உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/07 பக். 3-6
  • 2008 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2008 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
  • நம் ராஜ்ய ஊழியம்—2007
  • துணை தலைப்புகள்
  • அறிவுரைகள்
  • அட்டவணை
நம் ராஜ்ய ஊழியம்—2007
km 10/07 பக். 3-6

2008 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

அறிவுரைகள்

2008-⁠ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.

பிரசுரங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் [be-TL], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL].

பாட்டு, ஜெபம், வரவேற்புரையுடன் பள்ளியைச் சரியான நேரத்தில் ஆரம்பித்துக் கீழ்க்காணும் குறிப்புகளின்படி நடத்த வேண்டும். ஒரு பேச்சு முடிந்த பின்னர் அடுத்த பேச்சு என்னவென்று பள்ளிக் கண்காணி அறிவிப்பார்.

பேச்சு பண்பு: 5 நிமிடங்கள். பள்ளிக் கண்காணி, துணை ஆலோசகர் அல்லது தகுதி பெற்ற மற்றொரு மூப்பர் ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் ஒரு பேச்சு பண்பைப்பற்றிப் பேசுவார். (மூப்பர்கள் குறைவாக இருக்கும் சபைகளில் தகுதி பெற்ற உதவி ஊழியர்களைப் பயன்படுத்தலாம்.)

பேச்சு நியமிப்பு எண் 1: 10 நிமிடங்கள். இதைத் தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; இது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் அல்லது ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ புத்தகத்திலுள்ள பகுதியாக இருக்கும். இதைப் பத்து நிமிட போதனா பேச்சாகக் கொடுக்க வேண்டும். நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பது மட்டுமே இதன் குறிக்கோள் அல்ல; மாறாக சபைக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் விஷயத்தை வலியுறுத்திக் காட்டி, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானவை என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள மையப்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பேச்சைக் கொடுக்க நியமிக்கப்படும் சகோதரர்கள், உரிய நேரத்தில் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் இவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.

பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 10 நிமிடங்கள். இதை, தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; முதல் ஐந்து நிமிடத்தில் அவர் தகவலை சபையின் தேவைகளுக்கேற்ப பொருத்திக் காட்ட வேண்டும். அந்த வாரத்திற்கான பைபிள் வாசிப்புப் பகுதியில் எங்கிருந்தும் அவர் குறிப்புகளைக் கூறலாம். நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு பயனுள்ளது என்பதை சபையார் புரிந்துகொள்ள உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். தான் தயாரித்திருக்கும் சிறப்புக் குறிப்புகளைப் பேச்சாளர் ஐந்து நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும். ஏனெனில் சபையார் குறிப்புகளைச் சொல்வதற்கு ஐந்து நிமிடங்களை அவர் ஒதுக்கியாக வேண்டும். பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து தங்களுக்கு ஆர்வமூட்டிய விஷயத்தையும் அதன் பலன்களையும் சுருக்கமாக (30 விநாடிகள் அல்லது குறைவாக) சொல்லுமாறு அவர் சபையாரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். பின்பு, மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குப் பிரிந்து செல்லும்படி பள்ளிக் கண்காணி சொல்வார்.

பேச்சு நியமிப்பு எண் 2: 4 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக. இது சகோதரர்களுக்குரிய வாசிப்பு நியமனம். முன்னுரையோ முடிவுரையோ இல்லாமல் நியமிக்கப்பட்ட பகுதியை மாணாக்கர் வாசிக்க வேண்டும். புரிந்துகொள்ளுதல், சரளம், தகுந்த இடங்களில் அழுத்தம், குரல் வேறுபாடு, பொருத்தமான இடங்களில் நிறுத்தம், இயல்பு போன்ற குணங்களோடு வாசிக்க மாணாக்கருக்கு உதவுவதே பள்ளிக் கண்காணியின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்த நியமிப்பை பெறும் சகோதரிகள், ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தில் பக்கம் 82-⁠லுள்ள பட்டியலில் காணப்படும் பேச்சு அமைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள் அல்லது அவற்றில் ஒன்று அவர்களுக்கு நியமிக்கப்படும். கொடுக்கப்பட்ட மையப்பொருளை, சபையின் பிராந்தியத்திற்கு ஏற்றதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கிற வெளி ஊழியத்தின் ஓர் அம்சத்திற்கு மாணாக்கர் பொருத்த வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து அந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்பட்டிருக்கும் பேச்சுகளை புதிய மாணாக்கர்களுக்கு நியமிக்க வேண்டும். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வேதவசனங்களைப் பகுத்தாராயவும் பேச்சின் முக்கிய குறிப்புகளைப் புரிந்துகொள்ளவும் வீட்டுக்காரருக்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளிக் கண்காணி முக்கியமாக கவனிப்பார். உதவியாளர் ஒருவரை பள்ளிக் கண்காணியே நியமிப்பார்.

பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். நியமிக்கப்பட்ட மையப்பொருளை மாணாக்கர் படிப்படியாக விரிவாக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து இந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். இது சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ராஜ்ய மன்றத்தில் உள்ளவர்களிடம் நேரடியாகப் பேசுவதைப்போல் இதைக் கொடுக்க வேண்டும். சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-⁠ல் சொல்லப்பட்டதற்கு இசையவே எப்போதும் இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும். பொருத்தமான சந்தர்ப்பங்களில் பள்ளிக் கண்காணி பேச்சு எண் 4-ஐ ஒரு சகோதரருக்கு நியமிக்கலாம். நட்சத்திர குறியிடப்பட்ட (a) பொருளை, சபையாரைப் பார்த்துப் பேசுவதுபோல் கொடுப்பதற்காக சகோதரர்களுக்கு மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். உங்கள் சபையில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும் உள்ள பாகங்களைக் கையாளுவதற்கு நிறைய மூப்பர்களும் உதவி ஊழியர்களும் இருக்கிறார்கள் என்றால், முடிந்தவரையில் நட்சத்திர குறியிடப்பட்ட பேச்சுகளை மூப்பருக்கோ உதவி ஊழியருக்கோ நியமியுங்கள்.

ஆலோசனை: 1 நிமிடம். மாணாக்கர் எந்தப் பேச்சு பண்பில் உழைக்கிறாரென பள்ளிக் கண்காணி முன்கூட்டியே அறிவிக்க மாட்டார். பேச்சு எண் 2, 3, 4 ஆகியவற்றிற்குப் பிறகு, பேச்சில் கவனித்த பாராட்டத்தக்க ஒரு விஷயத்தை அவர் கூறுவார். ‘நன்றாயிருந்தது’ என்று வெறுமனே சொல்வது அவருடைய நோக்கமல்ல; மாறாக, பேச்சின் அந்த விஷயம் நன்றாயிருந்ததற்கான குறிப்பிட்ட காரணங்களைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரின் தேவைக்கும் ஏற்றவாறு உற்சாகப்படுத்தும் வகையில் கூடுதலான ஆலோசனைகளைக் கூட்டத்திற்குப் பிறகோ மற்றொரு சமயத்திலோ தனிப்பட்ட விதமாக கொடுக்கலாம்.

நேரம்: ஆலோசனை கூறுபவரின் குறிப்புகள் உட்பட எந்தப் பேச்சையும் நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும். பேச்சு நியமிப்பு எண்கள் 2, 3, 4-⁠க்குரிய நேரம் முடிந்ததும் சாதுரியத்துடன் அவற்றை நிறுத்த வேண்டும். பேச்சு பண்பு பற்றிய ஆரம்ப பேச்சு, நியமிப்பு எண் 1, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொடுக்கும் சகோதரர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். அனைவருமே குறித்த நேரத்தில் பேச்சை முடிப்பதற்குக் கவனமாயிருக்க வேண்டும். மொத்த நிகழ்ச்சி: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.

ஆலோசனை படிவம்: பாடப்புத்தகத்தில்.

துணை ஆலோசகர்: மற்றொரு தகுதி வாய்ந்த மூப்பர் இருந்தால், பள்ளிக் கண்காணியோடுகூட துணை ஆலோசகராக நியமிப்புகளைக் கையாள மூப்பர் குழு அவரைத் தெரிவு செய்யலாம். சபையில் மூப்பர்கள் நிறைய பேர் இருந்தால், இந்நியமிப்புக்கென தகுதி வாய்ந்த வெவ்வேறு மூப்பரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யலாம். நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்களுக்கு, தேவைப்பட்டால் தனிப்பட்ட ஆலோசனை கொடுப்பதே துணை ஆலோசகருடைய பொறுப்பு. சக மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பேச்சிற்குப் பிறகும் அவர் அப்படி ஆலோசனை கொடுக்க வேண்டியதில்லை.

தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மறுபார்வை: 30 நிமிடங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கண்காணி மறுபார்வையை நடத்துவார். அதற்கு முன்பு மேலே சொல்லப்பட்டபடி, பேச்சு பண்புபற்றிக் கலந்தாலோசிக்கப்படும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் சிந்திக்கப்படும். நடப்பு வாரம் உட்பட முந்தைய இரண்டு மாதங்கள் பள்ளியில் சிந்தித்தவை மறுபார்வையில் கலந்தாலோசிக்கப்படும். மறுபார்வையை நடத்த வேண்டிய வாரத்தில் உங்கள் சபை வட்டார மாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தால், மறுபார்வையை (அட்டவணைப்படி அந்த வாரத்தில் இருந்திருக்கும் பிற நியமிப்புகளுடன் சேர்த்து), மாநாட்டுக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்; மாநாட்டைத் தொடர்ந்து வருகிற வார அட்டவணையை மாநாட்டு வாரத்தில் பின்பற்ற வேண்டும். மறுபார்வையை நடத்த வேண்டிய வாரத்தில் உங்கள் சபைக்கு வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தால், அந்த வார அட்டவணைப்படியே பாட்டு, பேச்சு பண்பு, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். அதற்கடுத்த வார அட்டவணைப்படி போதனா பேச்சை (பேச்சு பண்பை கலந்தாலோசித்த பின் கொடுக்கப்படும் பேச்சை) கொடுக்க வேண்டும். வட்டாரக் கண்காணியின் சந்திப்புக்கு அடுத்து வரும் வாரத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், அந்த வார அட்டவணைப்படியே பேச்சு பண்புபற்றிக் கலந்தாலோசிக்கப்படும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் அளிக்கப்படும்; பின்பு முந்தைய வார மறுபார்வை கலந்தாலோசிக்கப்படும்.

அட்டவணை

ஜன. 7 பைபிள் வாசிப்பு: மத்தேயு 1-6 பாட்டு 62

பேச்சு பண்பு: தேவையான விளக்கங்களை கொடுங்கள் (be-TL பக். 228 பாரா. 2-3)

எண் 1: மத்தேயு​—⁠முன்னுரை (si-TL பக். 175-7 பாரா. 1–10)

எண் 2: மத்தேயு 5:1-20

எண் 3: மனிதர்கள் ஏன் மரிக்கிறார்கள்? (rs-TL பக். 98-9 பாரா 6)

எண் 4: கடவுளுடைய பரிசுத்த ஆவி நமக்கு உதவுகிற வழிகள்

ஜன. 14 பைபிள் வாசிப்பு: மத்தேயு 7-11 பாட்டு 224

பேச்சு பண்பு: இருதயம் எப்படி உட்படுகிறது (be-TL பக். 228 பாரா 4–பக். 229 பாரா 1)

எண் 1: கடவுளுடைய வார்த்தையில் இன்பம் காணுங்கள் (be-TL பக். 9 பாரா. 1-5)

எண் 2: மத்தேயு 10:1-23

எண் 3: நேர்மையால் நன்மை விளைவதற்குக் காரணம்

எண் 4: மரித்தோர் எங்கே இருக்கின்றனர், அவர்களுடைய நிலைமை என்ன? (rs-TL பக். 100 பாரா 1–பக். 101 பாரா 4)

ஜன. 21 பைபிள் வாசிப்பு: மத்தேயு 12-15 பாட்டு 133

பேச்சு பண்பு: தகவல் நிறைந்த பேச்சு (be-TL பக். 230 பாரா. 1-6)

எண் 1: தினந்தோறும் பைபிளை வாசியுங்கள் (be-TL பக். 10 பாரா 1–பக். 12 பாரா 3)

எண் 2: மத்தேயு 14:1-22

எண் 3: மரித்தோருக்காகத் துக்கங்கொண்டாடும் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் பங்குகொள்வதில்லை? (rs-TL பக். 102 பாரா 1–பக். 103 பாரா 2)

எண் 4: அந்திக்கிறிஸ்து​—⁠யார், எது?

ஜன. 28 பைபிள் வாசிப்பு: மத்தேயு 16-21 பாட்டு 176

பேச்சு பண்பு: ஆராய்ச்சி செய்வதன்மூலம் தகவல் நிறைந்த பேச்சைக் கொடுத்தல் (be-TL பக். 231 பாரா. 1-3)

எண் 1: ‘கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாக இருங்கள்’ (be-TL பக். 13 பாரா 1–பக். 14 பாரா 5)

எண் 2: மத்தேயு 17:1-20

எண் 3: மரணத்தைப் பற்றிய தவறான கருத்துகளுக்குப் பதில் அளித்தல் (rs-TL பக். 103 பாரா 3–பக். 104 பாரா 1)

எண் 4: கிறிஸ்தவர்கள் பரிசுத்தமாகக் கருதும் காரியங்கள்

பிப். 4 பைபிள் வாசிப்பு: மத்தேயு 22-25 பாட்டு 151

பேச்சு பண்பு: வசனங்களை விளக்குதல் (be-TL பக். 231 பாரா. 4–5)

எண் 1: கூட்டங்களிலும் அசெம்பிளிகளிலும் கவனித்துக் கேட்பது (be-TL பக். 15 பாரா 1–பக். 16 பாரா 5)

எண் 2: மத்தேயு 23:1-24

எண் 3: முடிவில்லா வாழ்வு சலிப்பூட்டாது

எண் 4: கனவுகள்​—⁠கடவுள் அருளியவையும் அருளாதவையும் (rs-TL பக். 104-6 பாரா 4)

பிப். 11 பைபிள் வாசிப்பு: மத்தேயு 26-28 பாட்டு 110

பேச்சு பண்பு: வார்த்தைகளின் அர்த்தத்தை விளக்குதல் (be-TL பக். 232 பாரா 1)

எண் 1: மத்தேயு​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 180-1 பாரா. 29–33)

எண் 2: மத்தேயு 27:1-22

எண் 3: விசுவாசம்​—⁠கடவுள் இருக்கிறார் என நம்புவதை மாத்திரம் ஏன் அர்த்தப்படுத்துவதில்லை

எண் 4: போதைப்பொருள்களை கிறிஸ்தவர்கள் பயன்படுத்துவது எப்போது தடைசெய்யப்படுகிறது (rs-TL பக். 106-8 பாரா 3)

பிப். 18 பைபிள் வாசிப்பு: மாற்கு 1-4 பாட்டு 167

பேச்சு பண்பு: வசனங்களை நியாயங்காட்டி விளக்குதல் (be-TL பக். 232 பாரா. 2–4)

எண் 1: மாற்கு​—⁠முன்னுரை (si-TL பக். 181-3 பாரா. 1–11)

எண் 2: மாற்கு 2:1-17

எண் 3: கிறிஸ்தவர்கள் ஏன் மரிஹுவானாவைத் தவிர்க்க வேண்டும் (rs-TL பக். 108 பாரா 4–பக். 109 பாரா 3)

எண் 4: அன்பு எப்படித் தைரியத்தைப் பலப்படுத்துகிறது

பிப். 25 பைபிள் வாசிப்பு: மாற்கு 5-8 பாட்டு 72

பேச்சு பண்பு: உங்கள் சபையாருக்கு பயனளிக்கும் தகவல்களைத் தேர்ந்தெடுத்தல் (be-TL பக். 233 பாரா. 1–5)

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

மார்ச் 3 பைபிள் வாசிப்பு: மாற்கு 9-12 பாட்டு 195

பேச்சு பண்பு: நியமிக்கப்பட்ட தகவலை பயன்படுத்துதல் (be-TL பக். 234 பாரா 1–பக். 235 பாரா 3)

எண் 1: உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம் (be-TL பக். 17 பாரா 1–பக். 19 பாரா 1)

எண் 2: மாற்கு 11:1-18

எண் 3: கடவுளால் ஏன் பொய் சொல்ல முடியாது

எண் 4: கிறிஸ்தவர்கள் ஏன் புகையிலை பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் (rs-TL பக். 110 பாரா 1–பக். 111 பாரா 4)

மார்ச் 10 பைபிள் வாசிப்பு: மாற்கு 13-16 பாட்டு 87

பேச்சு பண்பு: கேள்விகளைத் திறம்பட பயன்படுத்துதல் (be-TL பக். 236 பாரா. 1–5)

எண் 1: மாற்கு​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 186 பாரா. 31-3)

எண் 2: மாற்கு 14:1-21

எண் 3: கெட்ட பழக்கவழக்கங்களை எப்படி மேற்கொள்வது? (rs-TL பக். 111 பாரா 5–பக். 112 பாரா 3)

எண் 4: ஏன் ‘மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்க மாட்டாது’ (யாக். 1:20)

மார்ச் 17 பைபிள் வாசிப்பு: லூக்கா 1-3 பாட்டு 13

பேச்சு பண்பு: முக்கிய கருத்துக்களை அறிமுகப்படுத்துவதற்கு உதவும் கேள்விகள் (be-TL பக். 237 பாரா. 1–2)

எண் 1: லூக்கா​—⁠முன்னுரை (si-TL பக். 187-8 பாரா. 1-9)

எண் 2: லூக்கா 1:1-23

எண் 3: ஏன் ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாய்’ இருக்கிறது? (யாக். 2:20)

எண் 4: பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தை தேசங்கள் தடைசெய்ய முடியாது (rs-TL பக். 112–13 பாரா 6)

மார்ச் 24 பைபிள் வாசிப்பு: லூக்கா 4-6 பாட்டு 156

பேச்சு பண்பு: ஒரு பொருளில் நியாயங்காட்டி பேசுவதற்கு உதவும் கேள்விகள் (be-TL பக். 237 பாரா 3–பக். 238 பாரா 2)

எண் 1: ஞாபகம் வைக்க துணைபுரிவதில் கடவுளுடைய ஆவியின் பங்கு (be-TL பக். 19 பாரா 2–பக். 20 பாரா 3)

எண் 2: லூக்கா 4:1-21

எண் 3: யெகோவா பூமியை அக்கினியினால் அழிப்பாரா? (rs-TL பக். 114 பாரா 1–பக். 115 பாரா 1)

எண் 4: தேவபயம் பாவம் செய்யாதபடி நம்மைத் தடுக்கலாம்

மார்ச் 31 பைபிள் வாசிப்பு: லூக்கா 7-9 பாட்டு 122

பேச்சு பண்பு: உணர்ச்சிகளை வெளிக்கொணருவதற்கு உதவும் கேள்விகள் (be-TL பக். 238 பாரா. 3-5)

எண் 1: ஏன் சிரத்தையோடு வாசிக்க வேண்டும்? (be-TL பக். 21 பாரா 1–பக். 23 பாரா 3)

எண் 2: லூக்கா 7:1-17

எண் 3: கடவுள் நம்மை நேசிக்கிறார், நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென விரும்புகிறார் என்பதற்கான அத்தாட்சி

எண் 4: பொல்லாதவர்கள் அழிக்கப்பட்ட பின்பு புதிய எருசலேமின் அங்கத்தினர்கள் பூமிக்குத் திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள் (rs-TL பக். 115 பாரா 2–பக். 116 பாரா 1)

ஏப். 7 பைபிள் வாசிப்பு: லூக்கா 10-12 பாட்டு 68

பேச்சு பண்பு: வலியுறுத்துவதற்கு உதவும் கேள்விகள் (be-TL பக். 239 பாரா. 1–2)

எண் 1: எப்படிச் சிரத்தையோடு வாசிப்பது (be-TL பக். 23 பாரா 4–பக். 26 பாரா 4)

எண் 2: லூக்கா 11:37-54

எண் 3: பூமியைக் குறித்து கடவுளுடைய ஆதி நோக்கம் மாறிவிட்டதா? (rs-TL பக். 116 பாரா 2–பக். 117 பாரா 3)

எண் 4: வெளிப்படுத்துதல் 17:17-⁠ஐ நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?

ஏப். 14 பைபிள் வாசிப்பு: லூக்கா 13-17 பாட்டு 86

பேச்சு பண்பு: தவறான எண்ணத்தை அம்பலப்படுத்துவதற்கு உதவும் கேள்விகள் (be-TL பக். 239 பாரா. 3–5)

எண் 1: எப்படிப் படிப்பது (be-TL பக். 27 பாரா 1–பக். 31 பாரா 2)

எண் 2: லூக்கா 16:1-15

எண் 3: கதிர் பொறுக்குதல் பற்றிய கடவுளுடைய சட்டம் நமக்கு என்ன கற்பிக்கிறது (லேவி. 19:9, 10)

எண் 4: நோய்வாய்ப்பட்டவர்களை நாம் எப்படி ஊக்கமூட்டலாம்? (rs-TL பக். 117-18 பாரா 3)

ஏப். 21 பைபிள் வாசிப்பு: லூக்கா 18-21 பாட்டு 182

பேச்சு பண்பு: படிப்பினையூட்டும் ஒப்புமைகளும் உருவகங்களும் (be-TL பக். 240 பாரா 1–பக். 241 பாரா 1)

எண் 1: லூக்கா​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 192-3 பாரா. 30-5)

எண் 2: லூக்கா 18:1-17

எண் 3: துக்கிப்போருக்கு நாம் எப்படி ஊக்கமூட்டலாம் (rs-TL பக். 118 பாரா. 4-8)

எண் 4: ‘முறுமுறுப்பதை’ தவிர்ப்பது எதை அர்த்தப்படுத்துகிறது (பிலி. 2:16)

ஏப். 28 பைபிள் வாசிப்பு: லூக்கா 22-24 பாட்டு 218

பேச்சு பண்பு: உதாரணங்களைப் பயன்படுத்துங்கள் (be-TL பக். 241 பாரா. 2-4)

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

மே 5 பைபிள் வாசிப்பு: யோவான் 1-4 பாட்டு 31

பேச்சு பண்பு: பைபிளிலுள்ள உதாரணங்கள் (be-TL பக். 242 பாரா. 1-2)

எண் 1: யோவான்​—⁠முன்னுரை (si-TL பக். 193-5 பாரா. 1–9)

எண் 2: யோவான் 3:1-21

எண் 3: சவுல் ராஜாவை கொல்ல தாவீது மறுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்

எண் 4: கடவுளுடைய சித்தத்தைச் செய்வதனால் துன்புறுத்தலை அனுபவிப்பவர்களுக்கு ஊக்கமளித்தல் (rs-TL பக். 119 பாரா. 1-6)

மே 12 பைபிள் வாசிப்பு: யோவான் 5-7 பாட்டு 150

பேச்சு பண்பு: அதை புரிந்துகொள்வார்களா? (be-TL பக். 242 பாரா 3–பக். 243 பாரா 1)

எண் 1: படிப்பு பலன் தரும் (be-TL பக். 31 பாரா 3–பக். 32 பாரா 4)

எண் 2: யோவான் 6:1-21

எண் 3: அனனியா, சப்பீராள் பற்றிய பதிவு நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கிறது

எண் 4: அநீதியினிமித்தம் மனமுறிவுற்றிருப்போருக்கு நீங்கள் எப்படி ஊக்கமூட்டலாம்? (rs-TL பக். 119 பாரா 7–பக். 120 பாரா 2)

மே 19 பைபிள் வாசிப்பு: யோவான் 8-11 பாட்டு 102

பேச்சு பண்பு: பழக்கமான சூழ்நிலைகளிலிருந்து உவமைகள் (be-TL பக். 244 பாரா. 1–2)

எண் 1: பைபிளில் ஆராய்ச்சி செய்வது எப்படி (be-TL பக். 33 பாரா 1–பக். 35 பாரா 2)

எண் 2: யோவான் 11:38-57

எண் 3: பொருளாதாரப் பிரச்சினைகளால் கடும் நெருக்கடியிலிருப்போருக்கு எப்படி ஊக்கமூட்டலாம்? (rs-TL பக். 120 பாரா. 3–7)

எண் 4: பத்தாவது கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்களைத் தண்டிக்க முடியாதிருக்கையில் இந்தக் கட்டளை ஏன் கொடுக்கப்பட்டது?

மே 26 பைபிள் வாசிப்பு: யோவான் 12-16 பாட்டு 3

பேச்சு பண்பு: உங்கள் சபையாருக்குப் பொருத்தமான உவமைகள் (be-TL பக். 244 பாரா 3–பக். 245 பாரா 4)

எண் 1: ஆராய்ச்சிக்கான மற்ற சாதனங்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல் (be-TL பக். 35 பாரா 3–பக். 38 பாரா 4)

எண் 2: யோவான் 12:1-19

எண் 3: குற்றங்களினிமித்தம் சோர்வுற்றிருப்போருக்கு ஊக்கமூட்டுதல் (rs-TL பக். 120 பாரா 8–பக். 121 பாரா 2)

எண் 4: யெகோவாமீது நம் பாரத்தை எப்படிப் போட்டுவிட முடியும் (சங். 55:22)

ஜூன் 2 பைபிள் வாசிப்பு: யோவான் 17-21 பாட்டு 198

பேச்சு பண்பு: காணக்கூடிய உபகரணங்களைத் திறம்பட பயன்படுத்துதல் (be-TL பக். 247 பாரா. 1-2)

எண் 1: யோவான்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 198-9 பாரா. 30–5)

எண் 2: யோவான் 21:1-14

எண் 3: நம்மால் பார்க்க முடியாத கடவுளை ஏன் நம்ப வேண்டும்?

எண் 4: பரிணாமம்​—⁠விஞ்ஞானிகளின் மத்தியில் குழப்பம் (rs-TL பக். 121–2 பாரா 5)

ஜூன் 9 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 1-4 பாட்டு 92

பேச்சு பண்பு: காணக்கூடிய உபகரணங்களை இயேசு எவ்வாறு பயன்படுத்தினார் (be-TL பக். 247 பாரா 3)

எண் 1: அப்போஸ்தலர்​—⁠முன்னுரை (si-TL பக். 199-200 பாரா. 1-8)

எண் 2: அப்போஸ்தலர் 1:1-14

எண் 3: பரிணாமம், புதைபடிவ பதிவு, பகுத்தறிவு (rs-TL பக். 123 பாரா 1–பக். 126 பாரா 2)

எண் 4: தயக்கமின்றி, தைரியமாகப் பேசுவது எதை உட்படுத்துகிறது? (எபி. 3:6)

ஜூன் 16 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 5-7 பாட்டு 2

பேச்சு பண்பு: காணக்கூடிய உபகரணங்களைப் பயன்படுத்தும் வழிகள் (be-TL பக். 248 பாரா. 1–3)

எண் 1: குறிப்புத்தாளை தயாரித்தல் (be-TL பக். 39–42)

எண் 2: அப்போஸ்தலர் 5:1-16

எண் 3: பரிணாமவாதிகள் வலியுறுத்தும் கருத்துகளுக்குப் பதில் அளித்தல் (rs-TL பக். 126 பாரா 3–பக். 128 பாரா 3)

எண் 4: ஏன் யெகோவாவுக்குப் பயப்படுவது ஞானத்தின் ஆரம்பமாக இருக்கிறது? (சங். 111:10)

ஜூன் 23 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 8-10 பாட்டு 116

பேச்சு பண்பு: வரைபடங்களையும் மாநாட்டு நிகழ்ச்சிநிரல்களையும் வீடியோக்களையும் பயன்படுத்துதல் (be-TL பக். 248 பாரா 4–பக். 249 பாரா 2)

எண் 1: மாணாக்கர் பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 43 பாரா 1–பக். 44 பாரா 3)

எண் 2: அப்போஸ்தலர் 8:1-17

எண் 3: இயேசு எவ்வாறு ‘எளியவனை . . . விடுவிப்பார்’ (சங். 72:12)

எண் 4: ஏன் பலருக்கு விசுவாசமில்லை (rs-TL பக். 129–30 பாரா 2)

ஜூன் 30 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 11-14 பாட்டு 79

பேச்சு பண்பு: காணக்கூடிய உபகரணங்களைப் பெரும் கூட்டத்தாருக்குப் பயன்படுத்துதல் (be-TL பக். 249 பாரா 3–பக். 250 பாரா 1)

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

ஜூலை 7 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 15-17 பாட்டு 203

பேச்சு பண்பு: நியாயங்காட்டிப் பேசும் விதம் ஏன் முக்கியம் (be-TL பக். 251 பாரா. 1–3)

எண் 1: பேச்சுப் பொருளும் பேச்சு அமைப்பும் (be-TL பக். 44 பாரா 4–பக். 46 பாரா 2)

எண் 2: அப்போஸ்தலர் 16:1–15

எண் 3: பயமின்றி யெகோவாவை சேவிப்பதற்கான காரணங்கள்

எண் 4: ஒருவர் விசுவாசத்தை அடைவது எவ்வாறு? (rs-TL பக். 130 பாரா 3–பக். 131 பாரா 3)

ஜூலை 14 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 18-21 பாட்டு 32

பேச்சு பண்பு: எங்கே ஆரம்பிப்பது (be-TL பக். 251 பாரா 4–பக். 252 பாரா 3)

எண் 1: சபை பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 47 பாரா 1–பக். 49 பாரா 2)

எண் 2: அப்போஸ்தலர் 20:1–16

எண் 3: நீதியுள்ள ஒரு புதிய காரிய ஒழுங்குமுறையின் எதிர்பார்ப்பில் விசுவாசம் இருப்பது செயல்களில் வெளிப்படுகிறது (rs-TL பக். 131 பாரா 5–பக். 132 பாரா 2)

எண் 4: யாத்திராகமம் 23:19ஆ-விலுள்ள கட்டளையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

ஜூலை 21 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 22-25 பாட்டு 200

பேச்சு பண்பு: எப்பொழுது இணங்கிப்போவது (be-TL பக். 252 பாரா 4–பக். 253 பாரா 2)

எண் 1: ஊழியக் கூட்டப் பகுதிகளுக்கும் மற்ற பேச்சுகளுக்கும் தயாரித்தல் (be-TL பக். 49 பாரா 3–பக். 51 பாரா 3)

எண் 2: அப்போஸ்தலர் 22:1–16

எண் 3: யோவான் 13:34, 35-ஐ எந்தெந்த வழிகளில் யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றுகிறார்கள்?

எண் 4: கள்ளத் தீர்க்கதரிசிகளை அடையாளங்கண்டுபிடிப்பது எவ்வாறு? (rs-TL பக். 132–4 பாரா 3)

ஜூலை 28 பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 26-28 பாட்டு 29

பேச்சு பண்பு: கேள்விகள் கேளுங்கள், காரணம் காட்டுங்கள் (be-TL பக். 253 பாரா 3–பக். 254 பாரா 2)

எண் 1: அப்போஸ்தலர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 204-5 பாரா. 32–40)

எண் 2: அப்போஸ்தலர் 26:1–18

எண் 3: முன்னறிவிக்கப்பட்டவை எப்படி, எப்பொழுது நிறைவேறும் என்பதை உண்மையான தீர்க்கதரிசிகள் எல்லா சமயத்திலும் அறிந்திருக்கவில்லை (rs-TL பக். 134 பாரா. 4–9)

எண் 4: யெகோவா ஏன் பொறுமையாக இருக்கிறார்

ஆக. 4 பைபிள் வாசிப்பு: ரோமர் 1-4 பாட்டு 170

பேச்சு பண்பு: கடவுளுடைய வார்த்தையை உறுதியான ஆதாரமாக கொண்ட நியாயமான காரணங்கள் (be-TL பக். 255 பாரா 1–பக். 256 பாரா 3)

எண் 1: ரோமர்​—⁠முன்னுரை (si-TL பக். 205-6 பாரா. 1–7)

எண் 2: ரோமர் 3:1–20

எண் 3: கடவுளுடைய ஊழியர்களை தேவதூதர்கள் எவ்வாறு பலப்படுத்தி, பாதுகாக்கிறார்கள்

எண் 4: யெகோவாவின் சாட்சிகள் உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்கள் (rs-TL பக். 135 பாரா. 1–2)

ஆக. 11 பைபிள் வாசிப்பு: ரோமர் 5-8 பாட்டு 207

பேச்சு பண்பு: ஆதாரமளிக்கும் மற்ற சான்றுகளை உபயோகித்து நியாயமான காரணங்களை அளியுங்கள் (be-TL பக். 256 பாரா. 4-6)

எண் 1: பொதுப் பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 52 பாரா 1–பக். 54 பாரா 1)

எண் 2: ரோமர் 6:1–20

எண் 3: தங்கள் கனிகளால் யெகோவாவின் சாட்சிகள் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள் (rs-TL பக். 135 பாரா 3–பக். 137 பாரா 1)

எண் 4: நியாயம் நம்மை எவ்வாறு பாதுகாக்கும்

ஆக. 18 பைபிள் வாசிப்பு: ரோமர் 9-12 பாட்டு 152

பேச்சு பண்பு: போதுமான அத்தாட்சிகளை அளித்தல் (be-TL பக். 257 பாரா. 1–4)

எண் 1: ரோமர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 209 பாரா. 20–5)

எண் 2: ரோமர் 9:1–18

எண் 3: கிசுகிசுப்பதாலும் வதந்திகளைப் பரப்புவதாலும் என்னென்ன ஆபத்துக்கள் வரும்?

எண் 4: நம்மை பொய்த் தீர்க்கதரிசிகள் என அழைப்பவர்களுக்குப் பதில் அளித்தல் (rs-TL பக். 137 பாரா. 2–4)

ஆக. 25 பைபிள் வாசிப்பு: ரோமர் 13-16 பாட்டு 16

பேச்சு பண்பு: இருதயத்தை எட்ட முயலுதல் (be-TL பக். 258 பாரா. 1–5)

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

செப். 1 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 1-9 பாட்டு 199

பேச்சு பண்பு: மக்களின் இருதயத்தில் இருப்பதை வெளிக்கொணர்தல் (be-TL பக். 259 பாரா. 1–3)

எண் 1: 1 கொரிந்தியர்​—⁠முன்னுரை (si-TL பக். 210-11 பாரா. 1-7)

எண் 2: 1 கொரிந்தியர் 4:1–17

எண் 3: ஒவ்வொருவரும் எப்போது இறக்க வேண்டுமென ஒரு காலத்தை கடவுள் முன்தீர்மானிக்கவில்லை (rs-TL பக். 138 பாரா. 1–3)

எண் 4: பொருள் செல்வங்கள் கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு அடையாளமா?

செப். 8 பைபிள் வாசிப்பு: 1 கொரிந்தியர் 10-16 பாட்டு 35

பேச்சு பண்பு: பயன்தரும் உணர்ச்சிகளைத் தூண்டியெழுப்புதல் (be-TL பக். 259 பாரா 4–பக். 260 பாரா 1)

எண் 1: 1 கொரிந்தியர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 213-14 பாரா. 23-6)

எண் 2: 1 கொரிந்தியர் 13:1–14:6

எண் 3: திருவசனத்தின்படி செய்கிறவர்கள் ஏன் சந்தோஷமுள்ளவர்கள்

எண் 4: நடக்கும் ஒவ்வொன்றும் கடவுளுடைய சித்தத்தின்படி அல்ல (rs-TL பக். 139 பாரா 1–பக். 140 பாரா 4)

செப். 15 பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 1-7 பாட்டு 58

பேச்சு பண்பு: தேவபயத்தை வளர்த்துக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுதல் (be-TL பக். 260 பாரா. 2-3)

எண் 1: 2 கொரிந்தியர்​—⁠முன்னுரை (si-TL பக். 214 பாரா. 1-4)

எண் 2: 2 கொரிந்தியர் 1:1–14

எண் 3: எல்லாவற்றையும் கடவுள் முன்னறிந்து முன்குறித்து வைப்பதில்லை (rs-TL பக். 140 பாரா. 5–7)

எண் 4: துன்புறுத்தப்படும்போது உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் சந்தோஷப்படுகிறார்கள்

செப். 22 பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 8-13 பாட்டு 12

பேச்சு பண்பு: நம் நடத்தை கடவுளுக்கு மிகவும் முக்கியம் (be-TL பக். 260 பாரா 4–பக். 261 பாரா 1)

எண் 1: 2 கொரிந்தியர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 216-17 பாரா. 18-20)

எண் 2: 2 கொரிந்தியர் 9:1–15

எண் 3: உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் இந்த உலகத்தின் பாகமாக இல்லை

எண் 4: நிகழ்ச்சிகளை முன்னறியவும் முன்குறித்து வைக்கவும் கடவுளுக்கு இருக்கும் திறமை (rs-TL பக். 141 பாரா. 1-4)

செப். 29 பைபிள் வாசிப்பு: கலாத்தியர் 1-6 பாட்டு 163

பேச்சு பண்பு: பரிசோதிக்க பிறருக்கு உதவுதல் (be-TL பக். 261 பாரா. 2-4)

எண் 1: கலாத்தியர்​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 217-20 பாரா. 1-6, 14-18)

எண் 2: கலாத்தியர் 1:1–17

எண் 3: ஆதாமுடைய விஷயத்தில் தம்முடைய முன்னறியும் திறனை கடவுள் ஏன் பயன்படுத்தவில்லை (rs-TL பக். 142 பாரா. 1-3)

எண் 4: மனித பயத்தை அன்பு எவ்வாறு வெல்லலாம்

அக். 6 பைபிள் வாசிப்பு: எபேசியர் 1-6 பாட்டு 99

பேச்சு பண்பு: இருதயப்பூர்வமான கீழ்ப்படிதலை வளர்த்தல் (be-TL பக். 261 பாரா 5–பக். 262 பாரா 3)

எண் 1: எபேசியர்​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 220-3 பாரா. 1-8, 16-19)

எண் 2: எபேசியர் 3:1–19

எண் 3: மன்னிப்பு கேட்பது பலவீனத்தின் அடையாளமல்ல

எண் 4: யாக்கோபுக்கு, ஏசாவுக்கு அல்லது யூதாஸுக்கு கடவுள் விதியை முன்முடிவு செய்யவில்லை (rs-TL பக். 142 பாரா 4–பக். 143 பாரா 2)

அக். 13 பைபிள் வாசிப்பு: பிலிப்பியர் 1–கொலோசெயர் 4 பாட்டு 123

பேச்சு பண்பு: ஜனங்களின் இருதயங்களை எட்டுவதற்கு யெகோவாவுடன் ஒத்துழைத்தல் (be-TL பக். 262 பாரா 4)

எண் 1: பிலிப்பியர்​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 223-5 பாரா. 1-7, 12-14)

எண் 2: பிலிப்பியர் 3:1–16

எண் 3: எந்த விதத்தில் கிறிஸ்தவ சபை முன்விதிக்கப்பட்டது? (rs-TL பக். 143 பாரா 3–பக். 144 பாரா 1)

எண் 4: b கொலோசெயர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 228 பாரா. 12-14)

அக். 20 பைபிள் வாசிப்பு: 1 தெசலோனிக்கேயர் 1–2 தெசலோனிக்கேயர் 3 பாட்டு 161

பேச்சு பண்பு: ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்தல் (be-TL பக். 263 பாரா 1–பக். 264 பாரா 4)

எண் 1: 1, 2 தெசலோனிக்கேயர்​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 229-31 பாரா. 1-5, 13-15; பக். 232-3 பாரா. 1-4, 10-11)

எண் 2: 1 தெசலோனிக்கேயர் 1:1–2:8

எண் 3: வான்கணிப்பைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (rs-TL பக். 144 பாரா 2–பக். 145 பாரா 2)

எண் 4: c 1, 2 தீமோத்தேயு​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 236-7 பாரா. 15-19; பக். 238-9 பாரா. 10-12)

அக். 27 பைபிள் வாசிப்பு: 1 தீமோத்தேயு 1–2 தீமோத்தேயு 4 பாட்டு 69

பேச்சு பண்பு: திறம்பட அறிவுறுத்துதல் (be-TL பக். 265 பாரா 1–பக். 262 பாரா 1)

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

நவ. 3 பைபிள் வாசிப்பு: தீத்து 1–பிலேமோன் பாட்டு 149

பேச்சு பண்பு: அன்பினிமித்தம் அறிவுறுத்துதல் (be-TL பக். 266 பாரா. 2-5)

எண் 1: தீத்து​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 239-41 பாரா. 1-4, 8-10)

எண் 2: தீத்து 1:1-16

எண் 3: கடவுளில் நம்பிக்கை வைப்பதற்கு சில நல்ல காரணங்கள் யாவை? (rs-TL பக். 145-6 பாரா 5)

எண் 4: d பிலேமோன்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 242-3 பாரா. 7-10)

நவ. 10 பைபிள் வாசிப்பு: எபிரெயர் 1-8 பாட்டு 144

பேச்சு பண்பு: கடவுளுடைய வார்த்தையை ஆதாரமாக வைத்து அறிவுரை வழங்குதல் (be-TL பக். 267 பாரா. 1–2)

எண் 1: எபிரெயர்​—⁠முன்னுரை (si-TL பக். 243-4 பாரா. 1-9)

எண் 2: எபிரெயர் 3:1-19

எண் 3: அக்கிரமமும் துன்பமும் இருப்பது கடவுள் இல்லையென்று நிரூபிப்பதில்லை (rs-TL பக். 146 பாரா 6–பக். 147 பாரா 1)

எண் 4: உண்மையான மனத்தாழ்மைக்கும் பொய்யான மனத்தாழ்மைக்கும் உள்ள வித்தியாசங்கள்

நவ. 17 பைபிள் வாசிப்பு: எபிரெயர் 9-13 பாட்டு 28

பேச்சு பண்பு: துணிவோடு பேசுதல் (be-TL பக். 267 பாரா. 3-4)

எண் 1: எபிரெயர்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 247 பாரா. 23-7)

எண் 2: எபிரெயர் 10:1-17

எண் 3: கடவுள் உணர்ச்சிகள் உடைய உண்மையான ஓர் ஆளா? (rs-TL பக். 147 பாரா 2–பக். 148 பாரா 3)

எண் 4: மன்னிப்பது எவ்வாறு ஒற்றுமைக்குப் பங்களிக்கிறது

நவ. 24 பைபிள் வாசிப்பு: யாக்கோபு 1–5 பாட்டு 88

பேச்சு பண்பு: உற்சாகப்படுத்துவது ஏன் முக்கியம் (be-TL பக். 268 பாரா. 1-3)

எண் 1: யாக்கோபு​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 248-50 பாரா. 1-7, 15-17)

எண் 2: யாக்கோபு 1:1-21

எண் 3: கடவுளுக்கு ஒரு தொடக்கம் இல்லை (rs-TL பக். 148 பாரா. 4-7)

எண் 4: எவ்வாறு “நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” (யாக். 2:13)

டிச. 1 பைபிள் வாசிப்பு: 1 பேதுரு 1–2 பேதுரு 3 பாட்டு 18

பேச்சு பண்பு: யெகோவா செய்தவற்றை நினைப்பூட்டுங்கள் (be-TL பக். 268 பாரா 4–பக். 269 பாரா 1)

எண் 1: 1 பேதுரு​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 251-3 பாரா. 1-5, 11-13)

எண் 2: 1 பேதுரு 2:1-17

எண் 3: இரட்சிப்படைய கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது முக்கியம் (rs-TL பக். 149 பாரா. 1-4)

எண் 4: e 2 பேதுரு​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 255 பாரா. 8-10)

டிச. 8 பைபிள் வாசிப்பு: 1 யோவான் 1–யூதா பாட்டு 50

பேச்சு பண்பு: தமது மக்களுக்கு யெகோவா உதவிய விதத்தைக் காட்டுதல் (be-TL பக். 269 பாரா. 2-4)

எண் 1: 1, 2, மற்றும் 3 யோவான்​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 256-8 பாரா. 1-5, 11-13; பக். 259 பாரா. 1-3, 5; பக். 260-1 பாரா. 1-3, 5)

எண் 2: 1 யோவான் 4:1-16

எண் 3: எல்லா மதங்களும் சரியானவையா? (rs-TL பக். 149 பாரா. 5-8)

எண் 4: f யூதா​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 262-3 பாரா. 8-10)

டிச. 15 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 1–6 பாட்டு 219

பேச்சு பண்பு: கடவுள் தற்பொழுது செய்கிறவற்றில் மகிழ்ச்சியை காட்டுதல் (be-TL பக். 270 பாரா 1–பக். 271 பாரா 2)

எண் 1: வெளிப்படுத்துதல்​—⁠முன்னுரை (si-TL பக். 263-4 பாரா. 1-6)

எண் 2: வெளிப்படுத்துதல் 3:1-13

எண் 3: இயேசு என்ன வகையான “கடவுள்”? (rs-TL பக். 149 பாரா 9–பக். 150 பாரா 1)

எண் 4: ஏன் பொறுமையாக இருப்பதற்கும் இரக்கம்காட்டுவதற்கும் ஓர் எல்லை இருக்கிறது

டிச. 22 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 7-14 பாட்டு 21

பேச்சு பண்பு: தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள் (be-TL பக். 5 பாரா 1–பக். 8 பாரா 1)

எண் 1: வெளிப்படுத்துதல்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 268-9 பாரா. 28-34)

எண் 2: வெளிப்படுத்துதல் 8:1-13

எண் 3: கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கருத்துவேறுபாடுகளுக்குப் பதில் அளித்தல் (rs-TL பக். 150 பாரா 2–பக். 151 பாரா 3)

எண் 4: ‘தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருக்கிறார்’ என்ற சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது? (1 யோ. 3:20)

டிச. 29 பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 15-22 பாட்டு 60

பேச்சு பண்பு: திருத்தமாக வாசித்தல் (be-TL பக். 83 பாரா 1–பக். 84 பாரா 1)

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

[அடிக்குறிப்புகள்]

a சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

b சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

c சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

d சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

e சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

f சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்