ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
டிசம்பர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 6-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் டிசம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) டிசம்பர் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு தத்ரூபமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதாக அந்த நடிப்புகள் இருக்க வேண்டும்.
20 நிமி: “மெய் கிறிஸ்தவ ஒற்றுமை—எவ்வாறு?”a பாரா 5-ஐக் கலந்தாலோசிக்கையில் நம் கிறிஸ்தவ ஒற்றுமையை சிறப்பித்துக் காட்டும் சர்வதேச மாநாடுகள், தேவராஜ்ய கட்டுமான திட்டங்கள் அல்லது பேரழிவின்போது இடருதவி பணியில் ஈடுபட்டது சம்பந்தப்பட்ட சொந்த அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: “2004-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி.” பள்ளிக் கண்காணியின் பேச்சு. அக்டோபர் 2003, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலிருந்து குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 108, முடிவு ஜெபம்.
டிசம்பர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் 29-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்ட கலந்தாலோசிப்புக்குத் தயாரிக்கும் வகையில் உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற ஆங்கில வீடியோவை பார்க்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். “தயவுசெய்து தவறாமல் போய் சந்தியுங்கள்” என்ற பெட்டியைக் கலந்தாலோசியுங்கள். S-70 படிவம் ஒன்று கைவசமிருந்தால் அதைக் காட்டுங்கள். டிசம்பர் 25, ஜனவரி 1 ஆகிய நாட்களுக்கான விசேஷ வெளி ஊழிய ஏற்பாட்டைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள்.
15 நிமி: தனிப்பட்ட படிப்பு—ஒரு வணக்க செயல். 2000, அக்டோபர் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 14-15, பாராக்கள் 6-10-ன் அடிப்படையில் பேச்சு.
20 நிமி: “‘சரியான மனச்சாய்வுள்ளவர்களுக்கு’ உதவுங்கள்.”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். மறுசந்திப்புகள் செய்வதற்கு, மார்ச் 1997 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-லுள்ள பெட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 42, முடிவு ஜெபம்.
டிசம்பர் 22-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. பக்கம் 6-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் டிசம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஜனவரி 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அடுத்த வாரம் நடைபெறும் விசேஷ ஊழியக் கூட்டத்தைப் பற்றி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்; அதில், நோயாளியின் தேவைகள், உரிமைகள் வீடியோவை மறுபார்வை செய்த பிறகு, மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டை பற்றி கலந்தாலோசிப்போம்; அத்துடன் அன்று அந்த அட்டை விநியோகிக்கப்படும்.
15 நிமி: சபை தேவைகள்.
18 நிமி: “தகுதியானவர்களைத் தேடுதல்.”c இக்கட்டுரையை சபை பிராந்தியத்துக்குப் பொருத்திக் காட்டவும். எந்த சமயத்தில் அப்பகுதியிலுள்ளோர் பெரும்பாலும் வீட்டிலிருக்கிறார்கள்? மாலை வேளையில் அல்லது பிற்பகல் வேளையில் ஊழியம் செய்வதால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? அரிதாகவே வீட்டிலிருக்கும் ஆட்களை சந்திக்க என்ன வழிகளைப் பயன்படுத்தலாம்?
பாட்டு 209, முடிவு ஜெபம்.
டிசம்பர் 29-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துங்கள். ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்.
17 நிமி: “முக்கிய மருத்துவ முறையை சிறப்பித்துக்காட்டும் வீடியோ.” தகுதி வாய்ந்த மூப்பர் நடத்த வேண்டும். அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள், இரத்தத்தின் புனிதத் தன்மை பற்றிய கடவுளுடைய சட்டத்திற்கு மரியாதை காட்ட வேண்டும் என்ற முக்கியமான காரணத்திற்காகவே இரத்தமேற்றிக் கொள்வதை கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள் என்பதை சுருக்கமாக வலியுறுத்துங்கள். அதைத் தொடர்ந்து உடனடியாக கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளின் அடிப்படையில் நோயாளியின் தேவைகள், உரிமைகள் வீடியோவை கலந்தாலோசியுங்கள். கடைசி பாராவை வாசிப்பதுடன் நிறைவு செய்யுங்கள்.
23 நிமி: தைரியமாக மருத்துவ சவால்களை சந்தித்தல். கிளை அலுவலகம் அனுப்பிய குறிப்புத்தாளைப் பயன்படுத்தி தகுதி வாய்ந்த மூப்பர் தரும் பேச்சு. “இரத்தத்திற்கு விலகியிருக்க நமக்கு உதவும் ஏற்பாடுகள்” என்ற பெட்டியிலுள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 182, முடிவு ஜெபம்.
ஜனவரி 5-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: உங்கள் உழைப்பு வீண்போவதில்லை. (1 கொ. 15:58) சபையாருடன் கலந்தாலோசிப்பு. ஆரம்ப நாட்களில் செய்யப்பட்ட ஊழியத்தைப் பற்றிய விவரங்களை சொல்லும்படி அநேக ஆண்டுகளாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரஸ்தாபிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். அப்போது சபையில் எத்தனை பேர் இருந்தார்கள்? ஊழியம் செய்வதற்கான சபை பிராந்தியம் எவ்வளவு பெரியதாக இருந்தது? ராஜ்ய செய்திக்கு ஜனங்கள் எப்படி செவிசாய்த்தார்கள்? எப்படிப்பட்ட எதிர்ப்பை நீங்கள் சந்தித்தீர்கள்? இத்தனை வருடங்களில் உங்கள் பிராந்தியத்தில் ராஜ்ய பிரசங்க வேலை எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது?
20 நிமி: யெகோவாவின் வணக்கம் எப்படி நம் வாழ்க்கையை வளமுள்ளதாக ஆக்கியிருக்கிறது? சபையாருடன் கலந்தாலோசிப்பு. சந்தோஷமும் அர்த்தமுமுள்ள வாழ்க்கைக்கு மெய் வணக்கம் திறவுகோல். (1) இது பிரச்சினைகளையும் வாழ்க்கை கவலைகளையும் சமாளிக்க நமக்கு உதவுகிறது. (பிலி. 4:6, 7) (2) இது கடவுளுக்குப் பிரியமான குணங்களை வளர்த்துக்கொள்ள நம்மை உற்சாகப்படுத்துகிறது. (2 பே. 1:5-8) (3) இது நம் நேரத்தையும் வள ஆதாரங்களையும் அதிக பிரயோஜனமான விதத்தில் பயன்படுத்த நமக்கு உதவுகிறது. (1 தீ. 6:17-19) (4) இது அசைக்க முடியாத எதிர்கால நம்பிக்கையை அளிக்கிறது. (2 பே. 3:13) (5) இது யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறது. (யாக். 4:8) யெகோவாவை அறியாத, அவரை சேவிக்காத ஜனங்களிடம் இக்காரியங்கள் குறைவுபடுகின்றன என்பதை வேறுபடுத்திக் காட்டுங்கள்.
பாட்டு எண் 136, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.