பைபிள் படிப்புகளை நடத்த கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை பயன்படுத்துங்கள்
ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் என்ற புத்தகம், புதியவர்கள் சத்தியத்தில் முன்னேறவும், யெகோவாவின் மீதும் அவருடைய அமைப்பின் மீதும் போற்றுதலை அதிகரிக்கவும் உதவி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதை இரண்டாவது புத்தகமாக பயன்படுத்தி பைபிள் மாணாக்கர்களுடன் சேர்ந்து படிக்கலாம். நம் ராஜ்ய ஊழியம், ஜூன் 2000, பக்கம் 4 இவ்விதமாக விளக்கியது: “மாணாக்கர் ஆவிக்குரிய ரீதியில் ஒருவேளை மிகவும் மெதுவாக முன்னேறலாம். ஆனால், படிப்பவற்றை அவர் உண்மையிலேயே மதிக்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்தால், இன்னொரு புத்தகத்திலும் பைபிள் படிப்பை நடத்தலாம். அதாவது, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் முடித்த பிறகு, அந்தப் புத்தகத்திலிருந்து படிப்பை தொடரலாம். . . எல்லா சந்தர்ப்பங்களிலும், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் முதலாவது படிக்க வேண்டும். இரண்டாவது புத்தகத்தை முடிப்பதற்கு முன்பாகவே, மாணாக்கர் முழுக்காட்டுதல் எடுத்துவிட்டாலும்கூட, அதை பைபிள் படிப்பாக அறிக்கை செய்ய வேண்டும். அந்த சமயங்களில் செய்யும் மறுசந்திப்புகளையும் பைபிள் படிப்பு நேரத்தையும் ஊழிய அறிக்கையில் சேர்க்க வேண்டும்.”
பைபிளை படிக்க கடவுளை வணங்குங்கள் புத்தகத்திலிருந்து வேறு யாரும்கூட பயனடையலாம்? அதே கட்டுரை தொடர்ந்து சொல்லுகிறது: “உங்களோடு [தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை மற்றும்] அறிவு புத்தகத்தை ஏற்கெனவே படித்தவர்களில் சிலர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுமளவிற்கு முன்னேற்றம் காட்டாமலே இருந்திருக்கலாம். அவர்களுக்கு பைபிள் படிப்பை மறுபடியும் ஆரம்பிக்கலாமா என நீங்கள் கேட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வரலாம்.” அப்படிப்பட்ட நபர்களிடம் கடவுளை வணங்குங்கள் புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை நடத்த மார்ச்சிலும் ஏப்ரலிலும் விசேஷ முயற்சி எடுப்போமாக.