அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பில் ஆர்வம் காட்டப்பட்டால் சந்தாவை அளிக்கலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளிக்கலாம். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளைத் துவங்குவதில் கவனம் செலுத்துங்கள்.
◼ ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்போதே திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். இது, தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளை செய்யவும் போதுமான பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் கைவசம் வைத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும். துணைப் பயனியர் ஊழியம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் சபையில் அறிவிக்கப்பட வேண்டும்.
◼ ஏப்ரல் 8, 2001, ஞாயிற்றுக்கிழமை அன்று நினைவு ஆசரிப்பு அனுசரிக்கப்படும். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களைத் தவிர வேறு எந்தக் கூட்டமும் அன்றைய தினம் இருக்காது. வேறொரு நாள் காவற்கோபுர படிப்பை நடத்துவதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை மூப்பர்கள் செய்ய வேண்டும்.
◼ தங்கள் சொந்த சந்தா உட்பட, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கான புதிய சந்தா, புதுப்பிக்கும் சந்தா அனைத்தையும் சபை அங்கத்தினர்கள், சபை மூலமாகவே அனுப்ப வேண்டும்.
◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் சொஸைட்டிக்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. தனிப்பட்ட விதத்தில் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை சபை சொஸைட்டிக்கு அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் அதை அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி —தமிழ், மலையாளம்
கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? —அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
◼ இந்தியாவில் கையிருப்பில் இல்லாதவை:
வேதாகமத்தின்பேரில் உட்பார்வை —ஆங்கிலம்
பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (டீலக்ஸ் சிறிய பதிப்பு; DLbi25)
பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு - (டீலக்ஸ்; DLbi12 ஒத்துவாக்கிய வசனங்களுடன்)
கடவுளைத் தேடி —ஆங்கிலம்
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (பெரிய, சிறிய பாட்டுப் புத்தகங்கள்) —ஆங்கிலம்
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் —ஆங்கிலம், தமிழ்
நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் —ஆங்கிலம், தமிழ், மலையாளம்
என்னுடைய பைபிள் கதை புத்தகம், சிறிய பதிப்பு —தமிழ்
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும் —தமிழ், தெலுங்கு
நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில் —மலையாளம்
உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்? —தமிழ், மலையாளம், ஹிந்தி
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் —மலையாளம்
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் —தமிழ், மலையாளம்
“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” —மலையாளம்
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! —தமிழ்