தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 24, 2006-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 6 முதல் ஏப்ரல் 24, 2006 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. நாம் போதிக்கையில் ஒரு குறிப்பிலிருந்து மற்றொரு குறிப்பிற்குச் செல்லும்போது ஏன் நிறுத்த வேண்டும், ஒருவேளை நாம் ஏன் நிறுத்தாமல் பேசக்கூடும்? [be-TL பக். 98 பாரா. 2-3]
2. மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்கும்போது நிறுத்திப் பேசுவது ஏன் முக்கியம்? [be-TL பக். 99 பாரா 5–பக். 100 பாரா 4]
3. பேச்சு கொடுக்கும்போது தகுந்த இடங்களில் அழுத்துவது ஏன் முக்கியம், இதை நாம் எப்படி நன்றாகச் செய்யலாம்? [be-TL பக். 101 பாரா. 1-5, பெட்டி]
4. எல்லோருக்கும் முன்பாக வாசிக்கும்போது முக்கிய கருத்துகளை நாம் எவ்வாறு வலியுறுத்தலாம்? [be-TL பக். 105 பாரா. 1-6]
5. போதிய சத்தத்துடன் போதிப்பது ஏன் முக்கியமானது, போதிய சத்தத்துடன் பேசுகிறோமா இல்லையா என்பதை நாம் எப்படித் தீர்மானிக்கலாம்? [be-TL பக். 107-8]
பேச்சு நியமிப்பு எண் 1
6. எஸ்தர், மொர்தெகாயின் சூழ்நிலையும் இன்றைய கிறிஸ்தவர்களின் சூழ்நிலையும் எந்த விதத்தில் ஒத்திருக்கிறது, நாம் எவ்வாறு அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்? [si-TL பக். 94 பாரா 17]
7. “அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்” என்று சாலொமோன் சொன்னபோது அவர் எதைப் பற்றி பேசினார்? (பிர. [சபை உரையாளர்] 2:11, பொது மொழிபெயர்ப்பு) [w-TL04 10/15 பக். 4 பாரா. 3-4]
8. கடவுள்மீது அன்பை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? (மாற். 12:30) [w-TL04 3/1 பக். 19-21]
9. ஆன்மீக மதிப்பீடுகளுக்கும் பொருளாசைக்கும் இடையே என்ன வேறுபாடுகள் உள்ளன? [w-TL04 10/15 பக். 5-7)
10. மாநாடுகளில் கவனம் சிதறாமல் செவிகொடுப்பதற்கு என்ன செய்வது உதவியாக இருக்கும்? [be-TL பக். 15-16]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. ஆமானின் முகம் ஏன் மூடப்பட்டது? (எஸ்தர் 7:8)
12. எப்படிப்பட்ட ஆவி சிருஷ்டி எலிப்பாஸுடைய சிந்தனையின் மீது செல்வாக்கு செலுத்தியது? (யோபு 4:15, 16) [w-TL05 9/15 பக். 26 பாரா 2]
13. யோபு 7:9, 10-ம் 10:21-ம் யோபுவுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருக்கவில்லை என்பதை அர்த்தப்படுத்துகின்றனவா?
14. “என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது” என்று சொல்வதன் மூலம் யோபு எதை அர்த்தப்படுத்தியிருப்பார்? (யோபு 19:20)
15. “என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று சொல்வதன் மூலம் யோபு எதை அர்த்தப்படுத்தினார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (யோபு 27:5)