தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 1 முதல் ஆகஸ்ட் 21, 2000, வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. எப்பீராயீம் மனிதரின் நியாயமற்ற வாக்குவாதத்திற்கு கிதியோன் அளித்த பதில் அவருடைய சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் காட்டியது. மேலும், அது அவர்களுடைய தவறான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அதேசமயம் சமாதானத்தை காக்கவும் உதவியது. (நியா. 8:1-3) [வாராந்தர பைபிள் வாசிப்பு]
2. “நாம் தேவனைக் கண்டோம்” என மனோவா சொன்னபோதிலும், உண்மையில் அவரும் அவருடைய மனைவியும் பார்த்தது யெகோவாவையல்ல. மனித உருவில் வந்த கடவுளுடைய தூதனையே. (நியா. 13:22) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w88 5/15 பக். 23 பாரா 3-ஐக் காண்க.]
3. தான் மதிக்கப்பட்டு தன் துணைவரால் அருமையாக நேசிக்கப்படுவதை உணருவது மனைவிக்கு எவ்வளவு அவசியமோ அவ்வளவுக்கு, கணவனும் தன் மனைவி தனக்கு மரியாதை காண்பிக்கிறாள் என்பதை உணருவது அவசியம். [kl-TL பக். 144 பாரா 12]
4. நம்முடைய தேவைகளை கேட்பதே நம் ஜெபங்களில் பிரதானமாக இருக்க வேண்டும். [kl-TL பக். 155 பாரா 13]
5. இஸ்ரவேல் தேசத்தை எந்தவித வழிநடத்துதலுமின்றி யெகோவா கைவிட்ட காலப்பகுதியையே நியாயாதிபதிகள் 21:25 குறிப்பிடுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 6/15 பக். 22 பாரா 16-ஐக் காண்க.]
6. உடன்படிக்கை பெட்டிமீது இருந்த கேருபீன்களின் உருவம், யெகோவாவின் ராஜரீக பிரசன்னத்தை சுட்டிக்காட்டியது. எனவேதான், அவர் “கேருபீன்களின் மேல் [அல்லது, “மத்தியில்”] வாசமாயிருக்கிறவர்” என சொல்லப்படுகிறார். (1 சா. 4:4, NW அடிக்குறிப்பு) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w80 11/1 பக். 29 பாரா 2-ஐக் காண்க.]
7. மிக இக்கட்டான சூழ்நிலையில் சவுலின் வீரர்கள் இரத்தத்தை சாப்பிட்டபோது, அதற்காக அவர்கள் தண்டிக்கப்படவில்லை. ஒருவருடைய உயிரைக் காப்பாற்ற, நியாயமான காரணங்களுக்காக தெய்வீக சட்டங்களை எப்போதாவது மீறலாம் என இது அர்த்தப்படுத்துகிறது. (1 சா. 14:24-35) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 4/15 பக். 31 பாரா. 7-9-ஐக் காண்க.]
8. “இணங்கவைத்தல்” (persuation) என்ற பதத்தை புத்திசாலித்தனத்தோடும், தந்திரமாக காரியத்தைச் சாதிப்பதோடும் சிலர் தொடர்புபடுத்துகின்றனர். என்றபோதிலும், அதற்கு சாதகமான அர்த்தமும் உண்டு. அதாவது நம்பவைத்து, தெளிவான, நியாயமான விவாதங்கள் வாயிலாக ஏற்படும் மனமாற்றத்தை குறிக்கிறது. (2 தீ. 3:14, 15, NW) [w-TL98 5/15 பக். 21 பாரா 4]
9. “ஜீவப்பை” என்பது பாதுகாப்பையும் ஜீவனையும் குறிக்கும் தெய்வீக ஏற்பாட்டை அர்த்தப்படுத்துகிறது. கடவுளின் பார்வையில் இரத்தப்பழியை தவிர்த்திருந்தால் இது தாவீதுக்கு நன்மை அளித்திருக்கும். (1 சா. 25:29, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 6/15 பக். 14 பாரா 3-ஐக் காண்க.]
10. 2 சாமுவேல் 7:16-ல் குறிப்பிட்டுள்ள தாவீதின் ராஜ்ய உடன்படிக்கை, வித்தின் வம்சாவளியை இன்னும் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது. மேலும், தாவீதின் வம்சத்தில் வரும் ஒருவர் “என்றென்றைக்கும்” ஆளுவார் என்பதற்கு சட்டரீதியான உத்தரவாதம் இது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL90 2/1 பக். 14 பாரா 21-பக். 15 பாரா 22-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. சங்கீதம் 34:18 என்ன உறுதியை அளிக்கிறது? [w-TL98 4/1 பக். 31 பாரா 2]
12. யோசேப்புக்கு பர்னபா என்ற சிறப்புப்பெயர் கொடுக்கப்பட்டது எதை சுட்டிக்காட்டுகிறது? (அப். 4:36) [w-TL98 4/15 பக். 20 பாரா 3-ன் அடிக்குறிப்பு]
13. யெகோவாவுக்கும் மேலாக தன் மகன்களை ஏலி மதித்தார் என பைபிள் பதிவு ஏன் குறிப்பிடுகிறது? (1 சா. 2:12, 22-24, 29) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 9/15 பக். 13 பாரா 14-ஐக் காண்க.]
14. ‘நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே நமக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறாரென்றால்’ உதவிக்காக ஏன் கடவுளிடம் ஜெபிக்க வேண்டும்? [kl-TL பக். 151 பாரா 4]
15. 1 சாமுவேல் 1:1-7-ன்படி, சாமுவேலின் குடும்பம் எதற்கு சிறப்புமிக்க உதாரணம்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 3/1 பக். 16 பாரா 12-ஐக் காண்க.]
16. ‘ஐசுவரியத்தின் வஞ்சகம்’ எதை அர்த்தப்படுத்துகிறது? (மத். 13:22, தி.மொ.) [w-TL98 5/15 பக். 5 பாரா 1]
17. யெகோவா அபிஷேகம் செய்த தாவீதை, அவரைவிட வயதில் மூத்தவராகிய யோனத்தான் ஏற்றுக்கொண்டார் என்பதை எப்படி காட்டினார், இன்று இது எதை குறிக்கிறது? (1 சா. 18:1, 3, 4) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 6/1 பக். 24, 26 பாரா. 4, 13-ஐக் காண்க.]
18. யோபு ‘உத்தமரும் சன்மார்க்கருமாக’ இருந்தாலும், அவர் பரிபூரணமானவர் அல்ல என்பதை யோபு புத்தகம் எப்படி காட்டுகிறது? (யோபு 1:8) [w-TL98 5/1 பக். 31 பாரா 1]
19. “உங்களை ஊக்கமாய்ப் பிரயாசத்திற்கு உட்படுத்துங்கள்” என்ற சொற்றொடர் சுட்டிக்காட்டுவது என்ன? (லூக். 13:24, NW) [w-TL98 6/15 பக். 31 பாரா. 1, 4]
20. மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்கையில், 2 சாமுவேல் 12:26-28-லுள்ள என்ன முக்கியமான பாடத்தை இருதயத்தில் ஏற்க வேண்டும்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL93 12/1 பக். 19 பாரா 19-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. உண்மைப்பற்றுறுதி திருமணத்துக்கு _________________________ _________________________ கொடுக்கிறது. [kl-TL பக். 141 பாரா 6]
22. பொ.ச. முதல் நூற்றாண்டில், யெகோவா _________________________ பிறப்பித்தார். சபைகள் ஏற்படுத்தப்பட்டன, அவை அப்போஸ்தலராலும் மூப்பர்களாலும் ஆன ஒரு _________________________ வழிநடத்துதலின்கீழ் இயங்கின. (அப்போஸ்தலர் 15:22-31) [kl-TL பக். 160 பாரா 3]
23. கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதன் அர்த்தம் _________________________. தம்முடைய _________________________ நிறைவேற்ற தேவையான எதையும் யெகோவா செய்ய முடியும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. [w-TL98 5/1 பக். 5 பாரா 3]
24. சபையின் பிராந்தியத்திலுள்ள எல்லாருக்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பது _________________________ ஆட்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழியாகவும் உங்களுக்கு _________________________ இருக்கிறது என்பதை நிரூபிக்கும் நற்கிரியையாகவும் இருக்கிறது. [kl-TL பக். 175 பாரா 9]
25. உண்மையான நீதிமான், கடவுளின் _________________________ கடைப்பிடிப்பவனாக மட்டுமல்ல, அவரது _________________________ பின்பற்றுபவனாகவும் இருக்க வேண்டும் என நல்ல சமாரியனைப் பற்றிய இயேசுவின் நீதிக்கதை காட்டுகிறது. (லூக். 10:29-37) [w-TL98 7/1 பக். 31 பாரா 2]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. ஜெபம் என்பது (வெற்று சடங்காசாரமே; ஏதோ ஒன்றைப் பெறுவதற்கான வழியே; கடவுளோடு நெருங்கிய ஓர் உறவை வைத்துக்கொள்ளும் வழியே.) [kl-TL பக். 150 பாரா 3]
27. (சாமுவேல்; தாவீது; சவுல்) ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டபோது, இஸ்ரவேலில் நியாயாதிபதிகளுடைய சகாப்தம் முடிவுக்கு வந்தது. அதன்பின் கொஞ்ச காலத்திலேயே யெகோவாவின் உதவியோடு அவர் (அம்மோனியரை; மோவாபியரை; பெலிஸ்தரை) தோற்கடித்தார். (1 சா. 11:6, 11) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 12/15 பக். 9 பாரா 2-பக். 10 பாரா 1-ஐக் காண்க.]
28. சிறந்த மிஷனரியாகவும் கண்காணியாகவும் வருமளவு தீமோத்தேயுவுக்கு ‘பரிசுத்த வேத எழுத்துக்களை’ பயிற்றுவிப்பதில் முதன்மையாக விளங்கியது (அப்போஸ்தலனாகிய பவுலே; அவருடைய தகப்பனே; அவருடைய தாயும் பாட்டியுமே). (2 தீ. 3:14, 15; பிலி. 2:19-22) [w-TL98 5/15 பக். 8 பாரா 3-பக். 9 பாரா 5]
29. முழுக்காட்டுதல் (உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தின் முடிவு; யெகோவாவின் சாட்சியாக வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு செய்யும் சேவையின் ஆரம்பம்; இரட்சிப்புக்கு உத்தரவாதம்). [kl-TL பக். 178 பாரா 17]
30. யெகோவா தேவனை நேசித்து பரதீஸிய பூமியில் வாழ்பவர்களுக்கு (நித்தியமான எதிர்காலம், ஆயிரம் ஆண்டு வாழ்க்கை, 70 அல்லது 80 ஆண்டுகள் அடங்கிய வாழ்நாளே) இருக்கும். [kl-TL பக். 190 பாரா 22]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்: நியா.
11:30, 31; 1 சா. 15:22; 30:24, 25; 2 இரா. 6:15-17; யாக். 5:11
31. தமது மக்களை காப்பாற்றுவதற்கு தம் விருப்பப்படி பரலோக சேனையை பயன்படுத்தப்போவதாக யெகோவா உறுதியளிக்கிறார். [w-TL98 4/15 பக். 29 பாரா 5]
32. சில சமயங்களில் வேதனையையும் நஷ்டத்தையும் உட்படுத்தினாலும் தங்களுடைய ஒப்பந்தங்களை மீறாமல் இருக்க வேண்டிய பொறுப்பு சபை கண்காணிகளுக்கு இருக்கிறது. [w-TL99 9/15 பக். 10 பாரா. 3-4]
33. சோதனைகளின் மத்தியில் உத்தமத்தன்மையை காத்துக்கொள்ளுதல், யெகோவா தேவனிடமிருந்து அதிக நன்மைகளைப் பெற வழிவகுக்கும். [w-TL98 5/1 பக். 31 பாரா 4]
34. கடவுளுக்கு வெறுமனே பலிகளை செலுத்துவதை அல்ல, தெய்வீக நியமங்களுக்கு கீழ்ப்படிவதையே கடவுளில் மெய்யான அன்பு தேவைப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 6/15 பக். 5 பாரா 1-ஐக் காண்க.]
35. இன்று அவருடைய அமைப்பில் முக்கிய பொறுப்பில் இல்லாதவர்களுடைய சேவையையும் யெகோவா மிகவும் போற்றுகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 9/1 பக். 28 பாரா 4-ஐக் காண்க.]