ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 13-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள குறிப்புகள் உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமாயிருந்தால், செப்டம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) செப்டம்பர் 15 காவற்கோபுரத்தையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இவை தவிர வேறு அறிமுகங்களையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும் அதில் கண்ட நல்ல அம்சங்களை சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “உங்கள் கண்களை தெளிவாக வையுங்கள்.”a கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை பயன்படுத்துங்கள். நேரம் இருந்தால், அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களை சிறப்பித்துக் காட்டுங்கள்.
18 நிமி: நமது நற்கிரியைகளுக்கு கண்கண்ட சாட்சிகள். (1 பே. 2:12) நவம்பர் 1, 2002, காவற்கோபுரம், பக்கங்கள் 12-14, பாராக்கள் 14-20-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். நமது நற்கிரியைகளை கவனிக்கிற உள்ளூர் மக்கள் எந்தளவு கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 162, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த நம் ராஜ்ய ஊழியத்தின் முன்பக்கத்தில் காணப்படும் கிளை அலுவலகக் கடிதத்திலுள்ள சிறப்புக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். அக்டோபர் 4-ல் துவங்கும் வாரத்தின் ஊழியக் கூட்டப் பகுதிக்காக தயாரிக்கும் வகையில் எண்ணாகமம் 16:1-35-ஐ வாசித்த பின்பு யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள் என்ற ஆங்கில வீடியோவை பார்க்குமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: கடந்த வருடம் எதை சாதித்தோம்? 2004 ஊழிய ஆண்டிற்கான சபை அறிக்கையின் அடிப்படையில் ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு. அந்த அறிக்கையின் நல்ல அம்சங்களுக்கு கவனம் செலுத்துங்கள்; சாதித்த மிகச் சிறந்த காரியங்களுக்காக சபையாரை பாராட்டுங்கள். பயனியர்களின் கடின உழைப்பை சிறப்பித்துக் காட்டுங்கள். வரவிருக்கும் வருடத்தில் சபையார் கவனம் செலுத்த வேண்டிய ஓரிரு அம்சங்களை குறிப்பிடுங்கள்.
20 நிமி: நன்மை செய்வதில் நிலைத்திருத்தல். (கலா. 6:10) ஒழுங்கான பயனியர் சேவை அல்லது அவ்வப்போது துணைப் பயனியர் சேவை செய்யும் இரண்டு, மூன்று பேரை பேட்டி காணுங்கள். யெகோவாவின் சேவையில் என்னென்ன தடைகளை அவர்கள் சந்தித்திருக்கின்றனர், அவற்றை எவ்வாறு சமாளித்தனர்? மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் நிலைத்திருக்க அவர்களுக்கு எது உதவியிருக்கிறது? கிறிஸ்தவ ஊழியத்தில் எடுத்த முயற்சிகள் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படி பலன் தந்திருக்கிறது? பொருத்தமாயிருந்தால், வேற்று மொழி பேசுவோரிடம் நற்செய்தியை தெரிவிப்பதற்கு சபை செய்த ஏற்பாடுகளைப் பற்றிய குறிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் அனைவரது ‘விசுவாசத்தின் கிரியையையும், அன்பின் பிரயாசத்தையும், . . . நம்பிக்கையின் பொறுமையையும் [“சகிப்புத்தன்மையையும்,” NW]’ பாராட்டுங்கள்.—1 தெ. 1:2, 3.
பாட்டு 103, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 27-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. செப்டம்பர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். செப்டம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பில் மூன்றாவது) அக்டோபர் 1 காவற்கோபுரத்தையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
10 நிமி: யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது. பேச்சு. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள வாராந்தர பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து நாம் இன்னும் முழுமையாக பயனடைய “யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் காவற்கோபுரம் பத்திரிகையின் சில இதழ்களில் வர ஆரம்பித்துள்ளன. செப்டம்பர் 15, 2004 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 24-7-ல் உள்ள விஷயங்களைப் பயன்படுத்தி, இந்தக் கட்டுரைகளின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுங்கள். ஒரு பைபிள் புத்தகத்தைப் பற்றிய பொதுவான சுருக்கம் அளிக்கப்பட்ட பின், “வேதப்பூர்வ கேள்விகளுக்கு பதில்கள்” என்ற பகுதியில் சில கடினமான வசனங்களுக்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. “நமக்குப் பாடம்” என்ற தலைப்பின் கீழிருக்கும் குறிப்புகள் வாசிப்புப் பகுதியிலுள்ள தகவலின் நடைமுறைப் பயனுக்கு கவனத்தை ஈர்க்கின்றன. கடவுளுடைய வார்த்தையை இன்னும் நன்கு புரிந்துகொள்ள இத்தொடர் கட்டுரைகள் உதவுகிறதை விளக்குவதற்கு சில குறிப்பிட்ட உதாரணங்களை கலந்தாலோசியுங்கள். அடுத்த வாரம் உபாகம புத்தகத்திலிருந்து வாசிப்புப் பகுதியை தொடங்குகையில் இந்தக் கட்டுரையை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “பைபிளை நன்கு பயன்படுத்துங்கள்.”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 145-ல் பாராக்கள் 2-3-ல் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் ஆரம்பியுங்கள். முதல் சந்திப்பைப் போலவும், மறுசந்திப்பைப் போலவும் இரண்டு சுருக்கமான நடிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; மேற்கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை எப்படி பொருத்தலாம் என்பதை காண்பியுங்கள்.
பாட்டு 38, முடிவு ஜெபம்.
அக்டோபர் 4-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “யெகோவாவின் அதிகாரத்திற்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.” யூதா 11-ம் வசனத்தை வாசியுங்கள்; ஆரம்பக் குறிப்புகள் இரண்டு நிமிடங்களுக்கு மேல் சென்று விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். பின்பு கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தையும் பயன்படுத்தி சபையாருடன் கலந்தாலோசிப்பை உடனடியாக ஆரம்பியுங்கள். யெகோவாவின் அங்கீகாரத்தை தொடர்ந்து பெறுவதற்கு, கோராகுவின் கலக மனப்பான்மையை நாம் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்; அத்துடன், யெகோவாவிடம் உண்மைப்பற்றுறுதியைக் காட்டுவதைவிட வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காத கோராகுடைய குமாரர்களின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் சிறப்பித்துக் காட்டுங்கள்.
பாட்டு 99, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.