ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு ஆலோசனைகளையோ பயன்படுத்தி, மார்ச் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், மார்ச் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பின் முடிவிலும், பத்திரிகையின் பின்புற அட்டையைக் காட்டி, நினைவுநாள் ஆசரிப்புக்கு வரும்படி வீட்டுக்காரரை பிரஸ்தாபி அழைப்பதாக இருக்க வேண்டும்.
15 நிமி:“மீட்கும்பொருளிலிருந்து பயனடைய மற்றவர்களுக்கு உதவுங்கள்.”a இதற்கு அடுத்து வரும் பகுதி, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் பக்கங்கள் 206-8-ஐப் பயன்படுத்தி ஆட்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு அழைக்கும் விதத்தை மேலும் கலந்தாலோசிக்கும்.
20 நிமி:கர்த்தருடைய இராப்போஜனம்—கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் பக்கங்கள் 206-8-ன் அடிப்படையில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்பில், முதல் பாராவை வாசிப்பதன் மூலம் வீட்டுக்காரருக்கு எப்படி அந்த ஆசரிப்பை அறிமுகப்படுத்தலாம் என்பதைக் காட்டுங்கள். பின்னர் பாராக்களை வாசிக்காமலேயே பின்வரும் கேள்விகளுக்குச் சபையாரிடம் பதில்களைக் கேளுங்கள்: (பாரா 2) இயேசு தம் மரண நினைவுநாள் ஆசரிப்பை எப்போது ஆரம்பித்து வைத்தார்? (பாரா 3) கர்த்தருடைய இராப் போஜனத்தை எவ்வளவு அடிக்கடி ஆசரிக்க வேண்டும்? (பாரா 4) அந்த நினைவுநாள் ஆசரிப்பை பைபிள் எப்படி விவரிக்கிறது? (பாரா 5) அப்பத்தை தம் நிஜமான சரீரமாகவும் திராட்சரசத்தை தம் நிஜமான இரத்தமாகவும் அவர் மாற்றவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (பாரா 6) புளிப்பில்லாத அப்பம் எதை அடையாளப்படுத்துகிறது? (பாரா 7) சிவப்பு திராட்சரசம் எதை அடையாளப்படுத்துகிறது? (பாரா 8) யார் மட்டுமே அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கெடுக்க வேண்டும்? (பாரா 9) ஒவ்வொரு வருடமும் நினைவுநாள் ஆசரிப்பு எப்போது நடைபெறுகிறது, நாம் ஏன் அதில் கலந்துகொள்ள வேண்டும்? நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து முக்கிய வசனங்களைக் கலந்தாலோசியுங்கள். இந்தத் தகவலை தங்கள் பைபிள் மாணாக்கர்களுடனும் நினைவுநாள் ஆசரிப்புக்கு வரும்படி தாங்கள் அழைக்கும் நபர்களுடனும் சேர்ந்து கலந்தாலோசிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்; அப்படிக் கலந்தாலோசிக்கும்போது பாராக்களை வாசித்து, முக்கிய குறிப்புகளை சிந்தித்து, இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற எளிய கேள்விகளைப் பயன்படுத்த உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 134, முடிவு ஜெபம்.
மார்ச் 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். “நினைவுநாள் ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” என்ற பெட்டியிலுள்ள முக்கிய குறிப்புகளைச் சிந்தியுங்கள்.
23 நிமி:கடவுளுடைய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் பாகம். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 10-13-ன் அடிப்படையில் பேச்சு. “கிறிஸ்து வகிக்கும் பாகம்” என்ற உபதலைப்பின் கீழ் முதல் இரண்டு பாராக்களைக் கலந்தாலோசிக்கையில் நினைவுநாள் அழைப்பிதழை எப்படியெல்லாம் அளிக்கலாம் என்பதற்கான ஆலோசனைகளை நடித்துக்காட்ட மூன்று அல்லது நான்கு நிமிடங்களை ஒதுக்குங்கள். பிப்ரவரி 2006 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 3, பாரா 3-லுள்ள ஆலோசனைகளைச் சிந்தியுங்கள்.
12 நிமி:தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்வதன் மூலம் பலப்படுதல். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2006 சிறுபுத்தகத்திலுள்ள முன்னுரையின் அடிப்படையில் பேச்சும் நடிப்பும். ஒரு குடும்பம் அன்றைய நாளின் தினவசனத்தையும் குறிப்பையும் கலந்தாலோசிப்பதைக் காட்டும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 103, முடிவு ஜெபம்.
மார்ச் 27-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். மார்ச் மாத வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு ஆலோசனைகளையோ பயன்படுத்தி, ஏப்ரல் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஏப்ரல் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். ஆர்வம் காட்டுபவர்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு அழைக்க, அச்சிடப்பட்ட அழைப்பிதழை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுங்கள்.
10 நிமி:பூமி இன்னமும் கடவுளுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறதா? 2006, ஏப்ரல் 1 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையின் பின்புற அட்டையின் அடிப்படையில் பேச்சும் நடிப்பும். விசேஷ பொதுப் பேச்சுக்கு வரும்படி ஆட்களை அழைக்க எந்த வாய்ப்பையும் தவறவிடாதீர்கள். பைபிள் மாணாக்கர்களையும் பைபிள் படிப்பில் கலந்துகொள்ளாத அவர்களுடைய குடும்பத்தாரையும் அழைக்க மறந்துவிடாதீர்கள். ஆர்வம் காட்டும் அனைவரையும், வெளி ஊழியத்தில் சந்திப்பவர்களையும் அழையுங்கள். ஏப்ரல் 1 காவற்கோபுரத்தைப் பயன்படுத்தி, செயலற்றவராக ஆன ஒருவரையோ கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திவிட்ட ஒருவரையோ அழைப்பதுபோல் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி:சபையாரின் அனுபவங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை மார்ச் மாதத்தில் அளித்தபோது பெற்ற அனுபவங்களைச் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள். பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அதை வலியுறுத்திக் காட்டுங்கள். ஓரிரு சிறந்த அனுபவங்களை நிஜசம்பவ நடிப்புகளாக நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
பாட்டு 170, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 3-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். பிப்ரவரி 2006 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-லுள்ள, “பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைப் படித்து மகிழுங்கள்” என்ற கட்டுரையை சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திற்கான படிப்பு அட்டவணையிடம் கவனத்தைத் திருப்புங்கள். ஆர்வம் காட்டுபவர்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு அழைக்க, அச்சிடப்பட்ட அழைப்பிதழை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுங்கள்.
10 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“கடவுளுடைய வழியில் நடக்க தாழ்மையுள்ளவர்களுக்குக் கற்பியுங்கள்.”b ஜூலை 1, 2004, காவற்கோபுரம், பக்கம் 16, பாரா 9-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 93, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.