ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பிப்ரவரி 24-ல் துவங்கும் வார ஊழியக் கூட்ட கலந்தாலோசிப்புக்காக தயாரிக்கும் வண்ணம், “சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள்” என்ற ஆங்கில வீடியோவை பார்த்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் பிப்ரவரி 8, விழுத்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது), பிப்ரவரி 15, காவற்கோபுரத்தையும் பயன்படுத்தி இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு சந்திப்பிலும், ஒரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள்.
35 நிமி: “பிரசங்கித்து முழுமையாக சாட்சி கொடுங்கள்.”a ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் துணைப் பயனியர் செய்ய முடிந்தவர்களை உற்சாகப்படுத்துங்கள். கடந்த வருடம், நினைவு ஆசரிப்பின் போது துணைப் பயனியர் செய்தவர்களை குறிப்புகள் சொல்ல அழையுங்கள். பயனியர் செய்ய என்ன ஏற்பாடு செய்தார்கள்? இதற்காக என்ன முயற்சியும் சரிப்படுத்துதல்களும் செய்ய வேண்டியிருந்தது? அவர்கள் அனுபவித்த ஆசீர்வாதங்களும் சந்தோஷங்களும் என்னென்ன? பிறகு பக்கம் 4-ல் உள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை விமர்சியுங்கள். கூட்டம் முடிந்தவுடன் துணைப் பயனியருக்கான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கும் என்று அறிவியுங்கள்.
பாட்டு 30, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. மார்ச் மாதத்திற்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யுங்கள். ஜனவரி 2002, நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையிலிருந்து அறிவு புத்தகத்தை அளிப்பதற்கான ஓரிரண்டு குறிப்புகளை சொல்லுங்கள். பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் இலக்கை அடைய உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சி.” பேச்சு. அடுத்த வட்டார மாநாட்டின் தேதியை அறிவியுங்கள். ஆஜராகும்படியும் நிகழ்ச்சிகளுக்கு கூர்ந்த கவனம் செலுத்தும்படியும் அனைவரையும் தூண்டுவியுங்கள். முழுக்காட்டுதலைப் பற்றி சிந்தித்து பார்க்கும்படி முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். உங்களோடு பைபிள் படிப்பவர்களை அழைப்பதற்கு விசேஷ முயற்சி எடுங்கள்.
25 நிமி: “எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?”b ஊழியத்தில் அதிக நேரம் செலவிட தங்கள் சூழ்நிலையில் என்னென்ன மாற்றங்களை செய்தார்கள் என்று சொல்லும்படி ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 57, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்துக்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவூட்டுங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் பிப்ரவரி 8, விழுத்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது), மார்ச் 1, காவற்கோபுரத்தையும் பயன்படுத்தி இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு சந்திப்பிலும் ஒரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள்.
10 நிமி: “ஏற்ற சமயத்தில் உதவி.” மூப்பர் கொடுக்கும் பேச்சு. செயலற்ற பிரஸ்தாபிகளை சந்திக்க விசேஷித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது, யெகோவா தம்முடைய மக்களிடம் காட்டும் அன்புள்ள கரிசனையை பிரதிபலிக்கிறது என்பதை வலியுறுத்துங்கள்.
25 நிமி: “உங்களுக்கு அறிவொளியூட்டி ஊக்கமளிக்கும் வீடியோ!” நேரடியாகவே, கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேட்டு சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல் என்ற ஆங்கில வீடியோவை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். கடைசி கேள்விக்கு அதிகமான குறிப்புகளை சொல்வதற்கு வசதியாக நேரத்தை சரியாக பங்கிட்டுக் கொள்ளுங்கள். 2002 இயர்புக்-ல் பக்கம் 192-ல் உள்ள பெட்டியை கடைசியாக வாசியுங்கள்.
பாட்டு 56, முடிவு ஜெபம்.
மார்ச் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி”-ஐ கலந்தாலோசியுங்கள். அடுத்த விசேஷ மாநாட்டு தினத்தின் தேதியை அறிவித்து, அனைவரையும் பாட்டு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வரும்படியும் முழு நிகழ்ச்சிக்கும் கவனமாக செவிகொடுக்கும்படியும் சொல்லுங்கள். பைபிள் படிப்பவர்களையும் புதிதாக ஆர்வம் காட்டுபவர்களையும் அழைத்து வரும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “முடிவு சமீபித்து வருவதால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்.”c பாராக்கள் 3, 4-ஐ சிந்திக்கும் போது பிரஸ்தாபிகள் தற்போது அடைய முயலும் ஆவிக்குரிய இலக்குகளை சொல்லும்படி அழையுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தில் பக்கம் 176-ல் உள்ள குறிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 127, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி, பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி, பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி, பதில் கலந்தாலோசிப்பு.