பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளித்தல்
◼ “இங்கு சொல்லியிருப்பது போல் ஜனங்கள் வாழ்ந்தால் இந்த உலகம் நல்லா இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்களா? [மத்தேயு 7:12-ன் முற்பகுதியை வாசிக்கவும். பிறகு பதிலளிக்க அனுமதிக்கவும்.] இதுவரை பூமியில் வாழ்ந்த போதகர்களிலேயே மிகப் பெரிய போதகருடைய அநேக போதனைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.” 17-ம் அதிகாரத்திலுள்ள படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் சிறப்பித்துக் காட்டுங்கள்.
◼ “இன்று அநேக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனதில் நல்ல நெறிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக பதிய வைக்க முயற்சி செய்கிறார்கள். இது முக்கியமென நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்னர் நீதிமொழிகள் 22:6-ஐ வாசியுங்கள்.] சின்னக் குழந்தையாக இருக்கும்போதே தங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென பெற்றோர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளதை கவனியுங்கள். அப்படி செய்ய அவர்களுக்கு உதவும் விதத்தில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.” அதிகாரம் 15, 18, அல்லது 32-லுள்ள படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் வலியுறுத்திக் காட்டுங்கள்.
◼ “பிள்ளைகள் சிலசமயம் கேள்விகள் கேட்கும்போது பெற்றோர்கள் திக்குமுக்காடிப் போகிறார்கள். சில கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவது ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது, இல்லையா? [பதிலளிக்க அனுமதியுங்கள். பின்னர் 2 தீமோத்தேயு 3:14, 15-ஐ வாசிக்கவும்.] தீமோத்தேயு சின்னஞ்சிறு குழந்தையாய் இருந்தபோதே அவருடைய அம்மாவும் பாட்டியும் பைபிளிலிருந்து அவருக்கு கற்பித்தார்கள். அதேபோல் இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க இந்தப் புத்தகம் உதவும்.” அதிகாரங்கள் 11, 12 அல்லது அதிகாரங்கள் 34 முதல் 36 வரை உள்ள சில படங்களையும் அவற்றின் குறிப்புகளையும் சிறப்பித்துக் காட்டுங்கள்.