உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/03 பக். 1
  • தகுதியானவர்களைத் தேடுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தகுதியானவர்களைத் தேடுதல்
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
  • இதே தகவல்
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—மாலை நேரத்தின்போது
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தொலைபேசியில் சாட்சிகொடுப்பது பயனளிக்கிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • டெலிபோன் ஊழியத்தில் வெற்றி காண
    நம் ராஜ்ய ஊழியம்—2001
  • சாயங்கால சாட்சிகொடுத்தலை முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா?
    நம் ராஜ்ய ஊழியம்—1996
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 12/03 பக். 1

தகுதியானவர்களைத் தேடுதல்

1 பிரசங்க வேலையை செய்வதற்கு இயேசு கொடுத்த அறிவுரைகள் நம் முன் சவாலை வைக்கின்றன. “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் நுழையும்போது, அதிலே தகுதியானவர் யாரென்று தேடுங்கள்” என அவர் சொன்னார். (மத். 10:11, NW) இன்றைய நாட்களில் ஆட்கள் தங்கள் வீடுகளில் நேரம் செலவிடுவது குறைந்து கொண்டே வருவதால் நாம் எப்படி வெற்றிகரமாக இந்தத் தேடுதலில் இறங்க முடியும்?

2 உங்கள் பிராந்தியத்தை அலசி ஆராயுங்கள்: முதல் கட்டமாக உங்கள் பிராந்தியத்தை அலசி ஆராயுங்கள். பொதுவாக மக்கள் எப்போது வீட்டிலிருக்க வாய்ப்பிருக்கிறது? பகலில் அவர்களை எங்கே பார்க்கலாம்? எந்த நாளில் அல்லது எந்த நேரத்தில் சென்றால் அவர்கள் சாவகாசமாகவும் கேட்கும் மனநிலையிலும் இருப்பார்கள்? உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப ஊழியத்தை மாற்றியமைப்பது அருமையான பலன்களைப் பெற உங்களுக்கு உதவும்.​—⁠1 கொ. 9:23, 26.

3 மாலை வேளையில் ஊழியம் செய்யும்போது பிரஸ்தாபிகளில் அநேகர் வெற்றி கண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், வீட்டுக்காரர்கள் சிலர் ஓய்வாகவும் கேட்கும் மனநிலையிலும் இருக்கிறார்கள். குளிர்காலத்தில் பகற்பொழுது குறைவாக இருக்கையில், சில பகுதிகளில் மாலை வேளைகளில் (அனுமதிக்கப்பட்டால்) டெலிபோனில் சாட்சி கொடுப்பது பலனளிக்கும். வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்வதும் பொதுவிடங்களில் சாட்சி கொடுப்பதும்கூட நற்செய்தியை மக்களுக்கு அறிவிப்பதற்கான வழிகளாகும்.

4 விசேஷ ஊழிய மாதத்தில், ஒரு சபையினர் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் வேளையிலும் புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையிலும் ஊழியத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் டெலிபோனில் சாட்சி கொடுப்பதற்கும் வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்வதற்கும்கூட ஏற்பாடு செய்தார்கள். இந்த ஏற்பாடுகள் ஊழியத்தில் பெருமளவு பங்கெடுக்கும்படி உற்சாகப்படுத்தியதால் இப்படியே தொடர்ந்து பிற்பகலிலும் மாலையிலும் ஊழியம் செய்ய அவர்கள் தீர்மானித்தார்கள்.

5 ஊக்கத்துடன் மறுசந்திப்புகள் செய்யுங்கள்: மறுசந்திப்புகள் செய்கையில் ஆட்களை வீட்டில் சந்திப்பது உங்கள் பிராந்தியத்தில் சவாலாக இருந்தால், ஒவ்வொரு முறை சந்திக்கையிலும் மறுபடியும் எப்போது சந்திப்பது என்பதை திட்டவட்டமாக ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்; இது முதல் சந்திப்புக்கும் பொருந்தும். பிறகு சொன்னபடி தவறாமல் போய் சந்தியுங்கள். (மத். 5:37) முடிந்தால், வீட்டுக்காரரின் டெலிபோன் நம்பரைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அவருடன் மீண்டும் தொடர்புகொள்வதற்கு இதுவும் உங்களுக்கு உதவும்.

6 தகுதியானவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் அவர்களுடைய ஆர்வத்தை வளர்ப்பதற்கும் நாம் எடுக்கும் ஊக்கமான முயற்சிகளை யெகோவா நிச்சயம் ஆசீர்வதிப்பார்.​—⁠நீதி. 21:5, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்