ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால்) பிப்ரவரி 15 காவற்கோபுரத்தையும், பிப்ரவரி 8 விழித்தெழு!-வையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மாதிரியாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்கங்களை சபை பிராந்தியத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் விதத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள்.—நம் ராஜ்ய ஊழியம், ஜனவரி 2005, பக். 8-ஐக் காண்க.
35 நிமி: “நினைவு ஆசரிப்புக் காலம்—கூடுதலாக ஊழியம் செய்வதற்கான காலம்.”a ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். பாரா 6-ஐக் கலந்தாலோசிக்கையில், அக்டோபர் 8, 2004 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 22-23-ல் காணப்படும் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். துணைப் பயனியர் சேவைக்கு விண்ணப்பித்திருப்பவர்களின் பெயர்களை அறிவியுங்கள். கூடுதல் வெளி ஊழிய கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் சுருக்கமாகத் தெரிவியுங்கள். இந்த வருட நினைவு ஆசரிப்புக் காலத்தில் ஏதாவது ஒரு வழியில் கூடுதலாக ஊழியம் செய்ய அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 14, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 6-ல், “சத்தியத்தைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்” என்ற பெட்டியிலுள்ள முக்கியக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். தேவைப்படுகையில் உடனடியாக ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) என்ற படிவத்தைப் பூர்த்தி செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “யெகோவாவின் அன்புள்ள தயவிற்கு நன்றி தெரிவியுங்கள்.”b நினைவு ஆசரிப்பு நடைபெறும் நேரத்தையும் இடத்தையும் பேச்சாளரின் பெயரையும் தெரிவியுங்கள்; இது சம்பந்தமாக வேறு ஏதாவது விவரங்கள் இருந்தால் அவற்றையும் தெரிவியுங்கள். பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கையில், ஒரு சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரு பிரஸ்தாபி தன் பத்திரிகை மார்க்கத்திலுள்ள ஒருவரை நினைவு ஆசரிப்புக்கு அழைப்பது போல் அது இருக்கட்டும். அச்சிடப்பட்ட நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்களை இன்னும் சபையாருக்குக் கொடுக்காதிருந்தால், கூட்டம் முடிந்தவுடன் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 6.”c நான்கு நிமிட நடிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில், நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களில் ஏன் வெகு சிலர் மட்டுமே அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கு கொள்கிறார்கள் என்ற கேள்வியை பைபிள் மாணாக்கர் கேட்பது போல் இருக்கட்டும். அப்படிக் கேட்டதற்காக படிப்பு நடத்தும் பிரஸ்தாபி அவரைப் பாராட்டுகிறார். அந்தக் கேள்வியை எழுதிக் கொள்கிறார். அன்றைய படிப்பு முடிந்தவுடன் அதை விளக்குவதாகக் கூறுகிறார். படிப்பு முடிந்ததும், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 267-8-ல் காணப்படும் கேள்விக்கு மாணாக்கரின் கவனத்தைத் திருப்புகிறார். “அப்பத்திலும் திராட்ச மதுவிலும் யார் பங்குகொள்வர்?” என்பதே அந்தக் கேள்வி. அதை இருவருமாய் சேர்ந்து வாசிக்கின்றனர். தன் கேள்விக்கு தெள்ளத் தெளிவான பதில் கிடைத்ததற்காக மாணாக்கர் நன்றி கூறுகிறார்.
பாட்டு 21, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. பிப்ரவரி மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு ஞாபகமூட்டுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால்), மார்ச் 1 காவற்கோபுரத்தையும் மார்ச் 8 விழித்தெழு!-வையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். நடைமுறையான வேறு அறிமுகங்களையும் பயன்படுத்தலாம். ஒரு நடிப்பின் முடிவில், வீட்டுக்காரரை நினைவு ஆசரிப்புக்கு பிரஸ்தாபி அழைப்பதுபோல் காட்டுங்கள்.
15 நிமி: பலவீனருக்குக் கரிசனை காட்டுங்கள். (அப். 20:35) ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகத்திற்குப் பிறகு, ஜூலை 1, 2004 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 17-18-ல் காணப்படும் 12-16 பாராக்களை, காவற்கோபுர படிப்பைப் போலவே கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு முறையில் நடத்துங்கள். நன்கு வாசிக்கும் ஒரு சகோதரரைப் பாராக்களை வாசிக்கச் சொல்லுங்கள். இந்த வருட நினைவு ஆசரிப்பு, விசேஷ பேச்சு ஆகியவை சம்பந்தமாக அந்தத் தகவலை எப்படிப் பின்பற்றலாம் என்பதற்கு முக்கிய கவனம் செலுத்துங்கள்.
20 நிமி: வேறொரு மொழி பேசுபவர்களுக்கு எப்படி உதவுவது. சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்திலுள்ள முன்னுரையின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அந்தப் புதிய பிரசுரத்தின் சிறப்பம்சங்களைக் குறிப்பிடுங்கள். நமக்குத் தெரியாத மொழியைப் பேசுவோருக்கு உதவுவதற்காக எந்த மூன்று படிகளை எடுக்க வேண்டுமென கலந்தாலோசியுங்கள். நம் ராஜ்ய ஊழியம், ஜூலை 2003 இதழில், பக்கம் 8-ல் காணப்படும் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுக்காரர் ராஜ்ய செய்தியில் அக்கறை காட்டாவிட்டாலும் பொதுவாக ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கள். இந்தப் புதிய பிரசுரத்தைப் பயன்படுத்தும் விதத்தை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 72, முடிவு ஜெபம்.
மார்ச் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” என்ற பெட்டியிலுள்ள முக்கியக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “ஊழியத்தில் பத்திரிகைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.”d பாராக்கள் 3, 4-ஐக் கலந்தாலோசிக்கையில், சபை பிராந்தியத்திற்குப் பொருந்தும் தகவலைக் குறிப்பிடுங்கள். வியாபார பிராந்தியங்களிலும், தெரு ஊழியத்திலும், பொதுவிடங்களிலும், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் பத்திரிகைகளை அளிப்பதில் கெட்டிக்காரராக இருக்கும் ஓரிரு பிரஸ்தாபிகளை சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் பத்திரிகைகளை அளிக்கும் விதத்தை விளக்கமாகச் சொல்லச் சொல்லுங்கள். பத்திரிகையை அளிக்கும் சுருக்கமான ஒரு நடிப்புக்கு, அல்லது அத்தகைய நிஜசம்பவ நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 192, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.