ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 13-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, மே 8 தேதியிட்ட விழித்தெழு!, (பிரசுர அளிப்பு பகுதியிலுள்ள முதலாவது.) மே 15 தேதியிட்ட காவற்கோபுரம் ஆகியவற்றை அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ‘நான் மிகவும் வேலையாயிருக்கிறேன்’ என உரையாடலை இடையே நிறுத்துவோரிடம் எப்படி வெவ்வேறு விதங்களில் பதிலளிக்கலாம் என்பதை காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 19-20-ஐக் காண்க.
10 நிமி: “நம்முடைய பிரசுரங்களை மதிக்கிறீர்களா?” மூப்பரின் உற்சாகமான பேச்சு.
20 நிமி: “2002 ‘வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்’ யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.”a இப்பகுதியை செயலர் நடத்த வேண்டும். பைபிள் காலங்கள் முதல் இன்று வரை பெரும் கூட்டங்கள் கடவுளுடைய ஜனங்களைப் பலப்படுத்துவதில் அதிக பங்கு வகித்திருக்கின்றன. (அறிவிப்போர் ஆங்கில புத்தகத்தில் பக்கம் 254, பாராக்கள் 1-3-யும், உட்பார்வை ஆங்கில புத்தகத்தில் தொகுதி 1, பக்கம் 821, பாரா 5-யும் காண்க.) இவ்வருட மாவட்ட மாநாட்டில் மூன்று நாட்களும் தவறாமல் கலந்துகொள்ள இப்பொழுதே ஏற்பாடுகள் செய்யும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 115, முடிவு ஜெபம்.
மே 20-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. கேள்விப் பெட்டியை மறுபார்வை செய்யவும்.
10 நிமி: நம்முடைய கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொள்ளுதல். தகுதி வாய்ந்த மூப்பரின் பேச்சு. பள்ளியில், வேலை செய்யுமிடத்தில், அக்கம்பக்கத்தில் என எங்கும் தேசபக்தி வெளிக்காட்டப்படுகிறது. தேசியளவில் நிகழும் துயர சம்பவங்களால் ஏற்படும் கவலையையும் துக்கத்தையும் சமாளிப்பதற்காக அநேகர் தேசபக்தியை உற்சாகப்படுத்துகின்றனர். உலகில் நிகழும் காரியங்களைப் பார்த்து நாம் கவலைப்பட்டாலும் சர்வலோக பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம், ராஜ்ய செய்தியால் ஆறுதல் பெற்றிருக்கிறோம். தேசியவாத காரியங்களில் நாம் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை சாதுரியமாக விளக்குகையில் கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் பெற்ற ஆறுதலையும் நம்பிக்கையையும்கூட மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டில், பக்கங்கள் 20-4-ல் “கொடி வணக்கம்” என்ற உபதலைப்பில் தேசாபிமான சடங்குகளில் நாம் கலந்துகொள்ளாததற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள சிறப்பு குறிப்புகளைச் சொல்லி, தங்கள் பிள்ளைகளுடன் இந்தத் தகவலை கவனமாக கலந்தாலோசிக்கும்படி பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள். சிற்றேட்டில் பக்கம் 20-லும் 1996, ஜனவரி 8 தேதியிட்ட விழித்தெழு!-வில் பக்கம் 31-லும் காணப்படும் அனுபவங்களைச் சொல்லுங்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதை காட்டும் அதே சமயத்தில் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியைக் காட்ட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள்.
8 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: “சுத்தம் கடவுளை கனப்படுத்துகிறது.” கட்டுரையை மூப்பர் சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். முடிவில், 2002, பிப்ரவரி 1, காவற்கோபுரம், பக்கங்கள் 6-7-லுள்ள தகவலை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 169, முடிவு ஜெபம்.
மே 27-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். மே மாத வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி மே 8 தேதியிட்ட விழித்தெழு!-வை (பிரசுர அளிப்பு பகுதியிலுள்ள மூன்றாவது.) இளம் பிரஸ்தாபியும் ஜூன் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தை முதிர்ந்த பிரஸ்தாபியும் அளிப்பதுபோல் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்புக்கும் பிறகு அந்த அளிப்பில் எவ்வளவு எளிதாக ஒரு வசனம் பயன்படுத்தப்பட்டது என்பதன் பேரில் குறிப்பு சொல்லுங்கள்.
15 நிமி: “உங்கள் சபை பிராந்தியம் பெரியதா?” ஊழிய கண்காணியின் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். சபையின் கைவசம் எவ்வளவு பெரிய பிராந்தியம் உள்ளது, கடந்த வருடம் எந்தளவு ஊழியம் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிடுங்கள். கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை உங்கள் சபைக்கு எப்படி பொருத்தலாம் என்பதை விளக்குங்கள். இனி வரும் நாட்களில் அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் ஊழியம் செய்வது சம்பந்தமாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மறுபார்வையிடுங்கள்.
18 நிமி: “பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைப் பயன்படுத்துகிறீர்களா?” (இந்தக் கலந்தாலோசிப்புக்காக எல்லாரிடமும் ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கை இருக்க வேண்டும்.) முதலாவதாக, பாரா 3-லுள்ள உதாரணத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு ஆரம்பிப்பதை நன்கு தயாரித்த பிரஸ்தாபி நடித்துக் காட்ட சொல்லுங்கள். பின்னர், சிற்றேட்டின் சிறப்புக் குறிப்புகளைச் சொல்லி, பைபிள் படிப்புகள் ஆரம்பிக்க உதவும் விதத்தில் அது நன்கு தயாரிக்கப்பட்டிருப்பதை விளக்குங்கள். ஜனவரி 2002 உட்சேர்க்கையில் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகளை மறுபார்வை செய்வதன் மதிப்பை சுட்டிக்காட்டுங்கள். எந்த ஆலோசனைகள் பயனுள்ளவையாய் இருந்திருக்கின்றன என்பதை சபையாரிடம் கேளுங்கள். மேற்குறிப்பிடப்பட்ட நடிப்பை மீண்டும் நடித்துக் காட்டுவதுடன் முடித்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 93, முடிவு ஜெபம்.
ஜூன் 3-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச், ஏப்ரல் அல்லது மே ஆகிய மாதங்களில் துணைப் பயனியர் ஊழியத்தில் அல்லது ஒழுங்கான பயனியர் ஊழியத்தில் கலந்துகொண்டதால் பெற்ற பலன்களை சொல்லும்படி பிரஸ்தாபிகளை முன்னதாகவே கேட்டுக்கொள்ளுங்கள்.
15 நிமி: பிற பைபிள் மொழிபெயர்ப்புகளை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் எப்படி உபயோகிக்கிறது. சுருக்கமான பேச்சிற்குப் பின்பு சபையாருடன் கலந்தாலோசிப்பு. நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 8-லுள்ள பாரா 2-ஐ வாசித்து, நம்முடைய ஊழியத்தில் அடிக்கடி பைபிள் ஏன், எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குங்கள். பக்கம் 6-லுள்ள பைபிள் சுருக்க குறியீட்டின் பட்டியலைப் பற்றி சொல்லி, மற்ற மொழிபெயர்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்குங்கள். 1997, அக்டோபர் 1, காவற்கோபுரத்தில் பக்கம் 16 பாரா 2-லும் பக்கம் 20, பாரா 15-லும் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைகளைப் பற்றி சொல்லுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், “அப்போஸ்தல வாரிசுரிமை,” “சிலைகள்,” “திரித்துவம்” போன்ற பொருள்களைப் பயன்படுத்துகையில், பிற மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சத்தியத்தை கற்பிப்பதற்கு எப்படி உதவியாக இருக்கும் என்பதை விளக்கும்படி சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “நற்செயல்களை தூண்டுவிக்கும் நம் விசுவாசம்.”b பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கையில் வைராக்கியமுள்ள சாட்சியை சுருக்கமாக பேட்டி காணவும். மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பது தன்னுடைய விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கும் பலப்படுத்துவதற்கும் எப்படி வழிசெய்கிறது என்பதை அந்தப் பிரஸ்தாபி சொல்லும்படி கேளுங்கள்.
பாட்டு 56, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.