அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. நாம் சந்திப்பவர்களிடம் இவை ஏற்கெனவே இருந்தால், கடவுளைத் தேடி (ஆங்கிலம்) அல்லது ஏதாவதொரு பழைய பிரசுரத்தை அளிக்கலாம். டிசம்பர்: இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். இல்லையென்றால், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்) அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கலாம். ஜனவரி: சபையில் இருக்கும் ஏதாவதொரு பழைய 192-பக்க புத்தகத்தை அளிக்கலாம். குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தை வைத்திருக்கும் சபைகள் அதையும் அளிக்கலாம். பிப்ரவரி: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?, வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், அல்லது சபையில் இருக்கும் ஏதாவதொரு பழைய 192-பக்க புத்தகம்.
◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ டிசம்பர் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்த பின்பு, அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கையில் இதுவும் அறிவிக்கப்பட வேண்டும்.
◼ சபையுடன் தொடர்புடையவர்கள், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கான புதிய அல்லது புதுப்பிக்கப்படும் சந்தாக்கள் அனைத்தையும் சபை மூலமாகவே அனுப்ப வேண்டும்.
◼ பிரசுரங்கள் கேட்டு பிரஸ்தாபிகள் தனித்தனியே விண்ணப்பிக்கையில் கிளை அலுவலகம் அவற்றை அனுப்புகிறதில்லை. சபையிலிருந்து மாதாந்தர லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட்டை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிப்பு செய்ய நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும்; அப்போது தங்களுக்கென புத்தகங்களை வாங்கிக்கொள்ள விருப்பமுடையோர் அனைவரும் புத்தக இலாகாவை கவனிக்கும் சகோதரரிடம் தெரிவிக்கலாம். எந்தப் பிரசுரங்களெல்லாம் ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் ஐட்டங்கள் என தயவுசெய்து ஞாபகத்தில் வைத்திருங்கள்.
◼ மாவட்ட மாநாட்டு பேட்ஜ்களுக்கான பிளாஸ்டிக் ஹோல்டர்கள் ஓரளவு கைவசம் உள்ளன. தங்கள் குறைந்தபட்ச ரிக்வெஸ்ட்டுகளை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்ம்களில் (S-14) சபைகள் ஆர்டர் செய்யலாம். வரும் மாநாடுகளிலும் இவற்றை பயன்படுத்துவதற்காக பத்திரமாய் வைத்துக்கொள்ளும்படி அனைவருக்கும் உற்சாகம் அளிக்கப்படுகிறது.
◼ பிராந்திய வரைபட கார்டுகளுக்கான (S-12) பிளாஸ்டிக் ஹோல்டர்கள் கிடைக்கின்றன. லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்ம்களில் (S-14) சபைகள் ஆர்டர் செய்யலாம்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
2000-க்கான காவற்கோபுர பவுண்ட் வால்யூம்—ஆங்கிலம்
2000-க்கான விழித்தெழு! பவுண்ட் வால்யூம்—ஆங்கிலம்
பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26)—அஸ்ஸாமீஸ், ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், மிஸோ, ஹிந்தி
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு-1986 பதிப்பு (ரெகுலர் பதிப்பு; bi12 ஒத்துவாக்கிய வசனங்களுடன்)—ஆங்கிலம்
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் —ஆங்கிலம், கன்னடா, நேப்பாளி, ஹிந்தி
வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்—ஆங்கிலம்
பைபிள் கலந்துரையாடலை ஆரம்பித்து நடத்துவது எப்படி—ஹிந்தி
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள்—கன்னடம்
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு—தெலுங்கு