ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு ஆலோசனைகளையோ பயன்படுத்தி, பிப்ரவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், பிப்ரவரி விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். ஒரு நடிப்பு, பொது இடத்தில் சாட்சி கொடுப்பதைப் போல் இருக்கட்டும்.
10 நிமி:யெகோவாவின் அமைப்போடு இணைந்து செல்கிறீர்களா? யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், பக்கங்கள் 7-10-ன் அடிப்படையில் பேச்சு.
25 நிமி:“‘உலகின் ஒளியிடம்’ கவனத்தைத் திருப்புங்கள்.”a ஊழியக் கண்காணி நடத்துவார். துணைப் பயனியர்களாக சேவை செய்ய விண்ணப்பித்திருப்பவர்களின் பெயர்களை அறிவியுங்கள். வெளி ஊழியத்திற்குச் செய்யப்பட்டிருக்கும் கூடுதலான ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். பிப்ரவரி 2005, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பக்கம் 5-ல் துணைப் பயனியர் சேவைக்கான மாதிரி அட்டவணைகள் பற்றியும் சொல்லுங்கள்.
பாட்டு 224, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி:“பிரசங்கிக்க வாய்ப்புகளை உருவாக்குங்கள்.”b கஷ்டமான சூழ்நிலையிலும், சாட்சிகொடுக்க வாய்ப்புகளை எவ்வாறு உருவாக்க முடிந்தது என்பதை ஒரு பிரஸ்தாபியிடம் கேளுங்கள்.
20 நிமி:“எப்பொழுதும் கிடைக்கிற உதவி.”c மூப்பர் கொடுக்கும் பேச்சு. நவம்பர் 1998, நவம்பர் 2000 ஆகிய நம் ராஜ்ய ஊழிய இதழ்களிலுள்ள கேள்விப் பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
பாட்டு 1, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பிப்ரவரி மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்துங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு ஆலோசனைகளையோ பயன்படுத்தி, மார்ச் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தை அல்லது மார்ச் விழித்தெழு!-வை அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
10 நிமி:சபை தேவைகள்.
25 நிமி:பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்தல். மார்ச் மாதத்தில் இந்தப் புதிய புத்தகத்தை அளிப்போம். ஜனவரி 2006, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில், பக்கங்கள் 3-6-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பயன்படுத்தி, சபையின் பிராந்தியத்திற்குப் பொருத்தமான பல பிரசங்கங்களை மறுபார்வை செய்து, அவற்றை நடித்துக்காட்டச் செய்யுங்கள். இந்தப் புதிய புத்தகத்தை அளித்தபோது, முக்கியமாக பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் கிடைத்த மிகச் சிறந்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 148, முடிவு ஜெபம்.
மார்ச் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். துண்டுப்பிரதிகள் எளிதில் எடுத்துச் செல்ல முடிந்தவை; கண்களைக் கவருபவை. எனவே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில், பொது இடங்களில் பிரசங்கிக்கையில், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில் என வித்தியாசமான சூழ்நிலைகளில் உரையாடலை ஆரம்பிக்க அவை மிகவும் பிரயோஜனமாக இருக்கும். துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! என்ற புதிய துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி ஓர் உரையாடலை ஆரம்பிப்பதை நடித்துக் காட்டுங்கள். அதில் பக்கம் 2-ல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஒரு வசனத்தைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி:“தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள் —நன்கு தயாரித்துச் செல்வதன் மூலம்.”d பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளிப்பதற்காக இரண்டு பிரஸ்தாபிகள் தயாரிப்பதைப் போன்ற ஒரு சுருக்கமான நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஜனவரி 2006, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலிருந்து ஒரு பிரசங்கத்தைத் தேர்ந்தெடுத்து, அதை தங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு சொந்த வார்த்தைகளில் எவ்வாறு மாற்றியமைக்கிறார்கள் என்பதைக் காட்டுவதுபோல் அந்நடிப்பு இருக்கட்டும். அத்துடன், தாங்கள் தயாரித்த பிரசங்கத்தைப் பேசிப் பார்க்கப் போவதாகச் சொல்வதுடன் நடிப்பு முடியட்டும்.
20 நிமி:“கல்வி புகட்டுகிற வீடியோக்களை உபயோகியுங்கள்.”e இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வீடியோவையும் கலந்தாலோசிக்கையில், அதன் உறையைக் காட்டி, அதிலுள்ள விஷயங்களைத் தெரிவிக்கும் சுருக்கக் குறிப்புகளை வாசியுங்கள். தங்கள் ஊழியத்தில் இந்த வீடியோக்களைப் பயன்படுத்தியபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.—ஆங்கில இயர்புக் 1997, பக். 54 மற்றும் இயர்புக் 1995, பக். 50-1-ஐக் காண்க.
பாட்டு 68, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.