு நன்றாக தயாரித்துவரும்படியும் தவறாமல் ஆஜராகும்படியும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வோரின் பெயரை அறிவியுங்கள். ஊழியத்துக்கான கூட்டங்களுக்காக சபையில் செய்யப்பட்டுவரும் கூடுதலான ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள். புதிய பத்திரிகைகளை சிறப்பித்துக் காட்டும் பிரசங்கங்களைத் தயாரிப்பதற்கு சில உதவிக் குறிப்புகளையும் சொல்லுங்கள்.—அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ஐ பாருங்கள்.

15 நிமி: கிறிஸ்தவ மேய்ப்பர்கள் உங்களுக்கு எவ்வகையில் சேவை செய்கின்றனர். மார்ச் 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 24-27-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.

15 நிமி: அடிக்கடி செய்யப்படும் பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் நம்பிக்கையான மனநிலை உடையோராய் இருங்கள். அடிக்கடி செய்யப்படும் பிராந்தியத்தில் காட்டப்படும் மிகக் குறைவான பிரதிபலிப்பால் உற்சாகமிழந்திருக்கிற இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன் மூப்பர் இந்தத் தேவையைக் கலந்தாலோசிக்கிறார். அவர் ஜூலை 15, 1988, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 16-19-ல் பாரா. 4-14-ஐ அவர்களுடன் மறுபார்வை செய்கிறார். உள்ளூரில் இத்தகைய ஆலோசனைகளைப் பொருத்துவதற்கான வழிகளைக் குறித்து அவர்கள் நம்பிக்கையுடன் பேசுகின்றனர்.

பாட்டு 191, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்