தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
செப்டம்பர் 4 முதல் டிசம்பர் 18, 2000, வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. தாவீதுக்கு விரோதமான சீமேயியின் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்ததன் காரணமாகவே சீமேயியைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லி அபிசாயை தாவீது அடக்கினார். (2 சா. 16:5-13) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 5/1 பக். 32 பாரா 3-ஐக் காண்க.]
2. சுத்தமான, சரியாக பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியினால், தனிப்பட்ட விதத்தில் கடவுளோடு நெருங்கிய உறவை அனுபவிப்போம். இரட்சிப்பிற்கு அது இன்றியமையாததும்கூட. (எபி. 10:22; 1 பே. 1:15, 16) [w-TL98 9/1 பக். 4 பாரா 4]
3. நியாயமான கோபம் சரியானதே. ஆனாலும் அதனால் இடறி விழும் ஆபத்து எப்போதும் உள்ளது. [w-TL99 8/15 பக். 8, 9]
4. இயேசுவின் ஆயிர வருட ஆட்சியை சாலொமோனின் சமாதானமும் செழிப்புமுள்ள 40 வருட ஆட்சியுடன் ஒப்பிடலாம். (1 இரா. 4:24, 25, 29) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w90 6/1 பக். 6 பாரா 5-ஐக் காண்க.]
5. அபியா நல்லடக்கம் செய்யப்பட்டது, யெரொபெயாமின் வீட்டாரில் அவன் மட்டுமே யெகோவாவின் உண்மையான வணக்கத்தான் என்பதற்கு தெளிவான சான்றாகும். (1 இரா. 14:10, 13, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL95 4/1 பக். 12 பாரா 11-ஐக் காண்க.]
6. கிறிஸ்தவ முழுக்காட்டுதலைப் பெறுவது, ஒருவர் கடவுளின் முதிர்ச்சியுள்ள ஊழியராக ஆவதை குறிக்கிறது. [w-TL98 10/1 பக். 28 பாரா 2]
7. மனிதசக்திக்கு அப்பாற்பட்ட தைரியத்தையும், பயமே ஏற்படாதபடிக்கு பாதுகாப்பையும் எலியாவுக்கு யெகோவா கொடுத்தார். (1 இரா. 18:17, 18, 21, 40, 46) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 1/1 பக். 31 பாரா 2-ஐக் காண்க.]
8. மன்னா என்பது இயற்கையாக கிடைத்த உணவுதான். [w-TL99 8/15 பக். 25]
9. எல்லா தேசத்தையும் சேர்ந்த உண்மையுள்ள ஆண்களையும் பெண்களையும் ஏற்றுக்கொள்ள யெகோவா தயாராக இருக்கிறார் என்பதை எலிசாவையும் நாகமானையும் உட்படுத்திய சம்பவத்திலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். இன்றைய உலகில் பரவலாக காணப்படும் குறுகிய மனப்பான்மையுடைய மத பகைமைக்கு யெகோவா இடங்கொடுப்பதில்லை என்பதை இது நமக்கு நிச்சயப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 6/15 பக். 23-ஐக் காண்க.]
10. கடவுளுடைய சட்டத்திற்கு அரசன் அளிக்கும் விளக்கமே முடிவானது என்பதையும் அதற்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் 2 இராஜாக்கள் 11:12-ல் ‘சாட்சி ஆகமம்’ அவன் கையில் கொடுக்கப்பட்டது குறிப்பால் உணர்த்தியது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 2/1 பக். 31 பாரா 6-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. தேவபக்தியுள்ள பெற்றோர் உலகப்பிரகாரமான வேலையை தேர்ந்தெடுக்க பிள்ளைகளுக்கு உதவும்போது 1 யோவான் 2:15-17-க்கு இசைவாக எதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்? [w-TL98 7/15 பக். 5 பாரா 2]
12. 2 சாமுவேல் 18:8-ல், “பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும் காடு பட்சித்த ஜனம் அதிகம்” என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 3/1 பக். 31-ஐக் காண்க.]
13. கோலியாத்தின் உறவினராகிய இராட்சத புத்திரருக்கு இன்று யாரை ஒப்பிடலாம், அவர்கள் என்ன செய்ய முயலுகிறார்கள்? (2 சா. 21:15-22) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 6/1 பக். 20 பாரா 8-ஐக் காண்க.]
14. சகாக்களின் அழுத்தம் என்றால் என்ன? [w-TL99 8/1 பக். 22]
15. ஓய்வுநாளை மீறியதற்காக கொல்லப்பட்ட மனிதனைப் பற்றிய சம்பவத்திலிருந்து என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (எண். 15:35) [w-TL98 9/1 பக். 20 பாரா 2]
16. ‘சாலொமோனுடைய ஞானத்தை’ கேட்பதற்காக நெடுந்தூரம் பயணப்பட்டு வந்த சேபாவின் ராஜஸ்திரீயை நாம் எந்த விதத்தில் பின்பற்றலாம்? (1 இரா. 10:1-9) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 7/1 பக். 31 பாரா. 1-2-ஐக் காண்க.]
17. 1 இராஜாக்கள் 17:3, 4, 7-9, 17-24-ன்படி, யெகோவா மீது எலியா விசுவாசத்தைக் காண்பித்த மூன்று வழிகள் யாவை? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 4/1 பக். 19 பாரா 5-ஐக் காண்க.]
18. ஆகாபுக்கு நாபோத் தன் திராட்ச தோட்டத்தைக் கொடுக்க மறுத்ததற்கு ஏன் பிடிவாதம் மட்டுமே காரணம் அல்ல? (1 இரா. 21:2, 3) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 8/1 பக். 13 பாரா 18-ஐக் காண்க.]
19. 2 இராஜாக்கள் 6:16-லுள்ள வார்த்தைகள் எப்படி இன்று யெகோவாவின் ஊழியர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 6/15 பக். 18 பாரா 5-ஐக் காண்க.]
20. பணம் கொடுத்து பதவி வாங்குவதைப்பற்றி உண்மை கிறிஸ்தவர்கள் என்ன விதங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? [w-TL98 11/15 பக். 28 பாரா 5]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. உண்மையான கிறிஸ்தவர், _________________________ இடமளித்து, _________________________ பிரியமில்லாத பழக்கவழக்கங்களில் ஈடுபடக்கூடாது. (நீதி. 29:25; மத். 10:28) [w-TL98 7/15 பக். 20 பாரா 5]
22. அகிரிப்பா ராஜாவிடம் சாட்சிகொடுக்கும்போது, பவுல் தனக்கும் அகிரிப்பாவிற்கும் _________________________ அதிக கவனம் செலுத்துவதன்மூலம் _________________________ நடந்துகொண்டார். (அப். 26:2, 3, 26, 27) [w-TL98 9/1 பக். 31 பாரா 3]
23. கடவுளை _________________________ அவர் உருவமோ பண்புகளோ இல்லாத வெறும் ஒரு சக்தி என்பதாக சிலர் நினைக்கலாம்; ஆனால் ஒருவர் தவறாமல் ஊக்கமாக _________________________ ‘காணக்கூடாதவரை காணவும்’ முடியும். (எபி. 11:27, NW) [w-TL98 9/15 பக். 21 பாரா. 3-4]
24. சீரிய படைத்தலைவனாகிய _________________________ அனுபவத்தில் பார்த்தபடி, சிலசமயங்களில் கொஞ்சம் _________________________ இருந்தால் அதிக நன்மைகளைப் பெறலாம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 2/1 பக். 3 பாரா 6-பக். 4 பாரா 1-ஐக் காண்க.]
25. யோனதாபின் இருதயம் அரசனாகிய யெகூவுடன் ஒத்திருந்ததுபோல, இன்று _________________________ பெரிய யெகூவாகிய _________________________ முழு இருதயத்துடன் ஏற்றுக்கொண்டு பூமியில் அவரை பிரதிநிதித்துவம் செய்யும் _________________________ ஒத்துழைக்கிறார்கள். (2 இரா. 10:15, 16) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL98 1/1 பக். 13 பாரா. 5-6-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. ‘இஸ்ரவேலை இலக்கம் பார்ப்பதன்மூலம்’ பாவம் செய்யும்படி (சாத்தானால்; யெகோவாவால்; யோவாபால்) தாவீது தூண்டப்பட்டார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 10/15 பக். 5 பாரா 2-ஐக் காண்க.]
27. எருசலேமில் யெகோவாவின் ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா மற்றவர்கள் சார்பில் (பணிவோடு; ஞானமாக; ஆலயத்தை கட்டி முடித்த பெருமையுடன்) ஜெபம் செய்தார். (1 இரா. 8:27) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 1/15 பக். 17 பாரா 7-ஐக் காண்க.]
28. கோட்பாடு சம்பந்தமான மற்றும் அமைப்பு சம்பந்தமான சரிப்படுத்துதல்கள் (1919; 1923; 1931)-ல் துவங்கி (1938; 1942; 1950)-ல் முடிவடைந்தன; இந்தக் காலப்பகுதியை சாலொமோன் எருசலேமில் ஆலயத்தையும் தன் வீட்டையும் கட்டின 20 வருடத்துடன் ஒப்பிடலாம். (1 இரா. 9:10) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 6/1 பக். 20 பெட்டியைக் காண்க.]
29. 2 இராஜாக்கள் 2:11-ல் சொல்லப்பட்டுள்ள ‘பரலோகம்’ என்ற சொல், (கடவுளின் ஆவிக்குரிய வாசஸ்தலத்தை; சடப்பொருளாலான பிரபஞ்சத்தை; பறவைகள் பறக்கிற, காற்று வீசுகிற இந்தப் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தை) குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 9/15 பக். 15 பெட்டியைக் காண்க.]
30. குடிமதிப்பெழுதும்படி கட்டளையிட்டவர் (மகா ஏரோது; அகஸ்து ராயன்; திபேரியு ராயன்) ஆவார்; அதன் விளைவாக இயேசு நாசரேத்தில் பிறக்காமல் பெத்லகேமில் பிறக்க வேண்டியதாயிற்று. [w-TL98 12/15 பக். 7 பெட்டியைக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்: சங். 15:4; எபி. 10:24, 25; 2 இரா. 3:11; கொலோ. 3:13; கலா. 6:10.
31. ஒன்றாக கூடிவரும்படி யெகோவா கட்டளையிட ஒரு காரணம், நல்ல சகவாசத்தால் நன்மையடையவே. [w-TL99 8/1 பக். 23]
32. முழு நிறைவிலும் நன்மையிலும் விளைவடையும் செயல்களைச் செய்வதில் நம் சிந்தனைகளையும் செயல்களையும் ஒருமுகப்படுத்துகையில் மற்றவர்களைப் பற்றிய நல்ல புரிந்துகொள்ளுதலும் நம்பிக்கையும் வளரும். அதோடு, சட்டென்று கோபப்படுவதற்கு வழிநடத்தும் தப்பெண்ணங்களும் சரிசெய்யப்படும். [w-TL99 8/15 பக். 9]
33. யெகோவாவின் இரக்கத்தை மதித்துணர்வது கோபத்தைக் கட்டுப்படுத்தி சிறிய குற்றங்குறைகளைப் பொறுத்துக்கொள்ள ஒருவரைத் தூண்டும். [w-TL98 11/1 பக். 6 பாரா 3]
34. விசேஷ சேவையிலிருக்கும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களை உபசரித்து அவர்களுக்கு பணிவுடன் ஊழியஞ்செய்வது ஒரு சிலாக்கியம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 11/1 பக். 30 பாரா 8-ஐக் காண்க.]
35. எதிர்பாராத சூழ்நிலைகளால் நிலைமை மோசமாகிவிட்டாலும், யெகோவாவுக்கு பயப்படுகிற ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பித்தருவதில் தான் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற தன்னால் ஆனதை எல்லாம் செய்வார். [w-TL98 11/15 பக். 27 பாரா 1]