அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஏற்கெனவே ஜனங்களிடம் இருந்தால் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தை அளிக்கலாம். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளையும் அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களை மறுசந்திப்பு செய்கையில், அமைப்புடன் நிரந்தர தொடர்பு வைத்திராமல், நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கோ மட்டும் வந்து போகும் நபர்களையும் சந்தியுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அவர்களிடம் அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சந்திப்போரிடம், முக்கியமாக அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் சிலரிடம் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி செய்ய வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள். தங்களுக்குக் குழந்தைகள் இல்லையென சொல்லுபவர்களுக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். அந்த சிற்றேட்டை உபயோகித்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை சபை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். தங்களுக்கென பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய இந்த ஏற்பாடு உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.