அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பிரதிகள். சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடை அளிக்க விரும்பினால் அளிக்கலாம் என வீட்டுக்காரரிடம் பிரஸ்தாபிகள் சொல்ல வேண்டும். ஆர்வம் காட்டியவர்களை மறுசந்திப்பு செய்யும்போது, ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருந்தால், அவர்களிடம் இந்த புத்தகத்தில் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு விசேஷ முயற்சி எடுங்கள். மே: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர். அதற்குப் பதிலாக, என்னுடைய பைபிள் கதை புத்தகம், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? (ஆங்கிலம்), இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகியவற்றை அளிக்கலாம். இந்தப் புத்தகங்கள் எதுவுமே உங்கள் சபையில் இல்லையென்றால், பக்கத்து சபைகளில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றனவா என்று தயவுசெய்து கேளுங்கள்; இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள். ஜூன்: அறிவு புத்தகத்தையோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதாவதொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள்.
◼ ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்போதே திட்டமிட்டு அதற்கான விண்ணப்பத்தை சீக்கிரமாக சமர்ப்பிக்க வேண்டும். இது, தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளை செய்யவும் போதுமான பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் கைவசம் வைத்துக்கொள்ளவும் மூப்பர்களுக்கு உதவியாக இருக்கும். துணைப் பயனியர் ஊழியம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிக்கப்பட வேண்டும்.
◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை சபை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். இது, தங்களுக்கென பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் —ஆங்கிலம், கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
எப்படி பைபிள் கலந்தாலோசிப்பை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தலாம் —அஸ்ஸாமீஸ்