ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் ஜூன் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) ஜூன் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ஒரு வசனத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: “கிறிஸ்தவ ஊழியம்—நமது முக்கிய வேலை.”a முழுநேர ஊழியம் செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்க்கும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். “சமுதாயமும் மனசாட்சியும் மோதும்போது” என்ற உபதலைப்பில் நவம்பர் 1, 2000, காவற்கோபுரம், பக்கங்கள் 19-20-ல் உள்ள விஷயத்திலிருந்தும் குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “வேலையிலிருந்து ஓய்வு—அதிகமாய் ஊழியம் செய்ய வழி திறக்கிறதா?”b முடிந்தால், உலக வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின், யெகோவாவின் சேவையில் இன்னும் அதிகத்தை செய்து வரும் ஒரு பிரஸ்தாபியை சுருக்கமாக பேட்டி காணுங்கள். என்னென்ன மாற்றங்களை செய்துகொண்டார், அதனால் அவருக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள் என்ன என்பதை கேளுங்கள்.
பாட்டு 190, முடிவு ஜெபம்.
ஜூன் 16-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
37 நிமி: நம் வேலை தவறாக புரிந்துகொள்ளப்படுகையில். கிளை அலுவலகம் தயாரித்து அனுப்பியுள்ள குறிப்புத்தாளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு.
பாட்டு 131, முடிவு ஜெபம்.
ஜூன் 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் ஜூன் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஜூலை 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுங்கள். இவற்றில் ஒரு நடிப்பு, பிரஸ்தாபி தெரு ஊழியத்தில் பத்திரிகையை கொடுப்பது போல இருக்கட்டும்.
20 நிமி: “‘முழுமையாக சாட்சி கொடுப்பதற்கு’ ஊக்கமாய் உழையுங்கள்.”c கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேளுங்கள். பாராக்கள் 5, 6-ஐ கலந்தாலோசித்த பின்பு ஒரு சுருக்கமான நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அது ஒரு கடைக்காரரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்து பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளிப்பது போல இருக்கட்டும். பாராக்கள் 7, 8-ஐ கலந்தாலோசிப்பதற்கு முன்பு யாரையாவது அவற்றை சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள். முடிவாக, “அவர்களை மறவாதீர்கள்!” என்ற தலைப்பிலுள்ள பெட்டியிலிருக்கும் விஷயத்தை வாசித்து கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: “தொடர்ந்து மாறிவரும் உலகில் பிரசங்கித்தல்.”d பாராக்கள் 2, 3-ஐ கலந்தாலோசிக்கையில் உங்கள் பிராந்தியத்தில் உரையாடல்களை ஆரம்பிக்க தற்போது நடந்த என்னென்ன நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்லலாம் என்று சபையாரை கேளுங்கள். பாரா 4-ஐ கலந்தாலோசிக்கையில், அங்கு சொல்லப்பட்டுள்ளவற்றில் ஒரு விஷயத்தை உபயோகித்து சுருக்கமான நடிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 15, முடிவு ஜெபம்.
ஜூன் 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூன் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பிரசுர அளிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். அவற்றில் சபையிலிருக்கும் இரண்டு சிற்றேடுகளை சிறப்பித்துக் காட்டுங்கள். அவற்றை ஊழியத்தில் அளிக்கும் விதத்தைக் காட்டும் நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதற்கான ஆலோசனைகளுக்கு, ஜூலை 1998 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-ஐக் காண்க. இன்னும் எவ்வாறெல்லாம் அளிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள, உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-ல், “அளிப்புகள்” என்ற தலைப்பின்கீழ் மத்தியிலுள்ள “பிரசுர வரிசைப்படி” என்ற உபதலைப்பைக் காண்க.
15 நிமி: உற்சாகமின்மை—சரிசெய்வது எப்படி? நவம்பர் 15, 1999, காவற்கோபுரம், பக்கங்கள் 28-9-ல் உள்ள கட்டுரையில், “சரியான மனநிலையைக் காத்துக்கொள்ளுதல்” என்ற உபதலைப்பு வரை கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். நடைமுறைக்கு ஒத்துவரும் ஆலோசனைகளுடன் வேதப்பூர்வ புத்திமதிகளையும் மறுபார்வை செய்யுங்கள். தங்கள் ஊழியத்தில் மகிழ்ச்சியை காத்துக்கொள்ள எது உதவுகிறது என்பதை விளக்கிச் சொல்லுமாறு திறம்பட்ட பிரஸ்தாபிகள் ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: ராஜ்யத்தைப் பிரசங்கிக்க கடவுளுடைய வார்த்தையை திறம்பட பயன்படுத்துங்கள். ஊழியக் கண்காணி சபையாரோடு கலந்தாலோசிக்கிறார். ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபருடனும், ராஜ்யத்தைப் பற்றிய தெம்பளிக்கும் வேதப்பூர்வ குறிப்பு ஒன்றைச் சொல்வதற்கு நாம் கடினமாக முயலுகிறோம். என்றாலும், பைபிள் வசனங்களை வெறுமனே வாசித்தால் மட்டும் போதாது. அவற்றை விளக்கி, உதாரணங்கள் சொல்லி, பொருத்திக் காட்ட வேண்டும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 154-5-ல், “மனிதவர்க்கத்துக்கு அவசரமாய்த் தேவைப்படுவதை மனித ஆளுநர்கள் அளிக்கிறதில்லை” என்ற உபதலைப்பிலுள்ள வசனங்கள் சிலவற்றை உதாரணங்களாக உபயோகித்து இதை எப்படி செய்யலாமென காட்டுங்கள். கலந்தாலோசிப்புக்கு பிறகு ஒரு பிரஸ்தாபி, மறுசந்திப்பில் ஒரு வசனத்தை திறம்பட வாசித்து, சுருக்கமாக விளக்கி, ஓர் எளிய உதாரணத்தை பயன்படுத்தி, அந்த வீட்டுக்காரருக்கு ராஜ்ய ஆட்சியால் என்ன பயன் என்பதை சுருக்கமாக பொருத்திக் காட்டுமாறு நன்றாக தயாரித்து வந்து நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். அந்தப் பிரஸ்தாபி வசனத்தை வாசித்துக் காட்டுவதே நடிப்பின் ஆரம்பமாக இருக்கட்டும். நடிப்புக்குப் பிறகு, அந்த வசனம் எவ்வாறு விளக்கப்பட்டது, என்ன உதாரணம் பயன்படுத்தப்பட்டது, எவ்வாறு பொருத்திக் காட்டப்பட்டது என்பதையெல்லாம் மறுபார்வை செய்யுங்கள். கடவுளுடைய வார்த்தையை திறம்பட பயன்படுத்தும் சாமர்த்தியத்தை வளர்க்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 171, முடிவு ஜெபம்.
ஜூலை 7-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபையாருக்கு கிடைத்த அனுபவங்கள். (1) பிற மொழி பேசும் ஜனங்களிடம் அல்லது (2) வீட்டுக்கு வீடு ஊழியம், தெரு ஊழியம் தவிர மற்ற சமயங்களில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தபோது சபையிலுள்ள பிரஸ்தாபிகளுக்கு கிடைத்திருக்கும் அனுபவங்களை சொல்லும்படியோ அவற்றை நடித்துக் காட்டும்படியோ செய்யுங்கள். வேறொரு மொழி பேசுபவரை சந்திக்கையில், எல்லா தேசத்தாருக்கும் நற்செய்தி என்ற ஆங்கில சிறு புத்தகத்தையும், ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) ஃபார்மையும் நன்றாக பயன்படுத்த அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.—ஜூலை 2002 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1-ஐக் காண்க.
25 நிமி: “கடவுளின் பெயரை தெரியப்படுத்துதல்.”e கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை கேளுங்கள். பாரா 4-ஐ கலந்தாலோசிக்கையில் அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கம் 124-ல் காணப்படும் “கடவுளின் பெயரை தெரியப்படுத்துதல்” என்ற பெட்டியில் உள்ள விஷயங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அனுபவமிக்க பிரஸ்தாபி மறுசந்திப்பு செய்வதை நடித்துக் காட்டுமாறு செய்யுங்கள். கடவுளின் பெயரை தெரிந்துகொண்டு அதை உபயோகிப்பது ஏன் முக்கியம் என்பதை காட்ட, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 196-7-ல் உள்ள இரண்டு மூன்று வசனங்களை பயன்படுத்துங்கள்.
பாட்டு 197, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.