ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
நவம்பர் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி, நவம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் நவம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரேவொரு பத்திரிகையைக் காட்டி பேசினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதுபோல் ஒவ்வொரு நடிப்பும் இருக்க வேண்டும்.
15 நிமி: “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது.” 2007, நவம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 17-21-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: “ஞானமுள்ளவர்களாய் நடவுங்கள்.”a நேரமிருந்தால், கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின்பேரில் பதில் அளிக்கும்படி சபையாரிடம் கேளுங்கள்.
நவம்பர் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள், ஓர் அணுகுமுறையை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “பைபிள் படிப்பு நடத்த தயங்காதீர்கள்!”b பாரா 5-ஐச் சிந்திக்கும்போது, பைபிள் படிப்புமூலம் மற்றவர்களை சத்தியத்திற்கு வழிநடத்திய சகோதர சகோதரிகளின் கருத்தைக் கேளுங்கள். பைபிள் படிப்பவர் முன்னேற்றம் செய்கிற விதத்தில் படிப்புகளை நடத்துவது எப்படிப் பலனையும் சந்தோஷத்தையும் அள்ளித்தருகிறது? இதற்குப் பதில் அளிக்க ஓரிருவரை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள்.
நவம்பர் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். நவம்பர் மாத வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி, டிசம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் டிசம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
15 நிமி: அன்பின் கதவைத் திறப்பீர்களா? 2007, ஜனவரி 1, காவற்கோபுரம், பக்கங்கள் 9-11-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: இளம் பிள்ளைகளே—நீங்கள் யெகோவாவை எப்படித் துதிக்கலாம்? 2005, ஜூன் 15, காவற்கோபுரம், பக்கங்கள் 26-8, பாராக்கள் 15-19-ஐ படிப்புக் கட்டுரையிலுள்ள கேள்விகளைப் பயன்படுத்தி கலந்தாலோசியுங்கள். பாரா 18-ஐ சிந்திக்கையில், சக மாணவர்களுக்கோ ஆசிரியர்களுக்கோ பள்ளியில் சாட்சி கொடுத்தபோது கிடைத்த அனுபவத்தைச் சொல்லும்படி பிள்ளைகளிடம் கேளுங்கள்.
டிசம்பர் 3-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். கேள்விப் பெட்டியைச் சிந்தியுங்கள்.
15 நிமி: உலகளாவிய மக்களுக்கு உதவ பட்டதாரிகளை உருவாக்கும் ஒரு பள்ளி. 2006, நவம்பர் 15, காவற்கோபுரம், பக்கங்கள் 10-13-ன் அடிப்படையில் பேச்சு. ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்ட மூப்பர்களையோ உதவி ஊழியர்களையோ சுருக்கமாய் பேட்டி காணுங்கள். சுவிசேஷகர்களாக, மேய்ப்பர்களாக, போதகர்களாக ஆவதற்கு இந்தப் பள்ளி எப்படி அவர்களுக்கு உதவியது? ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொள்வதற்கு இலக்கு வைக்கும்படி, தகுதிபெற்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துங்கள்.
15 நிமி: “ராஜ்ய நம்பிக்கையை அறிவிக்கிறோம்.”c நேரமிருந்தால், கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின்பேரில் பதில் அளிக்கும்படி சபையாரிடம் கேளுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.