ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: மாவட்ட மாநாட்டு மாதங்களின்போது, ஒவ்வொரு வாரத்திற்குமுரிய ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டுக்குச் செல்வதற்கு வசதியாக தேவையான மாற்றங்களை சபைகள் செய்துகொள்ளலாம். பொருத்தமாயிருந்தால், இந்த மாத உட்சேர்க்கையிலுள்ள, உள்ளூருக்குப் பொருந்துகிற ஆலோசனையை மாநாட்டுக்குச் செல்வதற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில் மறுபடியும் கலந்தாலோசிக்க 15 நிமிடத்தை ஒதுக்குங்கள். ஜனவரி மாதத்தில், மாநாட்டு நிகழ்ச்சியின் சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்ய ஊழியக் கூட்ட அட்டவணையில் ஒரு வாரம் ஒதுக்கப்படும். அந்தக் கலந்தாலோசிப்புக்கு தயாரிக்கும் வகையில், நாம் எல்லாருமே மாநாட்டின் முக்கிய குறிப்புகளை எழுதிக்கொள்ளலாம்; அவற்றில், நம் சொந்த வாழ்க்கையிலும் வெளி ஊழியத்திலும் பின்பற்ற விரும்பும் திட்டவட்டமான குறிப்புகளையும் எழுதிக்கொள்ளலாம். அப்போதுதான், மாநாட்டில் கலந்துகொண்டது முதற்கொண்டு அந்த ஆலோசனைகளை எப்படியெல்லாம் பின்பற்றியிருக்கிறோம் என நம்மால் விவரிக்க முடியும். அந்த நல்ல ஆலோசனைகளால் பயனடைந்திருக்கும் விதத்தை ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்பது பரஸ்பர உற்சாகம் தரும்.
செப்டம்பர் 9-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை பயன்படுத்தி, செப்டம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) செப்டம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும், “யெகோவாவின் சாட்சிகளில் எனக்கு அக்கறையில்லை” என்று சொல்லி உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுவோரை சமாளிக்கும் வெவ்வேறு விதத்தைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 17-18-ஐக் காண்க.
16 நிமி: “யெகோவாவை மகிமைப்படுத்த மற்றவர்களுக்கு உதவுதல்.”a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 197-9-லிருந்து நடைமுறையான ஓரிரு குறிப்புகளை சொல்லுங்கள்.
17 நிமி: கடந்த வருடத்தில் நாம் எதை சாதித்தோம்? ஊழியக் கண்காணியின் பேச்சு. 2002 ஊழிய ஆண்டுக்கான சபை அறிக்கையின் முக்கிய குறிப்புகளை தெரிவியுங்கள். சிறந்த சாதனைக்காக எல்லாரையும் பாராட்டுங்கள். கூட்டங்களுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை, மறுசந்திப்பு, வேதப்படிப்பு, துணைப் பயனியர் ஊழியம் சம்பந்தமாக சபையார் என்ன செய்திருக்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்; இது சம்பந்தமாக முன்னேற்றம் செய்வதற்காக நடைமுறைக்கு ஒத்து வரும் சில ஆலோசனைகளை வழங்குங்கள். அடுத்த வருடத்திற்காக எட்டத்தக்க இலக்குகளை வையுங்கள்.
பாட்டு 149, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
17 நிமி: “விசேஷித்த உற்சாகப் பரிமாற்றம்.” பேச்சு. மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆவலைத் தூண்டுங்கள். முதல் நாள் காலையிலிருந்து மூன்றாம் நாள் பிற்பகல் வரை, நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியிலும் கலந்துகொள்ள அனைவரையும் ஊக்குவியுங்கள்.
18 நிமி: “எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்.”b நம் நன்மைக்காக ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள அறை வசதி ஏற்பாடுகளுக்கு ஒத்துப் போவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். பாரா 2-லுள்ள ஆறு நினைவூட்டும் குறிப்புகளை வலியுறுத்துங்கள். ஒவ்வொருவரின் பங்கிலும் நல்நடத்தைக்கான அவசியத்தை விளக்குங்கள்.
பாட்டு 115, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 23-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு தயாரிக்கும் வகையில் கடந்த வட்டார மாநாட்டில் எழுதிய முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை பயன்படுத்தி, செப்டம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையை ஓர் உதவி ஊழியரும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது), அக்டோபர் 1 தேதியிட்ட காவற்கோபுரம் பத்திரிகையை ஒரு மூப்பரும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிற்குப் பிறகும், வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஓரிரு ஆரம்ப வாக்கியங்களை மறுபடியும் குறிப்பிடுங்கள்.
15 நிமி: “உங்கள் ஆவிக்குரிய தேவைகளைத் திருப்தி செய்துகொள்ளுங்கள்.” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். மாநாட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் கூர்ந்து கவனம் செலுத்துவதற்கான தேவையை கலந்தாலோசியுங்கள். கேட்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நாம் கற்றுக்கொண்டவற்றை கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். மாவட்ட மாநாட்டு சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்வதற்கென்றே ஜனவரி மாத ஊழியக் கூட்ட அட்டவணையில் ஒரு வாரம் ஒதுக்கப்பட்டுள்ளது சம்பந்தமாக மேற்கூறப்பட்ட தகவலை கலந்தாலோசியுங்கள். குறிப்பு எடுக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். கடந்த ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியிலிருந்து பெற்ற நன்மைகளைப் பற்றி ஓரிரு குறிப்புகளை சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
18 நிமி: “சுத்தம் யெகோவாவிற்கு மகிமை சேர்க்கிறது.”c மூப்பரின் பேச்சு. கலந்தாலோசித்த பிறகு ஒவ்வொரு பாராவையும் அவர் வாசிப்பார். மாநாடு முழுவதிலும் சுத்தத்தைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் பொதுவிடங்களில் நம் தனிப்பட்ட தோற்றத்தைக் குறித்து கவனமாய் இருப்பதன் அவசியத்தையும் அனைவரும் மதித்துணர உதவுங்கள்.
பாட்டு 169, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 30-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாதத்திற்கான ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவூட்டுங்கள்.
15 நிமி: எது நம் பத்திரிகைகளை ஒப்பற்றவையாக ஆக்குகிறது? பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அக்டோபர் மாதத்தில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்போம். பத்திரிகைகள் ஒப்பற்றவையாக இருப்பதற்கான காரணங்களை கலந்தாலோசியுங்கள்: (1) அவை யெகோவாவின் பெயரை சிறப்பித்துக் காட்டுகின்றன. (2) இயேசுவில் நம்பிக்கை வைக்க உற்சாகமளிக்கின்றன. (3) கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கின்றன. (4) எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ள பைபிளிடமே கவனத்தை இழுக்கின்றன. (5) பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை விளக்குகின்றன. (6) உலக நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. (7) இன்றைய பிரச்சினைகளை சமாளிக்கும் விதத்தை காட்டுகின்றன. (8) சகல ஜனங்களின் ஆர்வத்தையும் தூண்டுகின்றன. (9) அரசியல் சம்பந்தமாக நடுநிலைமை வகிக்கின்றன. சுருக்கமான இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்; இக்குறிப்புகளில் ஒன்றை உரையாடலை ஆரம்பிக்க எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஒவ்வொரு நடிப்பிலும் காட்டுங்கள்.
25 நிமி: “தேவனுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்.” (வெளி. 14:7) பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும்; கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற வட்டார மாநாட்டு நிகழ்ச்சி குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். கற்றுக்கொண்ட முக்கிய குறிப்புகளை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். தாங்கள் கற்றுக்கொண்டவற்றை தனிப்பட்ட விதத்தில் அல்லது குடும்பத்தில் எவ்வாறு பின்பற்ற முடிந்திருக்கிறது என்பதை அவர்களிடம் கேளுங்கள். (இதற்கான பகுதிகள் முன்னதாகவே நியமிக்கப்படலாம்.) பின்வரும் நிகழ்ச்சிகளை சிறப்பித்துக் காட்டுங்கள்: (1) “தேவ பயத்தை வளர்த்துக்கொள்ள புதியவர்களுக்கு உதவுங்கள்.” நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்ட ஆர்வம் காட்டியவர்கள் முன்னேற்றம் செய்து யெகோவாவை வைராக்கியத்துடன் சேவிப்பதற்கு நாம் எவ்வாறு உதவலாம்? (2) “தீமையை வெறுப்பதே யெகோவாவுக்கு பயப்படுதல்.” (w-TL87 8/1 22-4) யெகோவா வெறுக்கும் காரியங்களை—மேட்டிமை, பொய் சொல்லுதல், பொருளாதார நாட்டங்கள், மோசமான பொழுதுபோக்கு, இன்டர்நெட் துஷ்பிரயோகம் போன்றவற்றை—விட்டு விலக நீதிமொழிகள் 6:16-19 நமக்கு எவ்வாறு உதவுகிறது? (3) “நீங்கள் நேசிப்போரிடம் நெருங்கி வாருங்கள்.” நாம் யெகோவாவை, இயேசுவை, குடும்பத்தாரை, சபையிலுள்ளவர்களை நேசிக்கிறோம்; அவர்களிடம் நெருங்கி வருவது உலகிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது? (4) “யெகோவாவுக்கு பயப்படுங்கள், மனிதனுக்கு அல்ல.” யெகோவாவை விசனப்படுத்தி விடுவோமோ என்ற பயம், பிரசங்கிக்கையில் தயக்கத்தை சமாளிப்பதற்கு, வேலை பார்க்குமிடத்தில் அல்லது பள்ளியில் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதற்கு, கூட்டங்களையும் அசெம்பிளிகளையும் மாநாடுகளையும் தவறவிடும்படி உங்கள் அதிகாரி வற்புறுத்துகையில் அதற்குப் பணிந்து போகாமல் இருப்பதற்கு உங்களுக்கு எவ்வாறு உதவியிருக்கிறது? (5) “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள்.” (சங். 119:37; எபி. 4:13) மிதமீறி மது அருந்துவதிலிருந்து, ஆபாசத்தைப் பார்ப்பதிலிருந்து, ரகசிய பாவங்களில் ஈடுபடுவதிலிருந்து தேவ பயம் நம்மை ஏன் தடுக்க வேண்டும்? (6) “யெகோவாவுக்கு பயப்படும் பயத்தில் தொடர்ந்து நடவுங்கள்.” உங்கள் வாழ்க்கையில் யெகோவாவின் ஆவி முழுமையாக செல்வாக்கு செலுத்த நீங்கள் இடமளித்திருப்பதற்கு அவர் உங்களை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார்?—சங். 31:19; 33:18, 19; 34:9, 17; 145:19.
பாட்டு 171, முடிவு ஜெபம்.
அக்டோபர் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “தேவராஜ்ய வளங்களுக்கு மதித்துணர்வை காட்டுங்கள்.”d மூப்பர் கொடுக்கும் பேச்சு. உங்கள் சபையில் இது சம்பந்தமாக என்ன செய்யப்பட்டு வருகிறது, நம் பிரசுரங்களை ஞானமாக பயன்படுத்துவதற்கு சபை என்ன செய்யலாம் என்பதன் பேரில் குறிப்புகளை சொல்லுங்கள். தேவைப்படும் பிரசுரங்களை மட்டுமே வாங்கி செல்லும்படி எல்லாரிடமும் வலியுறுத்துங்கள். உலகளாவிய வேலையை ஆதரிக்க பொருளாதார நன்கொடை அளிக்கும் வாய்ப்பையும் அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.
20 நிமி: “‘வீணானவற்றை’ நாடுவதை தவிருங்கள்.”e பாரா 4-ஐ கலந்தாலோசித்த பிறகு, நவம்பர் 1999, நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில், பாராக்கள் 30-2-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாரா 5-ஐ கலந்தாலோசிக்கையில், அக்டோபர் 1, 1994, காவற்கோபுரம், பக்கம் 8-லுள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 6-வது பாராவுடன், நவம்பர் 1999 உட்சேர்க்கையிலுள்ள பாரா 18-ஐயும் வாசியுங்கள்.
பாட்டு 105, முடிவு ஜெபம்.
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.