உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/98 பக். 2
  • ஜூன் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • துணை தலைப்புகள்
  • ஜூன் 1-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 6/98 பக். 2

ஜூன் ஊழியக் கூட்டங்கள்

ஜூன் 1-ல் துவங்கும் வாரம்

பாட்டு 223

8 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.

15 நிமி: ‘எல்லா நற்கிரியையும் செய்ய முழுவதுமாக ஆயத்தமாயிருங்கள்.’ கேள்விகளும் பதில்களும். ஆங்கில காவற்கோபுரம் பிப்ரவரி 15, 1989, பக்கங்கள் 22-4-ல் உள்ள தகவலின் பேரில் சுருக்கமான குறிப்பளிக்கவும்.

22 நிமி: “‘எல்லா மனிதருக்கும்’ சாட்சிகொடுத்தல்.” ஒரு மூப்பரும் அனுபவம் வாய்ந்த சில பிரஸ்தாபிகளும் குறிப்பிடப்பட்டிருக்கும் அளிப்புகளை கலந்தாலோசிக்கிறார்கள். உள்ளூரில் எப்படிப்பட்ட மத நம்பிக்கை உடையவர்களை எதிர்ப்படுகிறோம் என்று குறிப்பிடுங்கள். இப்படிப்பட்டவர்களிடம் உரையாடுவதற்கு சில குறிப்புகளையாவது நாம் தெரிந்து வைத்திருப்பது ஏன் அவசியம் என்பதை விளக்குங்கள். ஓரிரண்டு சுருக்கமான நடிப்புகளை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

பாட்டு 112, முடிவு ஜெபம்.

ஜூன் 8-ல் துவங்கும் வாரம்

பாட்டு 209

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி: “எஜமானுடைய சொத்துக்களை பராமரித்தல்.” உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு.

20 நிமி:“வேலையை செய்து முடிக்க நம் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.” கேள்விகளும் பதில்களும். தேவையான காரியங்கள் செய்யப்படுவதற்கு ஏன் அநேக வாலண்டியர்களை மூப்பர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை விளக்கவும். ராஜ்ய மன்றம் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு, வியாதிப்பட்டவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவுதல், பிராந்தியத்தை முழுமையாக ஊழியம் செய்து முடித்தல் போன்ற உள்ளூர் தேவைகளை மறுபார்வை செய்யவும். தாமாகவே முன்வந்து உதவி செய்பவர்களை எந்தளவிற்கு மூப்பர்கள் போற்றுகின்றனர் என்பதைக் குறித்து மூப்பர்களிடம் கேட்கவும். ஒவ்வொருவரும் முயற்சி செய்வது எவ்வளவு முக்கியம் என்பதை அழுத்திக்காட்டவும்.

பாட்டு 153, முடிவு ஜெபம்.

ஜூன் 15-ல் துவங்கும் வாரம்

பாட்டு 7

10 நிமி: சபை அறிவிப்புகள். “பிரஸ்தாபிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் சரிப்படுத்துதல்” பகுதியைக் கலந்தாலோசிக்கவும்.

20 நிமி: “ஊக்கமாக பிரயாசப்படுங்கள்.” ஆங்கில காவற்கோபுரம் ஜனவரி 15, 1986, பக்கங்கள் 10-14 அடிப்படையிலான பேச்சு. ஒழுங்கான பயனியராக சேவை செய்வதன் அவசியத்தை குறிப்பிட்டு செப்டம்பர் 1 முதல் அவ்வாறு சேவிக்க உற்சாகப்படுத்தவும்.

15 நிமி: “நன்னடத்தையால் சாட்சி கொடுத்தல்.” கேள்விகளும் பதில்களும். நல்ல முன்மாதிரி வைக்கும் சில இளைஞர்களை பேட்டி காணவும். தங்களுடைய நன்னடத்தையால் மற்றவர்கள் எவ்விதம் கவரப்பட்டார்கள் என்பதை அவர்கள் குறிப்பிடலாம். காவற்கோபுரம் ஜனவரி 1, 1995, பக்கங்கள் 24-5-லிருந்து ஓரிரண்டு அனுபவங்களை விளக்கவும்.

பாட்டு 170, முடிவு ஜெபம்.

ஜூன் 22-ல் துவங்கும் வாரம்

பாட்டு 61

10 நிமி: சபை அறிவிப்புகள். சபையின் கணக்குகள் எப்போது ஆடிட் செய்யப்பட்டன என்பதை அறிவிக்கவும்.

15 நிமி: பத்திரிகை மார்க்கத்தை எப்படி ஆரம்பிப்பது. தேவைப்படுவது என்ன என்பதை விளக்கவும்: எல்லா பிரசுர அளிப்புகளையும் குறித்து வைத்து, இரண்டு வாரங்களுக்குள் மறுசந்திப்பு செய்து, தொடர்ந்து ஆர்வத்தை தூண்டுவதற்கு சமீபத்திய பத்திரிகைகளிலிருந்து புதிய தகவலை எடுத்து பேசவும். அயலகத்தார், உடன் வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள் போன்றவர்களை இதில் சேர்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து அக்கறை காட்டுபவர்களிடம் சந்தா செய்யும்படி சொல்லுங்கள். ஓரிரண்டு பிரஸ்தாபிகள் பத்திரிகை மார்க்கத்தை பற்றிய கட்டியெழுப்பும் அனுபவத்தை கூறுமாறு கேட்கவும்.

20 நிமி: பயனியர்கள் பிறருக்கு உதவுகின்றனர். ஊழியக் கண்காணியின் பேச்சு. பயனியர்கள் தனிப்பட்ட முறையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான ஏற்பாட்டை ஆய்வு செய்தல். மற்றவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகள் எவ்விதம் கடந்த காலங்களில் செய்யப்பட்டன என்பதை விளக்கவும் (jv 100; km 8/79 1, 3) சென்ற மூன்று ஆண்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டால் முழுக்காட்டுதல் பெற்ற பத்து லட்சம் புதிய ஆட்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது. “பயனியர்கள் பிறருக்கு உதவுகின்றனர்” என்ற ஏற்பாடு, பயனியர் பள்ளியில் பங்குகொண்ட ஒழுங்கான மற்றும் விஷேசித்த பயனியர்களின் அனுபவத்தையும் பயிற்சியையும் பயன்படுத்திக்கொள்ளும். ஒவ்வொரு பயனியரும் ஒரு வருடத்திற்கு இரண்டு பிரஸ்தாபிகளை ஊழியத்தில் இன்னும் திறம்பட்டவர்களாக ஆக்குவதும், இன்னும் அதிக நேரம் செலவிடுவதற்கு உதவுவதும் இதில் உட்பட்டிருக்கும் இலக்கு. உதவி பெறுபவர்கள் இதைக் குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை; ஒரு அன்பான, கரிசனையான விதத்தில் உற்சாகத்தை அளிப்பதற்கே இந்த ஏற்பாடு. இன்னும் லட்சக்கணக்கானோர் திறமை வாய்ந்த ஊழியர்களாவதற்கு இந்தப் புதிய ஏற்பாடு உதவும்.

பாட்டு 207, முடிவு ஜெபம்.

ஜூன் 29-ல் துவங்கும் வாரம்

பாட்டு 114

10 நிமி: அறிவிப்புகள். ஜூன் மாதத்திற்கான வெளி ஊழியத்தை அறிக்கை செய்யும்படி எல்லாருக்கும் ஞாபகப்படுத்துங்கள். ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்புகளைப்பற்றி கலந்தாலோசிக்கவும்.

15 நிமி: சபை தேவைகள் அல்லது நான் தளர்ந்துவிட்டேனா? ஆங்கில காவற்கோபுரம் டிசம்பர் 15, 1987, பக்கங்கள் 18-19, பாராக்கள் 14-16-ன் அடிப்படையில் ஒரு மூப்பரின் பேச்சு. பல வருடங்களாக ஊழியத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய ஊழியம் தரத்திலும் அளவிலும் எவ்விதம் இருக்கின்றது என்பதை கவனிக்குமாறு உற்சாகப்படுத்தவும்.

20 நிமி: நாம் அனைவருமே சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம். ஆங்கில காவற்கோபுரம் அக்டோபர் 15, 1987, பக்கங்கள் 22-7-ன் அடிப்படையில் பேச்சும் சபையாரோடு கலந்தாலோசிப்பும். தங்களுடைய நேரத்தை, உலகப்பிரகாரமான வேலை, குடும்ப சூழ்நிலை அல்லது தனிப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்ற வேண்டிய தேவை போன்றவற்றில் அதிகமாக கழிப்பவர்களுக்கும்கூட மற்றவர்களிடம் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை எடுத்துக்காட்டவும். உங்கள் சபையின் சில அனுபவங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பாட்டு 76, முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்