ஆகஸ்ட் ஊழியக் கூட்டங்கள்
ஆகஸ்ட் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நாட்டின் மற்றும் சபையின் ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையைப் பற்றி குறிப்புச் சொல்லுங்கள்.
15 நிமி: “ஆகஸ்டில் சாதனை படைப்போமா?” கேள்விகளும் பதில்களும். ஆகஸ்ட் மாதத்திலும் புதிய ஊழிய ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் ஊழியத்தில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மனதையும் இதயத்தையும் கவருவதற்கு சிற்றேடுகளைப் பயன்படுத்துங்கள்.” சபையாரோடு கலந்துரையாடல். முக்கிய வேதப்பூர்வ காரியங்களைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பதற்காக பல வருடங்களாக பிரசுரிக்கப்பட்டிருக்கும் சிற்றேடுகளைச் சுருக்கமாய் மறுபார்வை செய்யுங்கள். (உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 1986-1995, பக்கங்கள் 652-3-ஐக் காண்க.) சமீபத்திய சிற்றேடுகளை முக்கியப்படுத்தி காட்டுங்கள். மேலும் இவை ஒவ்வொன்றையும் யாரெல்லாம் ஆவலுடன் பெற்றுக்கொள்வர் என்பதை கலந்துபேசுங்கள். ஓரிரண்டு அளிப்புகளை நடித்துக்காட்டுங்கள். அதில் நன்கொடையைப் பற்றி குறிப்பிடச் சொல்லுங்கள்.
பாட்டு 191, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஆகஸ்ட் மாதம் வெளிஊழியத்தில் கலந்துகொள்வதை அனைத்து பிரஸ்தாபிகளும் இலக்காக வைக்குமாறு குறிப்பிடுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “இளைஞரே—உங்கள் பள்ளி நாட்களை நல்ல விதமாக பயன்படுத்துங்கள்.” கேள்விகளும் பதில்களும். ஏப்ரல் 8, 1992, ஆங்கில விழித்தெழு!, பக்கங்கள் 17-19 மற்றும் ஏப்ரல் 1, 1992, காவற்கோபுரம், பக்கங்கள் 23-26-ல் உள்ள தேவையான குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
பாட்டு 37, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். தெருவிலோ பூங்காவிலோ அல்லது மற்ற இடங்களிலோ சாட்சி கொடுக்கப்பட்ட ஒரு நபரின் அக்கறையை தொடர்ந்து வளர்ப்பதற்காக அவரிடமிருந்து பெயரையும் விலாசத்தையும் எவ்வாறு பெறலாம் என்பதைப் பற்றி சுருக்கமான குறிப்புகளைக் கேளுங்கள்.
35 நிமி: “சீஷராக்கும் அவசர சேவை வளரும் வேகத்தில் ஒரு கண்ணோட்டம்.” கேள்விகளும் பதில்களும். பாராக்கள் 5, 10 மற்றும் 11-ஐ வாசியுங்கள். உள்ளூரில் பைபிள் படிப்பு நடத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுபார்வை செய்யுங்கள். ஜூன் 1996 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையை திரும்பவும் வாசித்து கற்பிக்கும் கலையை வளர்த்து கொள்ளுமாறு பைபிள் படிப்பை நடத்திக் கொண்டிருக்கிற அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். அந்த உட்சேர்க்கையின் பாராக்கள் 5 மற்றும் 25-ல் உள்ள குறிப்புகளையும் சிந்தியுங்கள்.
பாட்டு 108, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 24-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை 1998, நம் ராஜ்ய ஊழியத்தில் “இருபதாயிரம்!” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் பெட்டியை சிந்தியுங்கள். ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே மீந்திருப்பதால், அந்த மாதத்தின் முடிவுக்கு முன்பாகவே எல்லோரும் ஊழியத்தில் பங்குகொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள். அனைவரையும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊழிய அறிக்கைகளை ஆகஸ்ட் 30 அல்லது 31-க்குள்ளாக போடும்படி ஞாபகப்படுத்துங்கள். எல்லா ஊழிய அறிக்கைகளும் செயலரால் செப்டம்பர் 3-க்குள் சரிசெய்யப்பட வேண்டும் ஆகையால், சபை புத்தக படிப்பு நடத்துனர்கள் தங்கள் தொகுதியில் இருக்கும் அனைவரும் ஊழிய அறிக்கைகளை போட்டுவிட்டார்களாவென கவனிக்கவேண்டும். “விசேஷ மாநாட்டு தினத்தின் புதிய நிகழ்ச்சிநிரல்” என்ற பகுதியை மறுபார்வை செய்யுங்கள்.
18 நிமி: பயனியர் ஊழியத்தில் எவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்கலாம். செப்டம்பர் 15, 1993, காவற்கோபுரம் பக்கங்கள் 28-31-லிருக்கும் குறிப்புகளை மையமாக கொண்டதொரு பேச்சு. கடினமான பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக்கொண்டு அதன் மத்தியிலும் தொடர்ந்து பயனியர் ஊழியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற ஒரு பயனியரை பேட்டி காணுங்கள்.
15 நிமி: நம் ராஜ்ய ஊழியத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். சபையாரோடு கலந்துரையாடல். சமீபத்தில் வெளியான நம் ராஜ்ய ஊழியத்தின் பக்கங்களிலிருந்து உதாரணங்களை எடுத்து அவை எவ்வாறு காலத்திற்கேற்ற பின்வரும் விஷயங்கள் பேரில் நமக்கு பயனளிக்கிறது என்று விவரிக்கவும்: (1) ஊழியத்தில் இடைவிடாமல் ஈடுபடத் தூண்டும் கட்டுரைகள்; (2) நாம் பரிசுத்த சேவை செய்ய உற்சாகமூட்டும் அனுபவங்கள்; (3) நற்செய்தியை திறம்பட அளிப்பதற்கு உதவும் ஆலோசனைகள்; (4) உள்ளூர் பிராந்தியத்தில் பயனளிக்கும், கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள் பற்றிய அறிவிப்புகள்; (5) ராஜ்ய வேலையில் எந்தளவு முன்னேறியிருக்கிறோம் என்பதை காட்டும் ஊழிய அறிக்கைகள்; (6) உலகளாவிய விதத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை அறிவிக்கும் தேவராஜ்ய செய்திகள்; (7) நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை பற்றி நமக்கு அறிவிக்கும் அறிவிப்புகளும் அட்டவணைகளும்; (8) கருத்தார்ந்த குறிப்புகளுக்கு பதிலளிக்கும் கேள்விப் பெட்டிகள்; (9) மாநாடுகள், விசேஷ அறிவிப்புகள் இன்னும் மற்ற காரியங்களில் நம்முடைய ஆவிக்குரிய தேவையை கருத்தாய் பேணுவதற்கான குறிப்புகளைக் கொடுக்கும் உட்சேர்க்கைகள். ஒவ்வொரு நம் ராஜ்ய ஊழிய வெளியீட்டையும், அனைவரும் வாசிக்கவும், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பயன்படுத்தவும், ஊழிய கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களுக்கும் இதனை எடுத்துவரும்படியும் மேலும் எதிர்காலத்தில் எடுத்துப் பார்ப்பதற்கென பாதுகாப்பாக அவற்றை பைல் பண்ணவும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 210, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 31-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பை சிந்தியுங்கள். “நாம் கடவுளின் பெயரை ஏன் பயன்படுத்த வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்பும் ஒரு சுருக்கமான நடிப்பை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். இந்தக் கேள்விக்கான பதிலை அறிவு புத்தகம் அதிகாரம் 3, பாரா 6-லிருந்து கொடுங்கள். செப்டம்பர் 7-ற்காக செய்யப்பட்டுள்ள ஊழிய ஏற்பாட்டை அறிவியுங்கள்.
15 நிமி: “வழிகாட்டும் கண்காணிகள்—நடத்தும் கண்காணி.” நடத்தும் கண்காணியால் கொடுக்கப்படுகிற பேச்சு. அவருடைய பொறுப்புகளை மறுபார்வை செய்தபிறகு, மூப்பர்கள் மேய்ப்பு சந்திப்பு வேலையை செய்கையில் சபையார் அளிக்கும் ஒத்துழைப்பிற்கு ஆழ்ந்த போற்றுதல் தெரிவிக்கிறார்.
18 நிமி: பள்ளியில் ஏற்படுகிற பிரச்சினைகளை மேற்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகளையுடைய இரண்டு மூன்று பெற்றோர்களுடன் ஒரு மூப்பர் உரையாடுகிறார். ஆகஸ்ட் 8, 1994, விழித்தெழு!, பக்கங்கள் 5-7-ல் உள்ள முக்கிய குறிப்புகளிலிருந்து பிள்ளைகள் பொதுவாக எதிர்ப்படும் சில பிரச்சினைகளை சுருக்கமாய் எடுத்துக்கூறவும். பிறகு பக்கங்கள் 8-10-ல் இருக்கும் பெற்றோர் பிள்ளைகளை எவ்விதங்களில் காக்கலாம் மற்றும் பெற்றோர் ஆசிரியருடன் எவ்வாறு நல்ல உறவை வளர்த்து கொள்ளலாம் என்பதற்கான குறிப்புகளைப் பயன்படுத்தி கலந்து பேசுங்கள்.
பாட்டு 24, முடிவு ஜெபம்.