அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: சிற்றேடுகள்: இருபதாம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகள், யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள். 192 பக்க பழைய புத்தகங்களையும் அளிக்கலாம். பிப்ரவரி: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்), வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, அல்லது சபையிலுள்ள 192 பக்க பழைய புத்தகங்கள் ஏதேனும். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பில் ஆர்வம் காட்டப்பட்டால் சந்தாவை அளிக்கலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளிக்கலாம்.
◼ 2002-ம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு வியாழன், மார்ச் 28, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைபெறும். இது முன்னதாகவே அறிவிக்கப்படுவதன் நோக்கம், ஒரே ராஜ்ய மன்றத்தை பயன்படுத்தும் பல சபைகள், வேறொரு மன்றத்தை புக் செய்யவும் அல்லது ரிசர்வ் செய்யவும், மற்ற வசதிகளை செய்யவுமே. நினைவு ஆசரிப்பு அமைதியாகவும் சுமுகமாகவும் நடப்பதற்காக, அந்த கட்டடத்தில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளால் எந்தவித இடையூறும் குழப்பமும் ஏற்படாது என்று அந்த மன்றத்து நிர்வாகத்திடம் மூப்பர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருப்பதால், நினைவு ஆசரிப்பு பேச்சாளரை நியமிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒரே சகோதரரை நியமிக்காமல் அல்லது சுழற்சிமுறையில் ஒருவர் மாறி ஒருவராக நியமிக்காமல், தகுதியான மூப்பர்களில் ஒருவரை மூப்பர் குழு தேர்ந்தெடுக்க வேண்டும். அபிஷேகம் பண்ணப்பட்ட மூப்பர் பேச்சு கொடுக்கும் நிலையில் இருந்தால் அப்போது அவரையே உபயோகிக்க சபைக்கு விலக்களிக்கப்படுகிறது.
◼ ஜனவரி 8-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்தில் ஆஜராகும் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவரும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய பிள்ளைகளுக்கென அடையாள அட்டையையும் பெற்றுக்கொள்ளலாம்.
◼ பிப்ரவரி முதல் மார்ச் 4 வரை, வட்டாரக் கண்காணிகள் கொடுக்கும் புதிய பொதுப் பேச்சின் தலைப்பு “நியாயத்தீர்ப்பு நாள்—அஞ்சுகிறீர்களா, ஆவலோடு எதிர்பார்க்கிறீர்களா?”
◼ இந்த வருடம் ஏப்ரல் 8, ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னதாகவே பேச்சு ஆரம்பமானாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களை சுற்றி அனுப்புவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்படக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதை தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். அன்றைய தினம் வெளி ஊழியத்திற்கான கூட்டத்தைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடத்தப்படாது என்பதால், காவற்கோபுரம் படிப்பை வேறொரு சமயம் நடத்துவதற்கு தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். வட்டாரக் கண்காணிகள் அந்த வாரத்தின்போது விஜயம் செய்யப்போகும் சபையின் சூழ்நிலைக்கேற்ப கூட்டங்களின் அட்டவணையில் மாற்றங்களை செய்ய வேண்டும். ஒவ்வொரு சபையும் தனிப்பட்ட விதமாக நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கதாக இருந்தாலும் அது எப்போதுமே சாத்தியமாவதில்லை. சாதாரணமாக ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் உபயோகிக்கையில் அன்றைய மாலை நிகழ்ச்சிக்காக வேறொரு இடத்தை உபயோகிக்க ஓரிரு சபைகள் ஏற்பாடு செய்யலாம். சாத்தியமானால், வருபவர்களை வரவேற்கவும், ஆர்வம் காட்டும் புதியவர்களை உற்சாகப்படுத்தவும், அந்நிகழ்ச்சியிலிருந்து முழு பயனை அடையவும், அடுத்த சபை தன் ஆசரிப்பை ஆரம்பிப்பதற்கு முன் சுமார் 40 நிமிடங்கள் இடைவெளி விடுவது நல்லது. காரிலிருந்து இறங்கி வரும்போதும் கூட்டம் முடிந்து கிளம்பும்போதும் வாகனங்களை நிறுத்துமிடத்தில் நெரிசலை தவிர்ப்பதற்கும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தது என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
◼ 2001-வது ஆண்டு நினைவு ஆசரிப்பு காலத்தின் விசேஷ பொதுப் பேச்சு ஏப்ரல் 1 ஞாயிறு அன்று கொடுக்கப்படும். அதன் தலைப்பு “யார் காப்பாற்றப்படுவர்?” அதற்கான குறிப்புத்தாள் தரப்படும். அந்த வார இறுதியில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு, வட்டார மாநாடு அல்லது விசேஷ மாநாட்டு தினம் போன்றவை இருந்தால், அந்த சபைகளில் இந்தப் பேச்சு ஏப்ரல் 9-ல் துவங்கும் வாரத்தில் கொடுக்கப்படும். ஏப்ரல் 1, 2001-க்கு முன்பாக எந்தச் சபையிலும் விசேஷ பேச்சை கொடுக்கக்கூடாது.
◼ ஜனவரி 8, 2001 முதல் விழித்தெழு! பத்திரிகை உருது மொழியில் மாதம் ஒருமுறை கிடைக்கும்.