ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 11-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 12-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஜனவரி-மார்ச் தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஜனவரி-மார்ச் தேதியிட்ட விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “நமது பிராந்தியத்தில் பாத்திரமானவர்களைக் கண்டுபிடித்தல்.”a மூன்றாவது பாராவைக் கலந்தாலோசித்த பிறகு, சுருக்கமான ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரு பிரஸ்தாபி, ஊழியத்தில் சந்திப்பவரிடம் பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசி, ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்து, பின்னர் ஒரு வசனத்தை எடுத்துக்காட்டிப் பேசுவதுபோல் அந்த நடிப்பு இருக்கட்டும்.
22 நிமி: “‘நற்செய்தியை முழுமையாக அறிவியுங்கள்.’”’b (பாரா. 1-10) இந்தப் பகுதியை ஊழியக் கண்காணி நடத்துவார். எக்கச்சக்கமான வேலையை அல்லது உடல்நலக் குறைபாட்டைப் பொருட்படுத்தாமல் கடந்த ஆண்டிற்குள் துணைப் பயனியர் சேவை செய்த ஒரு பிரஸ்தாபியை அல்லது இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். அவர்களால் எப்படிச் செய்ய முடிந்தது? இதனால் என்னென்ன சந்தோஷங்களை அனுபவித்தார்கள்? பாரா 7-ஐக் கலந்தாலோசிக்கையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள்.
பிப்ரவரி 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள்.
15 நிமி: சபைத் தேவைகள்.
20 நிமி: “‘நற்செய்தியை முழுமையாக அறிவியுங்கள்.’’c (பாரா. 11-17) நினைவுநாள் ஆசரிப்புக்கான விசேஷ அழைப்பிதழ்கள் தயாராகியிருந்தால், 14-வது பாராவைக் கலந்தாலோசிக்கும்போது சபையார் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதியைக் கொடுங்கள். பிராந்தியத்தில் அவற்றை வினியோகிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஊழிய ஏற்பாடுகளைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள்.
பிப்ரவரி 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாத ஊழிய அறிக்கைகளைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டது சம்பந்தமான கடிதங்களையும் வாசியுங்கள். நினைவுநாள் ஆசரிப்பு அழைப்பிதழைப் பயன்படுத்திக் குடும்ப அங்கத்தினர் ஒருவரை அல்லது வீட்டிற்குப் பக்கத்தில் வசிப்பவரை அழைக்கும் விதத்தை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “மீட்கும்பொருளை நன்றியோடு நினைவுகூருதல்.”d நேரம் இருப்பதைப் பொறுத்து, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் முடிந்தளவு அதிகமானவற்றுக்கு குறிப்புகள் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
15 நிமி: ஊழியர்களாக முன்னேற புதியவர்களுக்கு உதவுங்கள். ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திற்குள் முன்னுரையைக் கொடுத்தபின், படிப்புக் கேள்விகளைப் பயன்படுத்தி, டிசம்பர் 1, 2005 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கம் 31-ல் உள்ள பாராக்களைக் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பாக நடத்துங்கள். 18-வது பாராவைக் கலந்தாலோசித்த பிறகு, ஒரு நடிப்பைச் செய்துகாட்ட ஏற்பாடு செய்யுங்கள். அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபியோடு சேர்ந்து ஊழியம் செய்கிற புதிய பிரஸ்தாபி, எதிர்ப்புத் தெரிவிக்கிற ஒரு வீட்டுக்காரரைச் சந்திக்கிறார். புதிய பிரஸ்தாபிக்குச் சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியவில்லை. இதனால் மேற்கொண்டு பேசமுடியாதபடி வீட்டுக்காரர் உரையாடலை நிறுத்திவிடுகிறார். அந்த வீட்டைவிட்டு வெளியே வந்தபின், அவர் செய்த முயற்சியை அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி பாராட்டுகிறார். பின்பு, இதுபோன்று உரையாடலை நிறுத்தும் எதிர்ப்பை வருங்காலத்தில் சந்திக்கையில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்தி எப்படிப் பதிலளிக்கலாம் என்று காட்டுகிறார்.
மார்ச் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “நினைவுநாள் ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பெட்டியிலிருந்து முக்கியக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ய முடியுமா? ஜூலை 15, 2003 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கம் 20-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 111 பாரா 1-லிருந்து பக்கம் 112 பாரா 1 வரையுள்ள விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவை அதிகமுள்ள இடத்திற்கு மாறிச் சென்றிருப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்களைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். என்னென்ன பிரச்சினைகளை அவர்கள் எதிர்ப்பட்டார்கள், அவற்றையெல்லாம் எப்படிச் சமாளித்தார்கள், இதனால் என்ன நன்மைகளைப் பெற்றார்கள் எனக் கேளுங்கள். இந்த நாட்டில், தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ய மனமுள்ளவர்களும், அதற்குத் தகுதிவாய்ந்தவர்களுமான பிரஸ்தாபிகள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். எனவே, இவ்விஷயத்தைக் குறித்து ஜெபத்துடன் சிந்தித்துப் பார்க்கும்படி சகோதரர்களை ஊக்கப்படுத்துங்கள். ஜூலை 2007, நம் ராஜ்ய ஊழிய இதழில், அறிவிப்புப் பகுதியைக் காண்க.
20 நிமி: “பலமான விசுவாசத்திற்கு அத்தாட்சி!”e ஊழியக் கண்காணி நடத்துவார். கடந்த ஊழிய ஆண்டில் ஊழியத்தில் சபை சாதித்துள்ள மெச்சத்தக்க அம்சத்தைச் சொல்லி நிறைவுசெய்யுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.