கேள்விப் பெட்டி
◼ பிரசுரங்களைப் பெறும்போதும் நன்கொடை போடுகிறோம்; வெளி ஊழியத்தில் நன்கொடையாக பெறப்படும் பணத்தையும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடுகிறோம்; அப்படியானால் பிரசுரங்களுக்காக இரண்டு தடவை நன்கொடை போடுவதாகத்தானே அர்த்தம்?
இல்லை. சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடை பெட்டிகளில் போடப்படும் நன்கொடைகள் பிரசுரங்களுக்கு மட்டுமே அல்ல. பிரஸ்தாபிகளும் வெளி ஊழியத்தில் உண்மையான ஆர்வம் காட்டும் நபர்களும் கட்டணம் எதுவுமின்றி பிரசுரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பிரஸ்தாபிகள் போடும் நன்கொடை, கிளை அலுவலகங்கள், பெத்தேல் வீடுகள், ஊழியப் பள்ளிகள், பயண கண்காணிகள், பிரசுர விநியோகிப்பு மையங்கள் சம்பந்தப்பட்ட பராமரிப்புக்காகவும், இயேசு தம் சீஷர்களுக்குக் கொடுத்த முக்கிய பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் இன்னும் எண்ணற்ற உதவி சேவைகளுக்காகவும் செலவிடப்படுகிறது. பிரசுரங்களை வெளியிடுவது இதில் ஒரு சிறிய அம்சம்தான்.
ஆகவேதான், ஆர்வம் காட்டும் நபர்கள் ஊழியத்தில் நன்கொடை அளிக்கும்போது, அது “பிரசுரங்களுக்கு” என்று நாம் சொல்லக்கூடாது. நாம் அவர்களிடம் சொல்வதற்கேற்ப, வாசிக்க உண்மையான ஆர்வமுள்ள எல்லாருமே அதை விலையின்றி பெற்றுக்கொள்கின்றனர். இதனால், அவர்கள் விரும்பி கொடுக்கும் நன்கொடைப் பணம் உலகளாவிய வேலைக்கு ஆகும் செலவை ஈடுகட்டவே பயன்படுத்தப்படும். பிரஸ்தாபிகளால் கொடுக்கப்படும் நன்கொடை விஷயத்திலும் இதுவே பொருந்தும்.