ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஏப்ரல் 4-ல் துவங்கும் வார ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் வகையில் தாவீது—கடவுள் மீது நம்பிக்கை வைத்தார் என்ற ஆங்கில வீடியோவைப் பார்த்து வரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, மார்ச் 15 காவற்கோபுரத்தையும் மார்ச் 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவரை மீண்டும் போய் சந்திப்பது போல் ஒரு நடிப்பு இருக்கட்டும். அதன் முடிவில் மார்ச் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தின் கடைசி பக்கத்தைக் காட்டி, வரவிருக்கும் நினைவு ஆசரிப்பைப் பற்றி வீட்டுக்காரருக்கு நினைப்பூட்டுவது போல் அது இருக்கட்டும்.
20 நிமி: “பைபிளுக்கு அதிக முக்கியத்துவம்!”a
15 நிமி: நம்மைப் பலப்படுத்துவதற்கான ஏற்பாடு. ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகத்துக்குப் பிறகு இயர்புக் 2005-ஐச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். நவீன நாட்களில் யெகோவா நடப்பிக்கும் அற்புத செயல்களைக் குறித்துத் தியானிப்பது அவரிடமும் நம் உலகளாவிய சகோதரர்களிடமும் நம்மை நெருங்கி வரச் செய்கிறது. (சங். 77:12-14) “விசுவாசத்தில் உறுதியாயிருந்து” பிசாசை தைரியமாய் எதிர்ப்பதற்கு நம்மைப் பலப்படுத்துகிறது. (1 பே. 5:8, 9) யெகோவாவின் அமைப்பைப் போற்றுவதற்குப் புதியவர்களுக்கு உதவுகிறது. இயர்புக் 2005-ஐ வாசித்தபோது தங்கள் மனதைக் கவர்ந்த குறிப்புகளைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். இயர்புக்-கைப் படித்து முடிக்க நேரத்தை எப்படித் திட்டமிட்டார்கள் என்பதை விளக்கும்படி ஓரிருவரிடம் முன்கூட்டியே சொல்லி வையுங்கள்.
பாட்டு 137, முடிவு ஜெபம்.
மார்ச் 21-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 7.”b இந்தப் பகுதியைத் தயாரிக்கும்போது, காவற்கோபுரம், ஜூலை 15, 2002, பக்கம் 27, பாராக்கள் 5-6-லுள்ள தகவலையும் காண்க.
25 நிமி: “2005 ‘கடவுளுக்குக் கீழ்ப்படிதல்’ யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு.”c சபை செயலர் நடத்த வேண்டும். பாரா 2-ஐக் கலந்தாலோசித்த பிறகு உங்கள் சபை எந்த இடத்தில், எந்தத் தேதியில் நடைபெறுகிற மாநாட்டுக்குச் செல்ல நியமிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவியுங்கள். பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கும்போது பக்கம் 4-லுள்ள பெட்டியில் காணப்படும் எல்லாக் குறிப்புகளையும் சிந்தியுங்கள். முடிந்த வரை சீக்கிரத்தில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 79, முடிவு ஜெபம்.
மார்ச் 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை அனுப்பியதற்குக் கிடைத்த ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். மார்ச் மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் வகையில், தாவீது—கடவுள் மீது நம்பிக்கை வைத்தார் என்ற ஆங்கில வீடியோவைப் பார்த்து வரும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். ஏப்ரல் 10-ம் தேதி கொடுக்கவிருக்கும் விசேஷப் பொதுப் பேச்சிற்கு ஆர்வம் காட்டுபவர்களை அழைக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். ஏப்ரல், மே மாத பிரசுர அளிப்புகளை குறிப்பிடுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, ஏப்ரல் 1 காவற்கோபுரத்தையும் ஏப்ரல் 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். உலகளாவிய நம் வேலைக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்பதை ஒவ்வொரு நடிப்பிலும் விளக்குங்கள்.—காவற்கோபுரம் பக். 2 அல்லது விழித்தெழு! பக். 5-ஐக் காண்க.
15 நிமி: சபைத் தேவைகள்.
20 நிமி: “ஊழியப் பயிற்சிப் பள்ளி—பெரிதும் அனுகூலமுமான கதவு.” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். இயர்புக் 2004, பக்கம் 239-40-லுள்ள குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களுக்காக வட்டார மாநாட்டின்போது நடத்தப்படும் கூட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள். தகுதியுள்ளவர்களை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 116, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 4-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். (யோவா. 13:35) காவற்கோபுரம், பிப்ரவரி 1, 2003, பக்கங்கள் 15-18, பாராக்கள் 10-21-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு. ஏப்ரல், மே மாத பிரசுர அளிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருப்பவர்களுடன் மீண்டும் பைபிள் படிப்பை ஆரம்பிக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகிறோம். பலவீனமானவர்களுக்கு உதவுவதில் பிரஸ்தாபிகள் எப்படி மூப்பர்களுடன் ஒத்துழைக்கலாம் என்பதைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
25 நிமி: “எக்காலத்திற்கும் பயனுள்ள செய்தியுடன் ஒரு வீடியோ.” சங்கீதம் 91:2-ஐயும் 31:14-ஐயும் வாசித்து ஒவ்வொரு வசனத்தையும் வெகு சுருக்கமாக விளக்குங்கள். பிறகு நேரடியாக, தாவீது வீடியோவைப் பற்றி சபையாருடன் வினாடி-வினா நடத்துங்கள்; இதற்கு இரண்டாவது பாராவிலுள்ள எல்லாக் கேள்விகளையும், மூன்றாவது பாராவில் கேட்கப்பட்டுள்ள கேள்வியையும் பயன்படுத்துங்கள். பிறகு, DVD-யில் ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள “கற்கும் முறைகள்” என்பதைக் கலந்தாலோசித்ததிலிருந்து எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள் என்பதைக் குடும்பத்தாரிடம் கேளுங்கள். சங்கீதம் 56:11-ஐ வாசிப்பதுடன் நிறைவு செய்யுங்கள்.
பாட்டு 36, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.