தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 4 முதல் ஆகஸ்ட் 24, 1998, வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. பைபிள் பதிவின்படி, பவுல் கொரிந்துவுக்கு மூன்று முறை விஜயம் செய்தார். [si பக். 214 பாரா 3]
2. செத்த உடலை எரித்த பிறகு, சாம்பலைத் தூவுவது வேதவசனங்களுக்கு முரணானது. [w-TL96 9/15 பக். 30 பாரா 6 முதல் பக். 31 பாரா 1 வரை]
3. ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக காட்டும் மிதமிஞ்சிய வைராக்கியம் மற்றவர்களுடன் தொடர்புகொள்கையில் சாதுரியம், ஒற்றுணர்வு, கனிவு ஆகியவை இல்லாதிருப்பதை சரியானதாக்கிவிடாது. (1 கொ. 13:2, 3) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 10/15 பக். 31 பாரா 5-ஐக் காண்க.]
4. காலத்திலும் தரத்திலும் முதன்மையாக இருப்பதனால் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதை பைபிள் ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என குறிப்பிடுகிறது. (வெளி. 20:6) [w-TL96 10/15 பக். 6 பாரா 5]
5. கலாத்தியர் 5:26-ல் (NW) உள்ள மூலவாக்கியம் மெய் கிறிஸ்தவர்களுக்கு எல்லா விதமான போட்டி ஸ்போட்ஸுகளையும் கேம்ஸுகளையும் தடை செய்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; g-TL95 12/8 பக். 15 பாரா 8-ஐக் காண்க.]
6. 2 கொரிந்தியர் 10:4-ல் ‘எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயில்லை’ என்று பவுல் குறிப்பிட்டபோது, சபையை பொய்ப் போதகங்களுக்கு எதிரே பாதுகாப்பதற்கு, வஞ்சக சூழ்ச்சி, பகட்டாய் தொனிக்கும் மொழிநடை அல்லது உலகப்பிரகாரமான போராயுதங்கள் போன்ற மாம்சத்துக்கேற்ற போராயுதங்களைக் கிறிஸ்தவர்கள் ஒருபோதும் நாடக்கூடாது என்று வலியுறுத்துகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; rs-TL பக். 271 பாரா 3-ஐக் காண்க.]
7. பிலிப்பியில் பவுல் சபையை ஸ்தாபித்து ஒருசில மாதங்களுக்குப் பிறகு, பிலிப்பியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட வினைமையான பிரச்சினைகளின் காரணமாக அவர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதினார். [si பக். 224 பாரா 3]
8. இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலில் ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையை வெகுமதியாக பெறுவதன்மூலம் 1 தீமோத்தேயு 3:16-ல் (NW) குறிப்பிட்டபடி, “ஆவியிலே நீதியுள்ளவரென்று அறிவிக்கப்பட்டார்;” இது அவர் முற்றிலுமாக நீதியுள்ளவர், மேலும் மேன்மையான ஸ்தானங்களுக்குத் தகுதியுடையவர் என்று தேவன் அறிக்கையிடுவதற்கு ஒப்பாக இருந்தது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 8/1 பக். 17 பாரா. 12-ஐக் காண்க.]
9. பிலிப்பியர் 1:23-ல் “தேகத்தைவிட்டுப் பிரிந்து” என்று குறிப்பிடப்பட்டது தெளிவாகவே பவுல் மரணத்துக்கு பின்பு உடனடியாக கிறிஸ்துவுடன் இருக்கும் வாய்ப்பை குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 3/1 பக். 30 பாரா 4-ஐக் காண்க.]
10. பவுல், தீமோத்தேயுவுக்கு எழுதின முதலாம் நிருபத்தை ரோமில் முதன்முறையாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கும், கடைசியாக சிறைப்படுத்தப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதினார். [si பக். 234 பாரா 2]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்காக ஒன்றுகூடி வருகையில், எவ்விதமாக கொரிந்துவிலிருந்த சிலர் சின்னங்களில் “அபாத்திரமாய்” பங்குகொண்டார்கள்? (1 கொ. 11:27) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 2/1 பக். 29 பாரா 17-ஐக் காண்க.]
12. கொரிந்து சபையின் நலனுக்கு அச்சுறுத்தலாக யார் இருந்ததானது, கொரிந்தியருக்கு தன்னுடைய இரண்டாம் கடிதத்தை எழுதும்படி பவுலைத் தூண்டியது? [si பக். 214 பாரா 2]
13. ஒரு கிறிஸ்தவர் தான் எந்தத் தவறும் செய்யவில்லையென்று ஒருவேளை நினைத்தாலும்கூட ஏன் வருத்தந்தெரிவிக்க மனமுள்ளவராக இருக்க வேண்டும்? [w-TL96 9/15 பக். 22 பாரா. 4, 7]
14. பவுல் எபேசியர்களுக்கு எழுதின கடிதத்தில், ‘பரிசுத்த இரகசியத்தின்’ எந்த முக்கியமான அம்சம் தெளிவுபடுத்தப்பட்டது? (எபே. 3:4-6, NW) [si பக். 223 பாரா 18]
15. கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவதில், இன்றுள்ள கிறிஸ்தவ ஊழியர்களுக்கு பவுல் எவ்விதத்தில் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்? [si பக். 217 பாரா 19]
16. நியாயப்பிரமாணம் ‘மீறுதல்களை வெளிப்படுத்திக்காட்ட கூடச் சேர்க்கப்பட்டது’ என்று சொன்னபோது அப்போஸ்தலனாகிய பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? (கலா. 3:19, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; uw-TL பக். 147 பாரா. 3-4-ஐக் காண்க.]
17. பிலிப்பியர் 1:3-7-ல் என்ன காரணங்களுக்காக பவுல் சகோதரர்களை பாராட்டுகிறார்; மேலும் அவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்? [si பக். 225 பாரா 12]
18. கிறிஸ்தவ ஊழியர்கள் அனைவரும் கொலோசெயர் 4:6-ல் உள்ள அறிவுரையை ஏன் பின்பற்றவேண்டும்? [si பக். 228 பாரா 13]
19. பெண்கள் ‘அடக்கத்தால் . . . தங்களை அலங்கரிப்பதையே’ தான் விரும்புவதாக அப்போஸ்தலனாகிய பவுல் தெரிவித்தபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார்? (1 தீ. 2:9, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; g90 6/22 பக். 19 பாரா 2-ஐக் காண்க.]
20. ‘சொற்களைப் பற்றிய தர்க்கங்களின்’ சம்பந்தமாக பவுல் 1 தீமோத்தேயு 6:4-ல் (NW) கொடுத்த அறிவுரைக்கு கிறிஸ்தவர்கள் ஏன் செவிசாய்க்கவேண்டும்? [si பக். 236 பாரா 15]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. இரண்டு கொரிந்தியர் புத்தகம் _________________________-விலிருந்து எழுதப்பட்டு _________________________ மூலமாக கொடுத்தனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. [si பக். 214 பாரா 2]
22. பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதின முதல் கடிதம் _________________________-ல் நம்முடைய புரிந்துகொள்ளுதலை விரிவாக்குவதற்கு அதிக பயனுள்ளதாயிருக்கிறது; ஏனென்றால் அதிலிருந்து அநேக மேற்கோள்களை அது கொடுக்கிறது. [si பக். 213 பாரா 23]
23. பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், _________________________ செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவிலுள்ள _________________________னாலே நீதிமான்களாக தீர்க்கப்படமுடியும் என்றும் இதனால் _________________________ கிறிஸ்தவர்களுக்கு அவசியமற்றது என்றும் நிரூபிக்கிறார். [si பக். 218 பாரா 6]
24. பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதின தன்னுடைய முதல் கடிதத்தில், இயேசு கிறிஸ்துவின் _________________________ பற்றி நான்கு தடவை குறிப்பிடுகிறார்; இந்தப் போதனையில் சபையினர் காட்டிய ஆர்வமே இதற்கு காரணமென தெரிகிறது. [si பக். 231 பாரா 15]
25. தெசலோனிக்கேயர்களுக்கு எழுதின இரண்டாம் கடிதம் _________________________-ம் ஆண்டு _________________________விலிருந்து _________________________ எழுதினார். [si பக். 232 பாரா 4]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. பவுல் தன்னுடைய ஊழியத்தின்மூலம் தன் பிழைப்பை நடத்துவதற்கான உரிமையை குறித்து விவாதிக்கும்போது, போரடிக்கிற மிருகங்களின் வாய்களைக் கட்டக்கூடாதென்றும் ஆலய சேவையில் (லேவியர்கள்; நிதனீமியர்கள்; ஆரோனின் ஆசாரிய குடும்பத்தினர்) பலிபீடத்திலிருந்து தங்களுடைய பங்கை பெற்றுக்கொண்டனர் என்றும் (டால்முட்; மிஷ்னா; மோசேயின் நியாயப்பிரமாணம்) சொன்னதை குறிப்பிட்டுக் காட்டினார். [si பக். 213 பாரா 24]
27. பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய கடிதம், யெகோவாவின் ஸ்திரீயை (பூமிக்குரிய எருசலேம்; மேலான எருசலேம்; புதிய எருசலேம்) என அடையாளங்காட்டுவதன் மூலம் ஏசாயா 54:1-6-ஐ விளக்குகிறது. (கலா. 4:21-26) [si பக். 219 பாரா 16]
28. எபேசியர் 1:10-ல் (NW) உள்ள “நிர்வாகம்” (மேசியானிய ராஜ்யத்தை; ஆளும் குழுவை; கடவுள் தம்முடைய வீட்டாரின் விவகாரங்களை கையாளும் முறையை) குறிக்கிறது. [si பக். 221 பாரா 8]
29. 2 தெசலோனிக்கேயர் 2:3-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘கேட்டின் மகன்’ (யூதேய மதத்தாரோடு; கிறிஸ்தவ மண்டல குருவர்க்கத்தினரோடு; மகா பாபிலோனோடு) அடையாளப்படுத்தப்படலாம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 8/1 பக். 22 பாரா 11-ஐக் காண்க.]
30. 1 கொரிந்தியர் 12:31-ல் “அதிக மேன்மையான வழி” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது (சத்தியத்தின்; அன்பின்; ஆவிக்குரிய வரங்களால் நிரம்பிய வாழ்க்கையின்) வழி. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 10/15 பக். 27 பாரா 3-ஐக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
1 கொ. 10:11, 12; 2 கொ. 4:7; 2 கொ. 8:15; பிலி. 4:6, 7; 2 தெ. 1:7, 10, 11
31. ஒரு நபர் தன் வாழ்க்கையில் கிறிஸ்தவ ஊழியத்தை முதன்மையாக வைக்கும்போது, அவர் கடவுள் கொடுக்கும் வல்லமையை உணருகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 3/1 பக். 29 பாரா 5-ஐக் காண்க.]
32. மோசேயின் கீழிருந்த இஸ்ரவேலருடைய எச்சரிக்கையூட்டும் முன்மாதிரியை நாம் கருத்தில்கொண்டு சுயபுத்தியில் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவேண்டும். [si பக். 213 பாரா 23]
33. பொருள்சம்பந்தமான ஆஸ்திகளையுடைய கிறிஸ்தவர்கள் கொடுக்கிற தாராளமான வெகுமதிகள், பொருளாதார குறைவுள்ள இடங்களில் இருப்போரின் தேவைகளை ஈடுசெய்வதற்கு உதவலாம். அதேநேரத்தில் இந்தத் துன்பப்பட்டோரின் வைராக்கியமும் சகிப்புத்தன்மையும் கொடையாளர்களுக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதாக இருக்கலாம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL93 12/15 பக். 21 பாரா 20-ஐக் காண்க.]
34. நாம் நற்செய்தியை பிரசங்கிப்பதில் ஒருபோதும் பின்தங்கிவிடக்கூடாது; ஏனெனில், பைபிளின்படி, இன்று உயிர்வாழுகிறவர்களில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு வரையாக தொடர்ந்து வாழ்ந்து, மெய் வணக்கத்தின் எதிரிகளாக தீர்க்கப்படவிருப்பவர்கள் நித்திய அழிவைப் பெற்றுக்கொள்வர். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 5/1 பக் 19 பாரா 4-ஐக் காண்க.]
35. அதிக சோதனையான சூழ்நிலைமையிலும்கூட யெகோவா மனசாந்தியையும் அமைதியையும் தருகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 11/1 பக். 30 பாரா. 19-20-ஐக் காண்க.]