உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/07 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 10/07 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்து, பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கோடு அதிலிருந்து கலந்தாலோசியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரர் தனக்குப் பிள்ளைகள் இல்லையென்று சொன்னால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இதற்குப் பதிலாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தையோ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தையோ அளிக்கலாம். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். சபையில் அப்படிப்பட்ட புத்தகங்கள் எதுவும் இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக, (கையிருப்பில் இருந்தால்) அறிவு புத்தகத்தையோ விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டையோ அளிக்கலாம்.

◼ டிசம்பர் மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், அது துணைப் பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த மாதம்.

◼ ஜனவரி மாத ஊழியக் கூட்டத்தில் உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை​—⁠நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற ஆங்கில வீடியோ பற்றி கலந்தாலோசிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த சிடி-யை முடிந்தளவு சீக்கிரத்தில் சபை மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

◼ “2008 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை,” இந்த மாத நம் ராஜ்ய ஊழிய பிரதியின் உட்சேர்க்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; 2008-ஆம் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்காக இதைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

◼ ஊழியக் கூட்டத்தில் கடைசி பாகத்தைக் கையாளுகிற சகோதரரே முடிவான பாடலையும் அறிவிக்க வேண்டுமென்பதைத் தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். அதன்பின் அவரோ, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த வேறொரு சகோதரரோ இறுதி ஜெபத்தைச் செய்ய வேண்டும்.

◼ புதிய ஊழிய ஆண்டில் தேவைப்படும் ஃபார்ம்கள் போதியளவு ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அடுத்த ஊழிய ஆண்டிற்கு அவை போதுமானவையாய் இருக்குமா என செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கூடுதலாகத் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக ஆர்டர் செய்யலாம்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? ​—⁠உருது

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? ​—⁠அரபிக்

இறைவன் வழி​—⁠இன்பவனம் செல்லும் இனிய வழி ​—⁠அரபிக்

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) ​—⁠அரபிக்

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) ​—⁠அரபிக்

துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! (துண்டுப்பிரதி எண் 27) ​—⁠அரபிக்

◼ மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:

“இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” ​—⁠ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்