ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: வரும் மாதங்களில் ஒவ்வொரு வாரத்திற்கும் உண்டான ஊழியக் கூட்ட அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். இந்த வருட “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாட்டிற்கு செல்வதற்கேற்ப இதில் தேவையான மாற்றங்களை சபைகள் செய்துகொள்ளலாம். முடிந்தால், மாநாட்டிற்கு முன் நடக்கும் கடைசி ஊழியக் கூட்டத்தில் இம்மாத உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை 15 நிமிடத்திற்கு மறுபார்வை செய்யுங்கள். ஒவ்வொரு மாநாட்டு தினத்தன்று காலையும் மதியமும், தங்கள் கையிலுள்ள நிகழ்ச்சிநிரல் அட்டவணையை முன்னதாகவே பார்த்து நிகழ்ச்சிகளில் என்ன பேசப்படும் என்பதை ஆவலுடன் எதிர்பார்க்குமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். இது நிகழ்ச்சிநிரலை நன்கு கவனிக்கவும், சுருக்கமான, சரியான குறிப்புகளை எடுக்கவும் உதவும். மாநாட்டிற்கு அடுத்து இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் நடக்கும் ஊழியக் கூட்டத்தில் மாநாட்டின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யும் 30 நிமிட நிகழ்ச்சி இருக்கும். இந்தப் பாகத்தை மூன்று தகுதிவாய்ந்த சகோதரர்கள் கையாளுவார்கள், கேட்கப்படும்போது சபையிலுள்ள மற்றவர்களும் நன்கு தயாரித்த குறிப்புகளை சுருக்கமாக சொல்வார்கள். மாநாட்டில் கற்றுக்கொண்ட விஷயங்கள் எவ்வாறு ஒருவருடைய சொந்த வாழ்க்கையிலும் வெளிஊழியத்திலும் பொருந்துகிறது என அந்தக் குறிப்புகளில் சொல்லலாம். ஒன்றிரண்டு சுருக்கமான அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஊழியக் கூட்டத்தின் இந்தப் பாகம் பயனுள்ளதாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்க வேண்டுமானால் நல்ல தயாரிப்பு மிக முக்கியம்.
செப்டம்பர் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “யெகோவாவின் ஆசீர்வாதம் நம்மை செல்வந்தராக்குகிறது.” ஆரம்ப குறிப்புகளை ஒரு நிமிடத்திற்குள் முடித்துக்கொண்டு, கேள்வி பதில் கலந்தாலோசிப்பு மூலம் தொடருங்கள்.—உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 804, பாராக்கள் 6 மற்றும் 7-ஐ பார்க்கவும்.
20 நிமி: “சம்பாஷணையை துவக்க துண்டுப்பிரதிகளை பயன்படுத்துங்கள்.” பிராந்தியத்தில் பயன்படுத்தும் ஏதேனும் நான்கு துண்டுப்பிரதிகளைக் குறித்து கலந்தாலோசியுங்கள். ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளுக்கேற்ப கேள்வி கேளுங்கள். அதோடு, சம்பாஷணையை துவங்கவும், முடிந்தால் பைபிள் படிப்பிற்கு வழிநடத்தவும் எவ்வாறு அந்தக் கேள்விகளை பயன்படுத்தலாம் என சபையாரை சொல்லச் சொல்லுங்கள். இம்மாதத்திற்குரிய அளிப்புடன் இரு துண்டுப்பிரதிகளைக் கொண்டு இதை எவ்வாறு செய்யலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 57, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: கடந்த வருடத்தில் என்ன சாதித்தோம்? ஊழியக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. 2000 ஊழிய ஆண்டிற்கான சபையின் அறிக்கையிலிருந்து சில முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். அப்போது செய்திருக்கும் நல்ல முன்னேற்றங்களுக்காக சாதனைகளுக்காக மனதார பாராட்டுங்கள். இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டிய விஷயங்களை சுட்டிக்காட்டுங்கள். கூட்டங்களுக்கு வருவது, வெளி ஊழியத்திற்கு தொடர்ந்து வருவது, பைபிள் படிப்புகளை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது போன்றவற்றை சபை எவ்வாறு செய்திருக்கிறது என்பதை முக்கியப்படுத்திக் காட்டுங்கள். வரும் வருடத்திற்கு நடைமுறையான சில இலக்குகளை ஏற்படுத்துங்கள்.
20 நிமி: “மக்களின் உயிர் ஆபத்தில்!” சபையார் கலந்தாலோசிப்பு. கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.
பாட்டு 30, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 25-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாதத்திற்கான ஊழிய அறிக்கையை போடும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். கேள்விப் பெட்டியை கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: “பரிசுத்தமானவற்றை நீங்கள் மதிக்கிறீர்களா?” மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. மாவட்ட மாநாட்டின் மூன்று நாள் நிகழ்ச்சிகளுக்கும் ஆஜராவது ஏன் முக்கியம் என்பதை வழியுறுத்திக் காட்டுங்கள்.
15 நிமி: “எல்லாவற்றையும் அன்போடு செய்யுங்கள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. தங்கும் வசதிகளுக்காக சங்கம் கொடுத்திருக்கும் வழிமுறைகளை சிலர் பின்பற்றாதபோது என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை சொல்லுங்கள். உள்ளூருக்கு பொருந்தும் சில குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
பாட்டு 201, முடிவு ஜெபம்.
அக்டோபர் 2-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: நம் பத்திரிகைகளின் மதிப்பு ஒருபோதும் குறைவதில்லை. பழைய காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் குவிந்துவிட்டிருந்தால் அவற்றை என்ன செய்கிறீர்கள்? சில பிரஸ்தாபிகள் இதிலுள்ள பழைய கட்டுரைகளெல்லாம் இப்போது பொருந்தாது என அவற்றை தூக்கியெறிந்துவிட நினைக்கின்றனர். மாறாக, பழைய பத்திரிகைகளை நம்முடன் எடுத்துச் சென்று பொருத்தமான சமயங்களில் அவற்றை அளிக்கும்படி நம் ராஜ்ய ஊழியம், செப்டம்பர் 1993, பக்கம் 3-ல் உற்சாகப்படுத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள், தொழில் செய்பவர்கள், வயதானவர்கள், இளைஞர்கள் போன்றோரின் ஆர்வத்தை தூண்டும் கட்டுரைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றை உடனே கொடுக்க நம்மிடம் எப்போதும் வைத்திருக்கலாம். பழைய கட்டுரைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, எவ்வாறு அளிப்பது என நடித்துக் காட்டுங்கள். அவ்வாறு பழைய பத்திரிகைகளை வெற்றிகரமாக அளித்திருக்கும் பிரஸ்தாபிகளின் அனுபவங்களை சொல்லுங்கள்.
15 நிமி: “தேவனுடைய வார்த்தைகளுக்கு கூர்ந்து கவனம் செலுத்துங்கள்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு நிகழ்ச்சிநிரல் துவங்கும் முன்னமே நாம் ஏன் நம் இருக்கைகளுக்கு வந்துவிட வேண்டும் என்பதை விளக்குங்கள்.
15 நிமி: “கடவுளை மகிமைப்படுத்தும் நன்னடத்தை.” மூப்பர் ஒருவர் ஒரு குடும்பத்துடன் சம்பாஷிக்கிறார். பொது இடங்களில் இருக்கும்போது ஒழுங்கு, நல்ல பழக்கவழக்கம், சுத்தம், நேர்த்தியான தோற்றம், நன்னடத்தை போன்றவற்றை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை கலந்தாலோசிக்கின்றனர்.
பாட்டு 203, முடிவு ஜெபம்.