கேள்விப் பெட்டி
◼ வேறொரு மொழித் தொகுதி ஒன்றை ஆரம்பிப்பது எப்போது பொருத்தமானது?
ஒரு சபையின் பிராந்தியத்தில் வேறொரு மொழி பேசும் அநேகர் இருந்தார்களேயாகில் அந்த மொழியில் பிரசங்க வேலையை ஒழுங்கமைக்க மூப்பர்கள் தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும். (km-TL 7/02 பக். 1; km-TL 2/98 பக். 3-4) வேறு மொழி பேசுபவர்கள் அடுத்துள்ள இரண்டு அல்லது அதற்கு அதிகமான சபை பிராந்தியங்களில் பரவலாக வசிக்கலாம். அப்படியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை வட்டாரக் கண்காணி(கள்) சொல்வார்(கள்); இவ்வாறு அந்த சபைகள் அனைத்தும் பிரசங்க வேலையில் ஒத்துழைப்பதற்கு உதவுவார்(கள்). அந்த மொழியில் கூட்டங்கள் நடந்தால் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு அவ்வப்போது ஒரு பொதுப் பேச்சை அல்லது காவற்கோபுர படிப்பை ஏற்பாடு செய்யலாம்.
பின்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகையில் வேறொரு மொழித் தொகுதியை உருவாக்கலாம்: (1) அந்த மொழியில் நற்செய்தியை வெகு நன்றாக புரிந்துகொள்ளும் பிரஸ்தாபிகளோ ஆர்வம் காட்டுபவர்களோ இருக்கையில். (2) முன்நின்று வழிநடத்தவும், வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு கூட்டத்தையாவது நடத்தவும் தகுதிவாய்ந்த ஒரு மூப்பர் அல்லது உதவி ஊழியர் இருக்கையில். (3) அந்தத் தொகுதிக்கு மனமுவந்து ஆதரவளிக்க ஒரு மூப்பர் குழு இருக்கையில். இந்தத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகையில், அதை கிளை அலுவலகத்திற்கு மூப்பர்கள் தெரிவிக்க வேண்டும்; அப்போதுதான் முறைப்படி அந்தத் தொகுதியை அங்கீகரிக்கவும் மேலுமான அறிவுரைகளைக் கொடுக்கவும் முடியும்.
ஆரம்பத்தில் அநேக தொகுதிகள் சபை புத்தகப் படிப்பை வாராவாரம் நடத்துகின்றன. பின்னர் பொதுப் பேச்சு, காவற்கோபுர படிப்பு போன்றவற்றை அத்துடன் சேர்த்துக்கொள்ள மூப்பர்கள் ஒப்புதல் அளிக்கலாம். அந்த மொழி பேசும் தகுதிவாய்ந்த மூப்பரோ உதவி ஊழியரோ ஆலோசகராக சேவிக்க முடிந்தால், துணை வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தேவராஜ்ய ஊழியப் பள்ளி பேச்சு நியமிப்பு எண்கள் 2, 3, 4 ஆகியவற்றை நடத்தலாம். ஆனாலும் போதனா பேச்சு, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள், ஊழியக் கூட்டம் ஆகியவற்றிற்கென பிரதான சபையில் நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யலாம். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களையும் அந்த மொழித் தொகுதிக்காக ஏற்பாடு செய்யலாம்.
மூப்பர் குழுவின் மேற்பார்வையின் கீழ் வேறொரு மொழித் தொகுதியிலுள்ள அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். மூப்பர்கள் சமநிலையான வழிநடத்துதலை அளிக்க வேண்டும், தொகுதியின் தேவைகளைக் கவனித்துக் கொள்வதில் உள்ளான ஆர்வம் காட்ட வேண்டும். வட்டாரக் கண்காணி பிரதான சபையை சந்திக்க வருகையில் அந்த மொழித் தொகுதியில் உள்ளவர்களையும் ஆவிக்குரிய விதத்தில் உற்சாகப்படுத்துவதற்காக அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்யவும் ஏற்பாடு செய்வார். யெகோவாவின் ஆசீர்வாதத்துடன் காலப்போக்கில் அந்த மொழித் தொகுதியும் ஒரு சபையாக ஆகலாம்.