அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: அறிவு புத்தகத்தையோ அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் வேறொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சந்தர்ப்பங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) போன்ற சிற்றேடுகளையும் அளிக்கலாம். செப்டம்பர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” அல்லது இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? புத்தகத்தை அளிக்கலாம்; அது இல்லாவிட்டால், பழுப்பேறியோ நிறம் மாறியோ காணப்படும் 192 பக்க புத்தகத்தை அல்லது 1988-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு புத்தகத்தை அளிக்கலாம்.
◼ பொதுப் பேச்சு குறிப்புத்தாள்கள் பல சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட், 2003-ல் வருடாந்தர ஃபார்ம்களுடன் சேர்த்து இந்தக் குறிப்புத்தாள்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொத்தமாக அனுப்பப்படும். அதற்குள் பிற மொழிகளில் எவ்வளவு தயாராகி உள்ளனவோ அவையும் சபைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பிற மொழிகளில் மீதமுள்ள குறிப்புத்தாள்கள் பிறகு தபாலில் அனுப்பப்படும். இக்குறிப்புத்தாள்களை பெற்றதும் சபைகள் பழைய குறிப்புத்தாள்களை நீக்கிவிட வேண்டும். அவற்றுக்குப் பதிலாக புதியவற்றை ஃபைலில் வைக்க வேண்டும்.
◼ சில சமயங்களில் செலவை மிச்சப்படுத்துவதற்காக பிரசுரங்கள், பத்திரிகைகள், நம் ராஜ்ய ஊழியம் ஆகியவற்றுடன் சேர்த்து வேறு ஐட்டங்களும் சபைக்கு அனுப்பப்படுகின்றன. ஆகவே, அவை கிடைத்ததும் பிரசுர, பத்திரிகை இலாகாக்களை கவனித்துக் கொள்ளும் சகோதரர்கள் உடனுக்குடன் எல்லா பெட்டிகளையும் திறந்து பார்த்து தங்கள் இலாகாக்களுக்கு உரியதல்லாதவற்றை தாமதமின்றி நடத்தும் கண்காணியிடம் ஒப்படைத்துவிடும்படி அறிவுறுத்த வேண்டும்.
◼ உவாட்ச்டவர் லைப்ரரி—2001 பதிப்பு சிடி-ராமில் பெறுவதற்கு சபைகள் இப்போது ஆர்டர் செய்ய ஆரம்பிக்கலாம். இந்த காம்பாக்ட் டிஸ்க் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதை பொது மக்களுக்கோ பள்ளி நூலகத்திற்கோ விநியோகிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து ஞாபகத்தில் வையுங்கள். மேலும் யெகோவாவின் சாட்சிகளிடத்தில் வெறுமனே ஆர்வம் காண்பிப்பவர்களுக்கும் கொடுக்கக் கூடாது. உவாட்ச்டவர் லைப்ரரி—2001, கம்ப்யூட்டர் வைத்திருக்கும் சபை உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இது சபையின் மூலமாக மாத்திரம்தான் கிடைக்கும். இந்த காம்பாக்ட் டிஸ்க்குகள் தயாரித்து அனுப்பப்படும் வரைக்கும் அவை சபையின் பேக்கிங் லிஸ்ட்டில் “பென்டிங்” என்பதாகவே குறிக்கப்பட்டிருக்கும்.
◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரம்:
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி (முஸ்லீம்களுக்காக) —ஆங்கிலம், கன்னடா, மலையாளம், வங்காளி
◼ கிடைக்கும் புதிய பிரசுரம்:
இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி (முஸ்லீம்களுக்காக) —குஜராத்தி