ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பைபிள்—மனிதகுலத்தின் மிகப் பழமையான நவீனகால புத்தகம் என்ற வீடியோ பற்றி பிப்ரவரி 26-ம் தேதி துவங்கும் வாரத்தின் ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும். நம் ராஜ்ய ஊழியத்தில், இந்தப் பக்கத்திலேயே உள்ள கேள்விகளின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு இருக்கும்.
15 நிமி: “நற்செயல்களால் யெகோவாவை போற்றிப் புகழுங்கள்.”a அறிவிப்போர் ஆங்கில புத்தகத்தில் பக்கம் 187, பாராக்கள் 2-3-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “மற்றவர்களை எப்படி இணங்க வைப்பது.” இந்தக் கட்டுரையையும் 1998, மே 15, காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-லுள்ள கட்டுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளையும், பயனியர் அல்லது திறம்பட்ட பிரஸ்தாபி ஒருவருடன் சபை புத்தகப் படிப்பு நடத்துனர் கலந்தாலோசிக்கிறார். பக்கம் 23-லுள்ள “உங்கள் மாணாக்கரின் இருதயத்தை எட்டுதல்” என்ற பெட்டியையும் ஆராயுங்கள். தங்கள் பகுதியில் நிலவும் பொதுவான ஒரு பொய் மத நம்பிக்கையை தேர்ந்தெடுத்து, அதைப் பற்றிய பைபிளின் கருத்தை ஒருவருக்கு எப்படி புரிய வைப்பது என்பதை கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 208, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 19-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: “கடவுளின் வியத்தகு செயல்களை கவனியுங்கள்.”b ஏசாயா தீர்க்கதரிசனத்திடம் போற்றுதலை அதிகரிக்க செய்யும் சில படங்களை அந்தப் புதிய புத்தகத்திலிருந்து காட்டுங்கள்.
22 நிமி: “யெகோவாவின் பெயரையும் செயல்களையும் அறிவியுங்கள்.”c அநேகர் துணைப்பயனியர் ஊழியம் செய்ய முயற்சி எடுக்கும்படி உற்சாகப்படுத்துவதோடுகூட, மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகளவு ஊழியம் செய்வதற்கான சபையின் விசேஷ ஏற்பாடுகளையும் மூப்பர் மறுபார்வை செய்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் பயனியர் செய்த சிலர் பெற்ற திருப்தியைப் பற்றி சபைக்கு சொல்ல சொல்லுங்கள். தகுதியுள்ள செயலற்ற பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் நம்முடன் மீண்டும் ஊழியத்தில் சேர்ந்துகொள்ள உதவுவதிலும், தகுதியுள்ள பிள்ளைகளும் பைபிள் மாணாக்கர்களும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாவதற்கு உதவுவதிலும் கவனம் செலுத்துங்கள்.—நவம்பர் 2000, நம் ராஜ்ய ஊழியத்தில் கேள்விப் பெட்டியைக் காண்க.
பாட்டு 27, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 26-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்திற்கான ஊழிய அறிக்கைகளைப் போட்டுவிட்டுப் போக பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
12 நிமி: அறிவு புத்தகத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகள். மார்ச் மாதத்தில் அறிவு புத்தகத்தைக் கொடுப்பதற்கு ஏதேனும் அளிப்பை மனதில் தயாரித்திருக்கிறீர்களா? முந்தைய நம் ராஜ்ய ஊழியம் பிரதிகளின் (மார்ச், ஜூன், நவம்பர் 1996; ஜூன் 1997; மார்ச் 1998) கடைசி பக்கங்களில், வெளி ஊழியத்தில் பேசுவதற்கான ஆலோசனைகளைக் காண்பீர்கள்; அவற்றில் பல மறுசந்திப்புக்கான வழிமுறைகளையும் குறிப்பிடுகின்றன. இவற்றில் இரண்டு அல்லது மூன்று அளிப்புகளை கலந்தாலோசியுங்கள். பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கான நேரடி அணுகுமுறை பற்றிய நவம்பர் 1996-லுள்ள இரண்டு ஆலோசனைகளை நடித்துக்காட்டுங்கள். புதிய படிப்புகளை ஆரம்பிப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
25 நிமி: “பைபிள்—மனிதகுலத்தின் மிகப் பழமையான நவீனகால புத்தகம் வீடியோவிற்கு போற்றுதலை அதிகரித்தல்.” இந்தப் பக்கத்திலுள்ள கேள்விகளின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. 10 கோடிக்கும் அதிகமாக அச்சிடப்பட்டுள்ள புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், முழுமையாகவோ பகுதியாகவோ 37 மொழிகளில் கிடைப்பதையும், இன்று பெருமளவு விநியோகிக்கப்படும் புத்தகங்களில் ஒன்றாக திகழ்வதையும் வலியுறுத்துங்கள். இந்த வரிசையில், பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி என்ற மூன்றாவது வீடியோவைப் பற்றி ஏப்ரல் மாதத்தில் மறுபார்வை செய்வோம்.
பாட்டு 64, முடிவு ஜெபம்.
மார்ச் 5-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
18 நிமி: “யெகோவா பலம் தருகிறார்.”d பைபிள் வசனங்கள் எப்படி பொருத்தப்பட்டிருக்கின்றன என்பதை சபையாரிடம் கேளுங்கள்.
22 நிமி: “டெலிபோன் ஊழியத்தில் வெற்றி காண.”e இது ஊழியக் கண்காணியால் கையாளப்படும். 1999, டிசம்பர் 15, காவற்கோபுரம், பக்கம் 23, பாரா 17-லுள்ள ஊக்கமூட்டுதலையும் இதில் சேர்த்துக்கொள்ளுங்கள். நவம்பர் 2000, நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள, “பதிலளிக்கும் கருவியிடம் என்ன சொல்வீர்கள்?” என்ற பெட்டியை மீண்டும் கலந்தாலோசியுங்கள். டெலிபோன் ஊழியத்திற்காக எந்தெந்த பிராந்தியங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை விளக்குங்கள். இந்த ஊழியத்தில் வெற்றி கண்டவர்களின் அனுபவங்களை சுருக்கமாக சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 108, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a அறிமுக குறிப்புகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். பின்னர் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு தொடரட்டும்.
b அறிமுக குறிப்புகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். பின்னர் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு தொடரட்டும்.
c அறிமுக குறிப்புகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். பின்னர் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு தொடரட்டும்.
d அறிமுக குறிப்புகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். பின்னர் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு தொடரட்டும்.
e அறிமுக குறிப்புகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இருக்கட்டும். பின்னர் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு தொடரட்டும்.