உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/06 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 4/06 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்துபோகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கையில், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரின் மொழியில் இந்தப் பிரசுரம் இல்லாவிட்டால் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தையோ என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தையோ அளியுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், விழிப்புடன் இருங்கள்! ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். சில இடங்களில் பின்வரும் சிற்றேடுகளை அளிப்பது பொருத்தமாய் இருக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), திருப்தியான வாழ்க்கைக்கு வழி.

◼ ஏப்ரல் மாதத்திலிருந்து, 2006 மாவட்ட மாநாட்டு பேட்ஜ் கார்டுகள், உங்கள் சபையின் முக்கிய மொழியில் பிரசுரங்களோடு சேர்த்து அனுப்பி வைக்கப்படும். உங்கள் சபையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 கார்டுகள் உடைய கட்டுகளாக அனுப்பி வைக்கப்படும். சபையின் முக்கிய மொழி தவிர, வேறு மொழிகளில் தேவைப்பட்டால் மட்டுமே இவற்றை ஆர்டர் செய்ய வேண்டும். ஆனால், கூடுதலான பேட்ஜ் கார்டுகள் தேவைப்பட்டால், அவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205-TL), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL) ஆகிய படிவங்கள் போதுமானளவு கைவசம் இருக்கும்படி சபை செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குத் தேவையான அளவு படிவங்களை வைத்திருங்கள். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்களை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன் அவை முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

◼ ராஜ்ய மன்றங்களைக் கட்டவோ, புதுப்பிக்கவோ திட்டமிடுவதற்கு முன்பு, கிளை அலுவலகத்திலுள்ள கிங்டம் ஹால் கன்ஸ்ட்ரக்‍ஷன் டெஸ்க்குடன் மூப்பர்கள் தொடர்புகொள்ள வேண்டும். நிலத்தை, கட்டுமானப் பொருள்களை வாங்குவது சம்பந்தமாகவும், வேறு காரியங்கள் சம்பந்தமாகவும் ஞானமாகத் தீர்மானம் எடுப்பதற்கு உதவும் தகவல்களை அந்த இலாக்காவிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

◼ நடத்தும் கண்காணிகள், செயலர்கள் அனைவருடைய சரியான விலாசங்களையும், தொலைபேசி எண்களையும் கிளை அலுவலகம் கைவசம் வைத்திருப்பது அவசியம். ஆகவே, இவற்றில் எப்பொழுது மாற்றம் ஏற்பட்டாலும், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்றம் (S-29) என்ற படிவத்தை சபை ஊழியக் குழு முழுமையாகப் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு உடனடியாக கிளை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். STD கோடு மாற்றத்துக்கும் இது பொருந்தும்.

◼ தயவுசெய்து கவனிக்கவும்: இயர்லி காலண்டர் ஆஃப் லிட்ரேச்சர் ஐட்டம்ஸ்-⁠ன் படி, அடுத்த ஊழிய ஆண்டிற்குத் தேவையான படிவங்களை ஏப்ரல் மாதத்திலேயே ஆர்டர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே, லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) பக்கம் 2-⁠ல் பட்டியலிடப்பட்டுள்ள படிவங்கள் அனைத்திலும் உங்கள் சபைக்கு எவ்வளவு தேவை என்பதைக் குறிப்பிட்டு அடுத்த மாத லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட்டுடன் சேர்த்து ஆர்டர் செய்யுங்கள். சபைகள் அடிக்கடி ஓரிரு படிவங்களுக்காக அவசரமாய் ஆர்டர் செய்வது கவனிக்கப்பட்டிருக்கிறது. படிவங்கள் அனைத்தையும் லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட்டுடன் சேர்த்தே ஆர்டர் செய்ய வேண்டும்; இதனால் பணமும் நேரமும் மிச்சமாகும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்