உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/98 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 8/98 பக். 7

அறிவிப்புகள்

◼ ஆகஸ்ட்டுக்கான பிரசுர அளிப்புகள்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? ஆகிய சிற்றேடுகளும், போர் இல்லாத உலகம் என்றாவது வருமா? மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவ முடியுமா அல்லது தீங்கிழைக்க முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? என்ற ஆங்கில சிற்றேடுகளும் அளிக்கப்படலாம். செப்டம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. அக்டோபர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்கள். அவை மறுக்கப்பட்டால், பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள் அளிக்கப்படலாம். நவம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு.

◼ எல்லா பிரஸ்தாபிகளும் தங்கள் வெளி ஊழிய அறிக்கைகளை ஆகஸ்ட் 30, ஞாயிற்றுக்கிழமை அல்லது எப்படியும் ஆகஸ்ட் 31, திங்கட்கிழமைக்குள் போட்டுவிடும்படி உற்சாகப்படுத்துகிறோம். அதன்பின் சபை செயலர் சபை அறிக்கை படிவத்தை (S-1) செப்டம்பர் 3, வியாழக்கிழமைக்குள் சங்கத்திற்கு போஸ்ட் செய்ய எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும். அப்போதுதான் ஊழிய ஆண்டிற்கான வருடாந்தர அறிக்கையைத் தயாரிக்க எங்களுக்கு போதிய நேரம் இருக்கும்.

◼ ஒவ்வொரு சபையும் பிரசுர விவரப்பட்டியலின் (Literature Inventory forms [S-AB-18]) மூன்று படிவங்களைப் பெறும். ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலேயே சபை செயலர் பிரசுர ஊழியரைச் சந்தித்து, மாத இறுதியில் சபையின் கையிருப்பிலுள்ள பிரசுரங்களுக்கான விவரப்பட்டியலைத் தயாரிக்க ஒரு நாளை ஒதுக்க வேண்டும். கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களையும் சரியாக கணக்கிட்டு, மொத்த எண்ணிக்கையை பிரசுர விவரப்பட்டியல் படிவத்தில் குறிப்பிட வேண்டும். கையிருப்பிலுள்ள பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஒரிஜனல் காபியை செப்டம்பர் 6-ம் தேதிக்குள் சங்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். நகலை உங்கள் ஃபைலில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு நகலை வர்க் ஷீட்டாக பயன்படுத்தலாம். விவரப்பட்டியலை செயலர் சரிபார்க்க வேண்டும். எல்லாம் எழுதி முடிக்கப்பட்ட பின் நடத்தும் கண்காணி அதை சரிபார்க்க வேண்டும். செயலரும் நடத்தும் கண்காணியும் படிவத்தில் கையெழுத்திடுவார்கள்.

◼ சபை பகுப்பாய்வு அறிக்கை படிவத்தை (S-10) பூர்த்திசெய்வதற்கும் சபை செயலர் எண்ணிக்கைகளை சேகரிப்பார். பிரஸ்தாபிகள் பதிவு அட்டையிலிருந்து (S-21) தேவையான விவரங்கள் திருத்தமாக எழுதப்படுவதை நிச்சயப்படுத்துவதற்காக, அந்த அறிக்கையைத் தயாரிக்க உதவும் மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு சபை செயலர் கவனமான ஆலோசனை வழங்குவார். படிவத்தை பூர்த்திசெய்வதற்குமுன் அதிலுள்ள எல்லா ஆலோசனைகளையும் தயவுசெய்து கவனமாக படிக்கவும். சபை பகுப்பாய்வு அறிக்கை படிவத்தில் பிழையின்றி தெளிவாக எழுதவேண்டும். ஊழியக் குழுவினர் அதில் கையெழுத்திடுவதற்கு முன் கவனமாக சரிபார்க்க வேண்டும். தயவுசெய்து, ஒரிஜனல் S-10 படிவத்தை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் சங்கத்திற்கு அனுப்பிவைக்கவும்; ஒரு கார்பன் காபியை உங்கள் ஃபைலில் வைத்துக்கொள்ளவும்.

◼ ஒழுங்கான பயனியர் ஊழியத்திற்கான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சபை ஊழியக் குழு உடனடி கவனம் செலுத்தவேண்டும். விண்ணப்பம் செய்பவர் அதற்குரிய மணிநேரத்தை பூர்த்திசெய்ய முடியுமா என பார்த்துவிட்டு பின்னர் அவரது விண்ணப்பத்தை அனுப்பலாம் என ஊழியக் குழு நினைக்கக்கூடாது. கேட்டுக்கொள்ளப்படும் நியமிப்புத் தேதிக்குப் பின் விண்ணப்பம் வந்து சேர்ந்தால் இங்கேயே அதற்கேற்ப நியமிப்புத் தேதி மாற்றிக்கொள்ளப்படும். முன்னதாகவே ஊழியத்தை ஆரம்பித்துவிட்டு பின்னர் விண்ணப்பத்தை அனுப்பினால், நியமிப்புத் தேதிக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்படும் ஊழியம் முக்கியமான காரணங்கள் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், விண்ணப்பத்தோடு ஒரு கடிதமும் சேர்த்து அனுப்பப்படவேண்டும்.—அக்டோபர் 1986, ஆங்கில நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் பாராக்கள் 24-6-ஐக் காண்க.

◼ ஜூலை 1998, நம் ராஜ்ய ஊழியத்தில், செப்டம்பர் 21-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை புத்தகப் படிப்பில் தேவைப்படுத்துகிறார் சிற்றேடு கலந்தாலோசிக்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற சிற்றேடும் கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேடும் கலந்தாலோசிக்கப்படும்.

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் (திருத்திய பதிப்பு)—ஆங்கிலம்

எம்ஃபெடிக் டயக்லாட்—ஆங்கிலம்

கிங்டம் இண்டர்லீனியர்—ஆங்கிலம்

பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு, (பெரிய எழுத்து) [நான்கு வால்யூம் செட்]—ஆங்கிலம் த பைபிள் இன் லிவிங் இங்லிஷ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்