தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 30, 2003-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மே 5 முதல் ஜூன் 30, 2003 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. பேச்சு கொடுக்கையில் குரல் வேறுபாடு ஏன் முக்கியம், இதை எப்படி செய்யலாம்? [be-TL பக். 111 பெட்டி; பக். 112 பெட்டி]
2. பேச்சாளர் தான் சொல்வதை நம்புகிறவராக, யெகோவாவை நேசிக்கிறவராக இருந்தும் எப்படி உற்சாகமில்லாமல் பேச வாய்ப்பிருக்கிறது? [be-TL பக். 115 பாரா. 3-4; பக். 116 பாரா 1]
3. பேச்சில் கனிவையும் உணர்ச்சியையும் வெளிக்காட்ட பேச்சாளருக்கு எது உதவும், இது ஏன் முக்கியம்? [be-TL பக். 119 பாரா. 1-4]
4. பேச்சில் பொருத்தமான உற்சாகத்தையும், கனிவையும், பிற உணர்ச்சிகளையும் காட்டுவது எதன் பேரில் சார்ந்திருக்கிறது? [be-TL பக். 120 பாரா. 2-5]
5. சரியா தவறா: உங்கள் சைகைகளையும் முகபாவங்களையும் சபையார் பார்த்தால் மட்டுமே அவை பிரயோஜனமானவை. விளக்கவும். [be-TL பக். 121 பாரா 3]
பேச்சு நியமிப்பு எண் 1
6. மோசமான சூழலில் பிள்ளைப் பருவத்தைக் கழித்தாலும் சரியான போக்கைத் தெரிந்துகொள்ள எது யோசியாவுக்கு உதவியது? (2 நா. 34:1, 2) [w-TL01 4/15 பக். 26 பாரா 5 – பக். 27 பாரா 5; பக். 28 பாரா 4]
7. நீதிமொழிகள் 9:7, 8அ-வின் அர்த்தமென்ன, வெளி ஊழியத்தில் இதை எப்படி பின்பற்றலாம்? [w-TL01 5/15 பக். 29 பாரா. 5-6]
8. ‘மறவாதிருங்கள்’ என்று இஸ்ரவேலரிடம் யெகோவா சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார், நாம் எப்படி மறவாதிருக்கலாம்? (உபா. 4:9, 10; 8:11) [be-TL பக். 20 பாரா. 1-3]
9. மோசமான பாவத்தை செய்த பின்பு உண்மையான மனந்திரும்புதலை ஒருவர் வெளிக்காட்டினால் தன்னை லாயக்கற்றவராக கருத வேண்டியதில்லை என்பதை சங்கீதம் 32:1, 5-லும் சங்கீதம் 51:10, 15-லும் உள்ள தாவீதின் உள்ளப்பூர்வமான வார்த்தைகள் எவ்வாறு காட்டுகின்றன? [w-TL01 6/1 பக். 30 பாரா. 1-3]
10. கஷ்டத்தில் இருப்பவர்களைக் கவனித்துக் கொள்வது சம்பந்தமாக 1 தீமோத்தேயு 5:3-16-ல் காணப்படும் பவுலின் அறிவுரைகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? [w-TL01 6/15 பக். 11 பாரா 1]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. யோவான் 3:3-லுள்ள ‘மறுபடியும் பிறத்தல்’ என்ற சொற்றொடரை இயேசு பயன்படுத்துகையில் எதை அர்த்தப்படுத்தினார்? [w-TL95 7/1 பக். 9-10 பாரா. 4-5]
12. இயேசு தம் கல்வியை எப்படி பயன்படுத்தினார், இதிலிருந்து நாம் என்ன மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? (யோவா. 7:15-18) [w-TL96 2/1 பக். 9-10 பாரா. 4-7]
13. புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளில் யோவான் 7:53–8:11 வரையான வசனங்கள் ஏன் மற்ற வசனங்களோடு சேர்க்கப்படாமல் தனியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன?
14. இயேசு பரலோகத்துக்கு ‘எப்படி . . . போனாரோ, அப்படியே மறுபடியும் வந்தது’ எவ்வாறு? (அப். 1:11) [w-TL90 12/1 பக். 25 பாரா 5]
15. “மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே [சீஷர்களுடனே] சேரத் துணியவில்லை” என அப்போஸ்தலர் 5:13-ல் குறிப்பிடப்பட்டிருப்பது ஏன்?