பிரஸ்தாபிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் சரிப்படுத்துதல்
வெளி ஊழியத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பிரசுரங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பிரஸ்தாபிகளுக்கு வழங்கப்படும் கடன் விசேஷமாக ஆர்டர் செய்து பெறப்படும் பிரசுரங்களுக்குப் பொருந்தாது. மேலும் பிரஸ்தாபிகள்/பயனியர்கள் இப்படிப்பட்ட அதிக விலையுள்ள பிரசுரங்களை ஆர்டர் செய்துவிட்டு தங்கள் சபையைவிட்டு வேறு சபைக்கு மாறி சென்றுவிட்டால் சபைகளுக்கு இதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகவே பிரசுர இலாகாவிலுள்ள சகோதரர் இவ்விதம் விசேஷமாக ஆர்டர் செய்து பெறும் பிரசுரங்களுக்கான பணத்தை பிரஸ்தாபிகள்/பயனியர்களிடம் அவர்கள் ஆர்டர் செய்யும்போதே பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை அளிக்கப்படுகிறது.